சார்ட்/க்ராப் எப்பொழுதுமே X/Y என இரண்டு அச்சுக்களைக் கொண்டு வரையப்படும் என்பது நமக்கு நல்லாவே தெரியும். அதைப்போல் இங்கும், Time & Market Price என இரண்டு அச்சுக்களைக் கொண்டதுதான் Forex Chart தான்.
ரைட் சைடு பார்த்தீர்கள் என்றால், 1.29900, 1.29910, 1.29920 என வரிசையாக எண் கொடுக்கப்பட்டுள்ளது. பாட்டம் சைடு பார்த்தீர்கள் என்றால், டைமிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாம் ஏற்கனவே சார்ட் அனலைசிங்க் செய்துவிட்டு ஆர்டர் போட ஆரம்பியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அதன்படி, கீழ் உள்ள டைம் ப்ரேமினை மாற்றம் செய்துதான் நீங்கள் இதுவரை சார்ட்டினை அனலைசிங்க் செய்து வந்திருப்பீர்கள். இனி அடுத்ததாக, அந்த டைமிங்க்கில் மார்கெட் என்ன ரேட்டில் இருந்தது என்பதனை பார்ப்பதற்கு முன், இப்பொழுது பைப்ஸ் பற்றி பார்த்துவிடலாம்.
நாம் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் சார்ட் திறந்தோம் என்றால் நடுவில் கரண்ட் மார்கெட் லைன் என்றொரு லைன் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த லைன் காட்டும் மார்கெட் விலைப்புள்ளியினை நோட் செய்து கொள்ளுங்கள்.
மேல் உள்ள படத்தில் கரண்ட் மார்கெட் விலை = 1.29824
மார்கெட் இறங்கி, ஏறுகிறது. ஆகையால் நீங்கள், 1.29824 என்ற விலையில் ஒர் பை ஆர்டர் போட்டுவிட்டீர்கள்.
எதிர்பார்த்தது போலவே 10 நிமிடத்தில் மார்கெட் விலை கூடி, 1.29924 என்ற பாயிண்டிற்கு வந்துவிட்டது. இப்பொழுது ஆர்டரை க்லோஸ் செய்துவிட்டீர்கள்.
சரி, நம் இலாபம் எவ்வளவு எனக் கணக்கிட வேண்டும் அல்லவா, ஆகையால்... வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசத்தினைப் பார்ப்போம்.
பை ஆர்டர் இலாபம் = விற்ற விலை - வாங்கிய விலை = 1.29924 - 1.29824 = 0.00100
இலாபம் = 0.00100
Profit Calculation with Pips:
இப்பொழுது கொஞ்சம் தெளிவாக பார்க்க வேண்டியது... புள்ளிக்குப் பிறகு 5 டிஜிட் எண்கள் இருக்கிறது இல்லையா, அதில் கடைசி டிஜிட்டினை நீக்கிவிடுங்கள்... 0.0010
கடைசி டிஜிட்டை நீக்கியாகிவிட்டது... மீதம் புள்ளிக்குப் பிறகு 4 டிஜிட் இருக்கிறது... இப்போ நீங்க நேரடியாக முதலில் இருக்கும் ஜீரோக்களை எல்லாம் நீக்கிவிட்டு மீதம் உள்ள எண்ணை மட்டும் பாருங்கள், புள்ளியையும் விட்டுவிட்டுப் பாருங்கள்> 10
சுருக்கமாகச் சொன்னால், புள்ளிக்குப் பின் இருக்கும் ஐந்தாவது டிஜிட்டினைத் தவிர்த்து, விலையினை அப்படியே நீங்கள் ஒர் எண்ணாகப் பார்க்கலாம். அந்த எண் பைப்ஸ் எனக் கொண்டால், வாங்கிய விலைக்கும் - விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசமே பெற்ற இலாப பைப்ஸ்.
பைப்ஸ் இலாபம் = 1.2992 - 1.2982 = 10 pips
இன்றைய மார்கெட் ப்ளக்சிபுள் என்று சொன்னால், சார்ட்டில் இன்றைய நாளில் எந்த பாயிண்ட் மிகக் குறைந்த பாயிண்டோ அது - இன்றைய நாளில் எது உயர்ந்த பாயிண்டோ அது = இன்றைய பைப்ஸ் ப்ளக்சிபுள்.
ஒர் நாளில் 70 பைப்ஸ் முதல் 300 பைப்ஸ் வரை மார்கெட் ப்ளக்க்சிபுல் ஆகும். அதைப்போல், சின்னச் சின்ன அப் & டவுன் எனப் பார்த்தால் ஒர் நாளைக்கு மார்கெட் 1000 பைப்ஸ்க்கும் மேல் ப்ராபிட் கொடுக்கக் கூடியது.
இப்பொழுது மேல் கொடுக்கப்பட்ட சார்ட்டில் எவ்வளவு பைப்ஸ் Flexible/விரிந்து இருக்கிறது பார்க்க,
ஹை பாயிண்ட் - லோ பாயிண்ட் = 1.2995 - 1.2981 = 14 பைப்ஸ்.
ஏற்கனவே சொன்னது போல், பாயிண்டில் ஆறாவதாக இருக்கும் எண்ணை விடுத்து, மீதம் இருக்கும் ஐந்து எண்களைக் கழித்து கிடைக்கும் எண்ணே பைப்ஸ்.
இப்போ கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், 1.2995 என்ற இடத்தில் ஒர் செல் ஆர்டர் போட்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்கான இலாபம் 14 பைப்ஸ்.
14 பைப்ஸ் என்று சொன்னால், டாலர் கணக்கில் எவ்வளவு பணம் என்று கால்குலேட் செய்ய வேண்டாமா? அதனையும் பார்ப்போம்.
தக்காழி விலை ரூ.5 என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒர் தக்காழி விற்றால், 20 பைசா இலாபம்.
இப்போ நீங்க ஒர் 10 தக்காழி விற்றதாக வைத்துக் கொண்டால், 10 * 20 பைசா= 2 ரூபா இலாபம்.
இதைப்போல் தான்.... நமக்கு இலாபம் என்பது பைப்ஸ்... அந்த 14 பைப்ஸ் ஐ = 14 டாலர் ஆக ஆக்குவதும், 140 டாலராக ஆக்குவதும், 1400 டாலராக ஆக்குவதும் ஆர்டர் சைஸ்.
அதாவது, ஒர் டீல்/ஆர்டர் 0.1 என்ற சைசில் போட்டீர்கள் என்றால், இலாபம் No. of pips * size = 14 * 1$ = 14 $
Deal size 1.0 என்றால் > 14 * 10 $ = $ 140
அதுவே, 10 என்றால் > 14 * 100 $ = $ 1400
ஆமாங்க, உண்மையில் நாம் ஒர் மணி நேரத்தில் 1400 டாலர் = 1400 * 55 = ரூ.75700/= இரண்டே கிளிக்கில் சம்பாதித்துவிடலாம்.
அதைப்போல், நீங்கள் செல் ஆர்டர் போடுவதற்குப் பதில், பை ஆர்டர் போட்டீங்கன்னா.... அதுவே நெகட்டிவ் பைப்பாக மாறி, உங்களுக்கு நஷ்டத்தினைக் கொடுத்துவிடும்.
ஆகையால், பெரிய சைஸ் ஆர்டர் போட்டு சம்பாதிப்பது பெரிய விடயம் இல்லை, இழக்காமல் இருக்க வேண்டும். ஆகையால் எப்பொழுதுமே, 0.1 என்ற சிறிய சைஸ் ஆர்டர் போட்டு உங்களது ட்ரேடிங்கினை ஆரம்பியுங்கள். 1 மாதம் போனப்பின், மார்கெட் அனலைசிங்க் தெரிந்தப் பின்னர்... கொஞ்சம் கொஞ்சமாக பெரிய ஆர்டர் போட ஆரம்பித்து... பெரிய அளவில் சம்பாதிக்கலாம்... அப்படி பெரிய ஆர்டர் போடுறீங்கன்னா... அதுக்குத் தகுந்த 300 pips Equity வைத்துக் கொள்ள வேண்டும்.
Equity Calculation with Pips:
Equity என்பது வேறொன்றும் இல்லை, ஈக்குவிட்டி = அக்கவுண்ட் பேலன்ஸ் - ரன்னிங்க் ஆர்டர் லாஸ்
உங்கள் கணக்கில் 500 டாலர் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது நீங்கள் 0.1 என்ற சைசில் ஒர் ஆர்டர் போட்டால், உங்கள் ஆர்டர் 500 பைப்ஸ் லாஸ் ஆகுற வரைக்கும் தாங்கும்... இதுவே நீங்கள் 1.0 என்ற சைசில் ஆர்டர் போட்டால், 50 பைப்ஸ் சட்டன் மூவ்மெண்டில் நெகட்டிவ்வாக போய்விட்டால், எல்லா பணமும் போய், ஆர்டர் க்ளோஸ் ஆகிவிடும். 5.0 என்ற சைசில் ஆர்டர் போட்டால்... ஒர் செகண்டில் 10 பைப் நெகட்டிவ் போற்றுன்னா.... போச்சி... உங்க மொத்த பணமும் போச்சு....
மார்கெட்டில், நெகட்டிவ் + ப்ளஸ் ஆகிய இரண்டிற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், நெகட்டிவ் போனது பாசிட்டிவ் .... பாசிட்டிவ் போனது நெகட்டிவ் என மாறி மாறி 250 பைப்ஸ்க்குள் தினம் நடப்பதால்... அவற்றினை எல்லாம் கணக்கில் கொண்டு, ஒர் 300 பைப்ஸ் ஆவது ஈக்குவிட்டியாக வைத்துக் கொண்டு ஆர்டர் போட்டால் நல்லது. அப்படி என்றால் தான், நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும்.
இப்பொழுது, உங்களுக்கு பைப்ஸ் கணக்கீடு செய்வது எப்படி, இலாபம் கணக்கு செய்வது எப்படி, ஈக்குவிட்டி என்றால் என்ன, ஆகிய அனைத்தும் தெரிந்திருக்கும்.
இதில் ஏதேனும் டவுட் இருந்தால் பின்னூட்டமாகவே, மொபைலுக்கோ தொடர்பு கொண்டு கேட்டு விளக்கம் பெறலாம்.
What is the meaning of Pips in Tamil?
How to Calculate Pips in Forex Market?
How to calculate profit from Pips?
Full details of Pips and Forex Market Analysis with Pips and Taking Big Profit with Low Pips in Tamil Language.
How to Calculate Equity with Pips?