30/April Order Signal - காளை மீது பயணிக்கிறது EUR/USD

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

30/April Order Signal - காளை மீது பயணிக்கிறது EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 2:15 am

Image
கரடி முகமாக? காளை முகமா? என்ற கேள்விக்கு முழுமையான விடை கொடுக்காமல் சைடு வேவ் மூவ்மெண்ட்டில் சென்ற கடந்த வார மார்கெட் விலாடிலிட்டி, தற்பொழுது தனது முகத்தினை முழுமையாகக் காட்டக்கூடிய கட்டத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறது.


Resistance Line > 1.3140, 1.3176 , 1.3203
Support Line >1.3050, 1.3005


Deal Option : BUY

Deal Position : 1.3050 & near

Stop Loss : 1.3005

Take Profit : 10 pips & above

Market Movement > 1.3050 > 1.3170



ஃபோரெக்ஸ் ட்ரேடிங்க் கடலில் மிதந்து கொண்டிருக்கும் EUR/USD என்ற கரன்சி கப்பல், இல்லாத தனது ஒர் பக்க முகத்தினைச் சரி செய்யும் பொருட்டு நிதானமாகவும், எவர்க்கும் தெரியாதவாறும் கட்டிக் கொண்டிருந்தப் பணி இறுதிக்கட்ட காலத்தின் பொழுதே எல்லோர்க்கும் தெரிய வருகிறதா? அல்லது எனக்கு மட்டும் தான் இப்படித் தெரிகிறதா? எனத் தெரியவில்லை. ஆனால், எனது கணிப்பு இந்த வார முடிவில் 1.3331 என்றப் புள்ளியினை தொட வேண்டும் என்ற வேகத்துடனே மார்கெட் காளையின் மீது பயணிக்கும். அதே நேரத்தில், பாட்டம் பாயிண்டினையும் பார்க்க தவறவில்லை... இன்றைய நிலைப்படி பாட்டம் லைன் 1.3001 என்ற நிலையில் இருக்க வேண்டிய சூழலில் 1.3095 என்ற ரெசிஸ்டன்ஸ் இடத்திற்கு பெயர்ந்திருக்கிறது என்றால், நாம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் இங்குட்டும் ஒர் எட்டு பார்த்துட்டுப் போய்டுவோம் என்று ஒர் சட்டன் மூவ் கீழ் நோக்கி இருக்கலாம். ஆனாலும், நாளைய டேட்டாஸ் ஈரோவிற்கு சாதகமாக அமையும் எனும் பட்சத்தில், எளிதாக 1.3170 என்றப் புள்ளியினை புதிய ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாகவும், 1.3090 என்றப் புள்ளியினை பாட்டமாகவும் மாற்றிக் கொள்ளும்.



என்னும் 7 நாட்களுக்குள் 1.3331 என்றப் புள்ளியினைத் தொட வேண்டியிருப்பதால், மார்கெட் வேகம் கொஞ்சம் அதிகமாகவே இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல் இருபக்கமும் 200 பைப்ஸ்க்கும் மேலான தூரத்திலிருக்கும் எல்லையை இலக்காகக் கொண்டுள்ளதால், மிக்க கவனத்துடன் ஆர்டர் செய்யவும். ஆர்டர் இடும் பொழுது மணி மேனேஜ்மெண்ட் மூலம் ஈக்குவிட்டியினை கால்குலேட் செய்து 400 - 500 பைப்ஸ் பேலன்ஸ் ஈக்குவிட்டி சைஸ் ஆர்டர் போடுங்கள்.







============================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 30/April Order Signal - காளை மீது பயணிக்கிறது EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 11:59 am

Image
மேல் உள்ள சார்ட்டினைப் பாருங்கள்.... இறங்குமுகமாக வந்த மார்கெட், ஒர் டபுள் பாட்டம் புள்ளியினை உருவாக்கிவிட்டு, ஏறுமுகமாகச் சென்றிருப்பதனை... 15 நிமிடத்தில் 30 பைப்ஸ் அப் ஆகி 1.3119 என்ற புள்ளிக்கு சென்று தொட்டுவிட்டது.

உச்சம் சென்றது, இப்பொழுது அப்படியே திரும்பி, பழைய இடமான 1.3085 என்றப் புள்ளியினை நோக்கி, அதே வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இப்படி கீழ் நோக்கி வருவது மீண்டும் வேகமாகவே பழைய உச்சமான 1.3119 என்ற புள்ளியினைத் தாண்டிச் செல்லும் என நம்புகிறேன். அதற்கு காரணம், கடந்த இரண்டு மாத காலமாக நெகட்டிவ் ஆக வந்த German Unemployment Change என்ற இன்றைய EURO Data என்று பாசிட்டிவாக வரும் என்ற நம்பிக்கை தான். இந்த டேட்டா ரிலிஸ் ஆக இருக்கும் நேரம் மதியம் 1.30. ஆகையால், மார்கெட் கொஞ்சம் ஸ்லோவாகி.... பாட்டம் கொள்ளும் இடத்தில் ஒர் பை ஆர்டர் போட்டீர்கள் என்றால் இலாபத்துடன் திரும்பலாம்.



குறிப்பு: இந்த டேட்டா ரிலிஸ் ஆகும் நேரம் 30 பைப்ஸ்க்கும் மேல் அப்/டவுன் என டேட்டா ரிப்போர்ட் பாசிட்டிவ்/நெகட்டிவ் என வருவதற்கு தகுந்தாற்போல் நடக்கும். ஆகையால், வந்தாலும் நல்ல இலாபம்... எதிரானாலும்... கொஞ்சம் நெருக்கடி...

அப்படி நெருக்கடி இந்த டைமிங்கில் ஏற்பட்டால் இதனை கண்டிப்பாக சரிகட்டும் விதமாக அடுத்த டேட்டா ரிலிஸ் ஆகும் என நம்பலாம். அந்த Unemployment Rate Data ரிலிஸ் ஆகக் கூடிய நேரம் மதியம் 2.30 வருகிறது... இது ஒர் நியூட்ரலாக இருக்கும் என்பது கணிப்பு...

அது நெகட்டிவாகும் பற்றத்தில் உங்களை 2.30 க்கு வெளிவரும் இந்த டேட்டா காப்பாற்றி, ஆர்டர் போட்ட இடத்திற்கே கொண்டு போய் சேர்க்கும் என நம்பலாம்.

ஆகையால், இப்போதையிலிருந்தே மார்கெட்டினை வாட் செய்து, தற்போதைய டவுண்ட் மூவ்மெண்ட் எந்த இடத்தில் டெட் ஆகிறது எனப் பார்த்து 1.15க்குள் பை ஆர்டர் போட்டால் இலாபத்துடன் திரும்பலாம்.


============================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 30/April Order Signal - காளை மீது பயணிக்கிறது EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 1:31 pm

எதிர்பார்க்கப்பட்ட டேட்டா நெகட்டிவ் சென்றுவிட்டது... ஆகையால், சரியான டவுனில் போட்டவர்கள் இலாபத்துடன் வெளியேறிக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 30/April Order Signal - காளை மீது பயணிக்கிறது EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 6:37 pm

ஏற்றம் இறக்கம் கொண்டது தான் ப்ரக்ஸ் மார்கெட். அதிலும் ஒர் ப்ரமிட் அமைப்பினை உருவாக்கும் என்பதுதான் ஃபோரெக்ஸ் இயற்கை. ஆனால், அங்கும் நம்மை ஏறி இறங்கி குழப்பத்தினை உருவாக்கும் விளையாட்டாக அமைவது தான் பலரது ஏமாற்றத்திற்கு காரணம்.

மார்கெட் போகும் திசைக்கு ஏற்ப நாமும் சென்று கொண்டே இருந்தால், எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால், அப்படி நடந்து கொள்வதுதானே பெரிய கஷ்டமாக இருக்கிறது... ஏறுகிறது என ஆர்டர் போட்டுவிட்டு, பின் இறங்குகிறது என எப்படி ஆர்டர் போட்டு பின்னாலே போவது? இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான். ஆனால், ஆர்டர் போடும் இடத்தினைச் சரியாக தேர்வு செய்துவிட்டோம் என்றால், ஏறும் போதும், இறங்கும் போதும் நம்மக்கிட்ட ஒர் வார்த்தை சொல்லிட்டுப் போகும் இல்லை. அதாவது மார்கெட்டுக்கு நாம் மதிப்புக் கொடுத்து சரியான இடத்தில் மட்டும் ஆர்டர் போட்டோம் என்றால், அதுவும் நம்மை ஒர் தடவை எச்சரிக்கைச் செய்ய வந்துவிட்டு போகும்... அப்பொழுது நாம் உஷாராக நஷ்டம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்.


மேல் உள்ள சிக்னல் ட்ரெண்ட் லைன் பாருங்கள்... அது எடுக்கப்பட்ட நேரம் , நேற்றைய இரவு மணி 1.30 அருகில். அந்த நேரத்தில் மார்கெட் 1.3100 என்ற உச்சத்தில் இருந்தது... ஆனால், அப்போதைய நேரப்படி அது இருந்திருக்க வேண்டிய இடம் .... 1.3050.... இன்றைய சப்போர்ட் லைனாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியப் புள்ளி 1.3001... ஆனால் நேற்று அது நடக்கவில்லை. ஆகையால்,... மார்கெட் என்னும் 150 பைப்ஸ் ஏறும் என்று கெஸ் செய்தாலும்.... ப்ரிவியஸ் ஏற்றத்திற்கு ஒர் இறக்கம் வேண்டாமா? அந்த இறக்கத்தினையும்... காலை ஆசிய வர்த்தகத்தினையும் கணக்கில் கொண்டு, 1.3050 என்ற புள்ளி அருகே சப்போர்ட் லைன் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால், இன்று சீனா விடுமுறை தினத்தினை அறிவித்திருப்பது EUR/USD மார்கெட்டில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை, இன்றைய காலை மூவ்மெண்டின்படி தெரிந்து கொண்டேன். அதிலும் ஒர் நெகட்டிவ் கிடைத்ததால்... சப்போர்ட் லைன் என்னும் தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதற்கு முன்னர், 1.3140 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாக இரோ மார்கெட் அமைத்திருக்க வேண்டும்.... ஆனால், கடைசியாக வந்த டேட்டாஸ் எல்லாமே நெகட்டிவாகப் போனதால்... அப்படியே டவுனை நோக்கிச் சென்றுவிட்டது... ஆகையால் மார்கெட் நாம் எதிர்பார்த்தப்படியே, 1.3050 > 1.3005 என்ற சப்போர்ட் லைனை உள்வாங்கியும் மேல் எழும்பிச் செல்லலாம் என்ற கணிப்புப்படியே மார்கெட் மூவ்மெண்ட் மேல் நோக்கி இருக்கிறது.


ஆர்டர் போடச் சொன்ன இடமான.... 1.3050 என்றப் புள்ளிக்கு அருகே ஆர்டர் போடப்பட்டிருந்தால்... இழப்பிற்கு வாய்ப்பே இல்லை... அதிலும் .. 10 பைப்ஸ் பிராபிட் என்று ஆர்டர் க்ளோஸ் செய்யப்பட்டிருந்தால்... சொல்வதற்கே இல்லை... எப்பொழுதோ இலாபத்துடன் முடிந்துவிட்டது.


ஏன் இதனை திடீரெனச் சொல்கிறேன் என்றால்.... இன்று நான் ஆன்லைனில் இல்லாத பொழுது ஒருவர், மாலை 3.40 வாக்கில் போன் செய்து, ஆர்டர் கீழே போயிடுச்சி.. திரும்பி மேலே வருமா எனக் கேட்டார்... உடனே எனக்கு நம்ம EUR/USD கரன்சி 2 மணி வாக்கில் டவுனை நோக்கிச் சென்றது...பிடிபட்டு.. அது மேலும் கீழறங்கிக் கொண்டிருக்கிறதோ... என மேலும் விவரமாக.... இப்பொழுது எந்தப் பாயிண்டில் இருக்கிறது... எந்தப் பாயிண்டில் ஆர்டர் போட்டிற்கள்... என்று கேட்க ஆரம்பித்தால்.....

அவங்க கேட்டது Share Market -ல் ஏதோ ஒர் பங்கு பற்றியது... நான் இறங்கிவிட்டது என்றதும்... நாம் டிப்ஸ் கொடுப்பது ஒரே கரன்சி தானே என, எந்த கரன்சி எனக் கேட்காமல்... ஏற்ற இறக்கத்தினை மட்டுமே பேசி ஆரம்பத்தில் குழம்பிவிட்டேன்.


அப்படி அது, EUR/USD ஆக இருந்தாலும், எங்களால் டிப்ஸ் தான் கொடுக்க முடியுமே தவிர, நஷ்டத்தில் பங்கு கொள்ள முடியாது. ஆகையால் மிகக் கவனத்துடன் ஆர்டர் ப்ளேசினை தேர்வு செய்யுங்கள்... நாங்கள் சொல்வதனையும் நீங்கள் அனலைசிஸ் செய்து ஆர்டர் போட வேண்டும்... அதற்கான முறைகளை ரியல் அக்கவுண்ட் மெம்பர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்... அவ்வாறு பாயிண்ட்களை தேர்வு செய்து ஆர்டர் போட்டால், டேட்டா ரிலிஸ் நேரங்களையும்... அதன் ரிப்போர்ட்டின் தகவல்களையும் தெரிந்து கொண்டு இலாவகமாக எக்சிட் ஆகிக் கொள்ளலாம், நட்டம் இல்லாமல்.

நான் கூட... இன்று மதியம்... டேட்டா பாசிட்டாவாக வரும் எனக் கருதி 1.3072 என்றப் புள்ளி அருகே ஆர்டர் போட்டேன்... ஆனால் டேட்டா நெகட்டிவ் என்று தெரிந்தவுடனே.... அந்த இறக்கத்திற்கு எழும்பும் ஒர் சின்ன அப்பில், நஷ்டம் இன்றி... ஒரே ஒர் பைப் இலாபத்துடன்... இனி ஏறினாலும் எனக்குத் தேவையில்லை... நட்டமில்லை என்று வெளிவந்துவிட்டேன்...

அதைப்போல்... மார்கெட்... 1.3059 வரை கீழ் இறங்கியப் பின்னரே ஏறியிருக்கிறது... அதுவே நான் என்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து ... 1.3050 வரை நோக்கட்டும் என காத்திருந்தால்.... 10 பைப் இலாபத்தோடு திரும்பியிருக்கலாம்.

இல்லை, எப்படினாலும் உயரத்தானே போகிறது... எனக் காத்திருத்தல் என்பது, நெகட்டிவாக க்ளோஸ் செய்யாமல் இருக்கத்தான் காத்திருக்கலாமே தவிர... பிராபிட் வந்து நம் கண்ணுக்கு காட்டியப் பின்னரும்,... இரண்டான் கெட்டான் இடத்தில் ஆர்டரை வைத்திருப்பது நல்லதல்ல... ஏனெனில், ஐரோப்பா வர்த்தகம் முடிந்து அமெரிக்க வர்த்தகம், எவ்வளவுக்கு எவ்வளவு இறக்கிச் செல்ல முடியுமோ அவ்வளவு இறக்கவே முயற்சிக்கும். ஆகையால், ஆர்டர் போடுவது... அந்த வர்த்தகத்தின் நேரத்திற்குத் தகுந்தவாறு, சரியான இடத்தில் போட்டுவிட்டு எக்சிட் ஆகிக் கொள்ள வேண்டும்... வீக்லி மூவ்மெண்ட் எல்லாம் பார்க்கும் அளவிற்கு நம்மிடம் பேலன்ஸ் இல்லை என்பதனை சரியாக மனதில் கொள்ளுங்கள்.

எப்படி இருந்தாலும் நட்டம் வராது என்பதற்காகவே மார்கெட் ட்ரெண்ட் படி பை ஆர்டர் தேர்வு செய்துள்ளேன்... இதுவே கீழ் இறங்கும் எனச் சொல்லி, செல் ஆர்டர் போட்டால் நமக்கு ஒர் கஷ்ட காலம் தான்.

ஆகையால், மார்கெட் மூவ்மெண்டினை சரியாக கணிக்கக் கற்றுக் கொள்வதே நாம் செய்ய வேண்டிய முதல் பயிற்சி... அதனை எந்தவொரு தளமும் தமிழில் சொல்லிக் கொடுப்பதில்லை.... நான் சொல்லிக் கொடுக்கலாம் என்றால், ரியல் அக்கவுண்ட் உள்ள உறுப்பினர்கள் ஒர் 10 நபர்கள் இருந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்... இல்லாவிடில், நல்லாயிருக்காது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 30/April Order Signal - காளை மீது பயணிக்கிறது EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 7:01 pm

1.3073 என்றப் பாயிண்ட்..... நான் எழுதி முடித்துவிட்டுப் போய் பார்த்தால்.... 1.3103 என இருக்கிறது...

அமெரிக்க டேட்டாக்கள் வரும் நேரம் ஆகிவிட்டது. நெகட்டிவ் என்றால்... எதிர்பார்த்த 1.3140 என்ற ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினைத் தொட்டுவிட்டு திரும்பும்... இறக்கத்திற்கு தகுந்தவாறு... 1.3050 அருகே சப்போர்ட் லைனை உருவாக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 30/April Order Signal - காளை மீது பயணிக்கிறது EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 9:56 pm

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, சகண்ட் அப் ஆகும் என்று, ஆனால் வெற்றிகரமாக இரண்டாவது ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினையும் தொட்டுவிட்டது.

இன்றைய உச்சமாக 1.3186 என்றப் புள்ளியினைத் தொட்டுவிட்டு, 1.3172 என்ற புள்ளியினை ரெசிஸ்டன்ஸ் லைனாக வரைந்து கொண்டிருக்கிறது...
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”