நான் பை ஆர்டர் போடுவதா? செல் ஆர்டர் போடுவதா??? எதுவுமே புரிய மாட்டேங்குது.
பை ஆர்டர் போடும் பொழுதும் நெகட்டிவ்வாக போகுது... சரி செல் ஆர்டர் போடுவோம்னா, அப்பொழுதும் நெகட்டிவ்வாக போகுது... இப்படி லாஸ் மட்டுமே வந்திக்கிட்டு இருக்குது...
அப்படின்னு புலம்புபவர்கள் அதிகம் உள்ள இடம் ஷேர் மார்கெட்/ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க்.
இதுக்கு காரணம், நாம் நழுவவிடும் வாய்ப்புகள் மற்றும், மார்கெட் எப்படி மூவிங்க் ஆகும் என்று சரியாக கெஸ் செய்யச் தெரியாமை. நம்மால் 100% கெஸ் செய்ய முடியாவிட்டாலும், ஒர் 80% கெஸ் செய்துவிட்டாலே, வெற்றி தான். அதிலும் குறிப்பிட்ட ஹெஸ்சிங்க் வெற்றியடைந்தப் பின்னர், எதிர் ஆர்டர் போடுவது என்பது 99% சக்சஸ்.
மேல் உள்ள வரைபடத்தினைப் பாருங்கள்..
நான் அதிகாலை 4.00 மணிக்கு மார்கெட் 1.3070 இருக்கும் பொழுது ஒர் பை டீல் போட்டேன். காரணம், சப்போர்ட் லைன் பாயிண்ட் 1.3000 என்றும், ரெசிஸ்டன்ஸ் லைன் 1.3200 என்றும் இருந்ததால்.... எது அருகில் இருக்கிறது எனப்பார்த்து, அதற்கு நெகட்டிவினை தேர்வு செய்துவிட்டு, தொலைவில் இருப்பதற்கு பாசிட்டிவ் தேர்வு செய்து, ஒர் 20 பைப் ப்ராபிட்டில் பை ஆர்டர் போட்டேன்.
போட்ட ஆர்டர் ஒர் ஐந்து மணிக்கு எல்லாம் 10 பைப் பிராபிட் வந்திடுச்சி.... அப்பவே போதும்னு நான் க்ளோஸ் செய்திருக்கணும்... ஆனால், நான் ஆன்லைனில் இல்லாத காரணத்தினால் பார்க்கவில்லை... அடுத்து கீழ் இறங்கிவிட்டு மீண்டும் 10 பைப் இலாபம் வந்திருக்கிறது....
இரண்டு முறை இலாபத்தினை கண்ணில் காட்டியது, அப்படியே இறங்க ஆரம்பித்துள்ளது...
டவுண்ட் ட்ரெண்ட்
மார்கெட் இறங்குகிறது என்பதனை கடைசியாக உள்ள மூன்று ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினைப் பாருங்கள் தெரியும். (கோபுர உச்சம்)
அப் ட்ரெண்ட்
அதைப்போல், கடைசியாக உள்ள மூன்று பாட்டம் பாயிண்ட்ஸ் பாருங்கள், மார்கெட் உயர்கிறதா எனத் தெரியும் (தலைகீழ் கோபுர உச்சம்)
இப்படி கடைசி மூன்று கோபுரங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதுவே தொடரும் என்பது மார்கெட் ட்ரண்ட் கணிப்பவர்கள் சொல்லிக் கொடுக்கும் பார்முலா.
அதைப்போல், அந்த ட்ரெண்ட் எதுவரை நீடிக்கும் என்றால், இப்பொழுது நீங்கள் 1 மினிட் சார்ட்டில் ட்ரேடிங்க் செய்கிறீர்கள் என்றால் 5 மினிட் சார்ட்டினைப் பாருங்கள். அதனைப் பார்க்கும் பொழுது இந்த சின்னச் சின்னக் கோபுரங்கள் சேர்ந்து மற்றொரு கோபுரத்தினைக் கட்டிக் கொண்டிருக்கும். அடுத்து, 10 மினிட் சார்ட்டினைப் பாருங்கள்... இப்பொழுது கோபுரத்தின் நிலை என்னும் மாறுபடும்.
ஆக, மார்கெட் மூவ்மெண்ட் என்பது கோபுரம் தான். அது சின்னச் சின்னக் கோபுரங்களாக சேர்ந்து, ஒர் பெரிய கோபுரம்... பெரிய கோபுரங்கள் சேர்ந்து ஒர் மெகா கோபுரம் என ஏறி இறங்குவது தான் மார்கெட் ட்ரெண்ட்.
சோ, நீங்கள் 1 மினிட் சார்ட்டில் ட்ரேடிங்க் செய்கிறீர்கள் என்றால் 5 மினிட் சார்ட், 10 மினிட் சார்ட் பார்த்து, இப்பொழுது உச்சம் செல்கிறதா? அல்லது உச்சத்திலிருந்து இறங்குகிறதா? எனப் பார்த்து ஆர்டர் போடுங்கள். அதைப்போல், 30 மினிட் ட்ரெண்ட், 1 யவர் ட்ரெண்ட், ட்ரெண்ட் எனப் பார்த்து வைத்துக் கொண்டு, செல் ஆர்டர் போட வேண்டுமா, பை ஆர்டர் போட வேண்டுமா எனத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு, அதற்கு எதிரான கோபுர உச்சத்தில் ஆர்டர் போட்டால், உறுதியாக 99% வெற்றியடையலாம்.
அப்புறம் என்னொன்று கவனிக்க வேண்டியது... மார்கெட் மூவ்மெண்ட் கீழோ/மேலோ எதேனும் ஒர் முந்தைய உச்சத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது ரொம்ப கால தாமதம் ஆனால், சட்டன் மூவ்மெண்டாக உச்சத்தினைத் தொட்டுவிட்டு திரும்பும் சுனாமி அலை போன்ற ஒர் விளையாட்டினை நீங்கள் வருங்காலத்தில் பார்க்கலாம். ஆகையால், என்னடா... நாம் எதிர்பார்த்த பாயிண்ட் வரலையே என்று... ரொம்ப நேரமாக காத்திருந்தால், பயப்படாதீர்கள்.... அதே நேரத்தில் மார்கெட் ட்ரெண்ட் மாறிப்போய்விட்டது என்ற சூழலில் காத்திருப்பதும் நல்லதல்ல. இப்படி, எதிர்பார்த்த உச்சம் தொட்டப்பிறகு, ட்ரெண்ட்க்கு தகுந்தவாறு ஆர்டர் போட்டால் எளிதாக 10 பைப் + 10 பைப் என் 20 பைப் ஒர் நாளைக்கு சம்பாதிக்கலாம்.
20 பைப் என்றால், அதில் உங்களது ஆர்டர் சைசிக்குத் தகுந்தவாறு இலாபம் வித்தியாசப்படும்... 0.1 சைஸ் என்றால், 20 டாலர். 0.2 சைஸ் என்றால் 40 டாலர் என சைஸ் கூடக் கூட நம் 20 பைப்பின் இலாபமும் கூடிக் கொண்டே செல்கிறது. மீண்டும் சொல்கிறேன் இலாபம் அதிகம் வேண்டும் என்பதற்காக பேலன்ஸ் கொஞ்சமாக வைத்துக் கொண்டு பெரிய ஆர்டர் சைஸ் போடாதீர்கள்... சுனாமிக்குள் மாட்டீனிர்கள் என்றால், பேலன்ஸ் மிஞ்சாது.
மேல் உள்ள படத்தினைப் பாருங்கள்... டவுண்ட் ட்ரெண்ட் லைனை மாற்றிப் போட்டிருக்கிறேன்... அதாவது டவுண்ட் ட்ரெண்ட் பார்க்கும் பொழுது முந்தைய உச்சத்தின் மீது தான் லைன் போட்டுப் பார்க்க வேண்டும்... நான் பாட்டம் லைனில் போட்டிருக்கிறேன்... நீங்கள் சரியாக கவனித்து செய்யுங்கள்..
இப்பொழுது அதன் உச்சங்களைப் பாருங்கள், டபுள் ரெசிஸ்டன்ஸ் இடத்திலிருந்து ஒவ்வொரு சிறு கோபுரத்தின் உச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியாக ஒர் டபுல் பாட்டம் இடத்திற்கு சென்றிருக்கிறது... பின் மீண்டும் மார்கெட் சட்டென இறங்கியது.... இப்படி இறங்கியதனைப் பார்த்ததும்... இது ஏறாது, 1.3030 என்ற முந்தைய பாட்டம் லைனை தொட்டு கோபுரத்தினை முடித்தால் தான் உயரம் என்று நினைத்தேன்... ஆனால், இன்றைய காலை பாட்டம் லைனான 1.3050 என்ற லைனைத் தொட்டு... இன்றைய முதல் கோபுரத்தினை முடித்துக் கொண்டது. அதாவது மார்கெட் 1.3050 என்ற இடத்தில் தொடங்கி... 80 வரைச் சென்றுவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிட்டது.
இப்பொழுது மீண்டும் புதிய கோபுரத்தினை ஏறுமுகமாக கட்ட ஆரம்பிக்கிறது... இந்த கோபுரம் எந்த இடத்தில் உச்சம் அடைகிறதோ, அந்த இடத்தில் செல் ஆர்டர் போட்டோம் என்றால்.... அதாவது குறைந்தப் பற்றம் 70 பைக்கு மேல், உச்சம் கண்டு கொண்டது என்ற நேரத்தில்... இதற்கு மேல் ஏறாது... இறங்க ஆரம்பித்துவிட்டது என்று உறுதியாக ஹெஸ்சிங்க் செய்துவிட்டால்... தைரியமாக ஒர் 10 பைப் பிராபிட் ஆர்டர் போடுங்கள்... ஏனெனில், அந்த கோபுரத்தினை முடிக்க, திரும்பவும் 70 பைப்ஸ் கீழே வரும்.... ஒர்வேளை, அது மற்றொரு பெரிய கோபுரத்தினை நோக்கிய பாதை என்றால், 50% ரிட்டன் வரும்... ஆகையால் எளிதாக இலாபத்துடன் நாம் க்ளோஸ் செய்து கொள்ளலாம்.
ஆகையால் மார்கெட்டில் இறங்கியவுடன் ஆர்டரினைப் போட்டுவிட்டு தவிக்காமல்... நிதானமாக, கோபுரங்களை அலசி ஆராய்ந்து, இப்பொழுது முடிக்க வேண்டிய கோபுர வேலை எது,,, எனப் பார்த்து, முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற மூவ்மெண்ட் திசையில் ஆர்டர் போடுங்கள்... அப்படியான மூவ்மெண்ட் திசை அறிந்து சொல்வதற்குப் பெயர் தான் சிக்னல் என்று சொல்வார்கள். அதைப்போல், ஒர் 60 பைப் பெண்டிங்க் இருந்தால் மட்டும் ஆர்டர் போடுங்கள்.... என்னும் 20 பைப் இருக்கு, அதில் நாம் 10 பைப் சம்பாதித்துக் கொள்ளலாம் என திசை பார்த்து ஆர்டர் போட்டோம் என்றால், அந்நேரம், உச்சத்தினை தொடாமலே சென்றுவிட வாய்ப்பிருக்கிறது... ஆகையால் எப்பொழுதே பெரிய கோபுரங்களைப் பார்த்து ட்ரெண்ட்க்கு தகுந்தவாறு ஆர்டர் போட்டோம் என்றால் வெற்றி எளிது.
இப்பொழுது நான் சொல்லியவாறு கோபுரங்களைக் கொண்டு, சார்ட்டில் உள்ள டைமிங்கினை மாற்றி மாற்றி, கொஞ்சம் அனலைசிங்க் செய்துப் பாருங்கள்.... அதைப்போல் மார்கெட் மூவ்மெண்ட்டும், நான் சொன்னது போல, சிறிய கோபுரம், கோபுரம் என சரியாக ஏறு முகம், இறங்குமுகம் என சரியாக செல்கிறதா எனப் பாருங்கள்.
இந்த மூவ்மெண்டை நீங்கள் சரியாகப் பார்க்கத் தெரிந்துவிட்டாலே... தோல்வி கிடையாது.
அடுத்தப் பாகத்தில் ஒவ்வொரு இடத்தில் உதிக்கும் ஸ்டிக் மூலம் மார்கெட்டினை எப்படி கெஸ் செய்வது என்பதனைப் பார்க்கலாம்... அல்லது பைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்...
ஒகே...