Page 1 of 1

EUR/USD:கரடி பிடிக்குள் சென்ற புள்ளியினை மீட்டெடுத்த காளை

Posted: Tue Apr 30, 2013 7:13 pm
by ஆதித்தன்
Image
காலை முதலே ஏறுமுகத்துடன் காணப்பட்ட EUR/USD கரன்சி, ஐரோப்பாவின் பின் பாதி டேட்டாவின் நெகட்டிவினால் கரடியின் பிடிக்குள் சிக்கிக் கொண்டது... அதனை, அமெரிக்க வர்த்தகத்தின் முதல் கட்ட வர்த்தகத்தின் பொழுது வெளியான நெகட்டிவ் டேட்டா மூலம் காளை வசம் திரும்பவும் வந்திருக்கிறது.

இன்றைய வர்த்தகத்தின் பொழுது ஹை ரெசிஸ்டன்ஸ் பாயின்ட் > 1.3142 ++ , லோ பாட்டம் பாயிண்ட் , 1.3059 ஆகக் கொண்டு வர்த்தக ஏற்ற இறக்கம் இதுவரை நடந்துள்ளது.


காளையின் ஆதிக்கம் முழுமையாக இடம் பெற்றுவிட்டதால்... தொடர்ந்து வரும் நாட்களும் ஏற்றமாக இருக்கும் என நம்புவதுடன், புதிய ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாக 1.3331 என்றப் புள்ளியினையும், சப்போர்ட் லைனாக 1.3203 என்றப் புள்ளியினையும் இந்த வார இறுதியில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.