poojakumar wrote:சார் ஒரு sell /buy ஆர்டர் போடும் போது equity எப்படி calculate பண்ணுவது. ஸ்டாப் லாஸ் எந்த பாயிண்ட் இல் கொடுப்பது. இப்போ இறுக டெமோ அக்கௌண்டில் விர்சுவல் money 1000$ இருக்கு அதனால 20 $ லாஸ் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ரியல் அக்கௌன்ட் கு அது ரொம்ப கஷ்டம். அதனால லாஸ் வராம எப்படி எந்த பாயிண்ட்இல் ஆர்டர் போடுவது . விளக்கம் தாருங்கள் ப்ளீஸ் .
equity கால்குலேட் செய்ய முதலில் நாம் ஒர் பைப்பின் வேலிவ் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 0.1 சைசில் ஆர்டர் போட்டால் ஒர் பைப்ஸ் = 1 டாலர். மேலும் விவரமாக பைப்ஸ் பற்றிப் படிக்க >
viewtopic.php?f=37&t=6259 இதில் மூன்றாவது லிங்க் பார்க்கவும்.
1 Pips Value = 0.1 order size = $1
=======================================
Current Order Value = Open price +/- Running price = Profit/Loss
மேல் உள்ள லிங்க் வழியாக கரண்ட் ஆர்டர் வேலிவ் தெரிந்து கொண்டிருப்பீர்கள். தற்பொழுது கீழ் உள்ள பார்முலா மூலம் ரன்னிங்க் ஈக்குவிட்டி தெரிந்து கொள்ளுங்கள்.
equity = Balance +/- Current order value(Profit/Loss).
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒபன் செய்த ஆர்டர் -50 என்றால் equity = 1000 - 50 = 950 , ஆர்டர் வேலிவ் +100 என்றால் Equity = 1000 + 100 = 1100.
இங்கு ஆர்டர் ப்ளசில் சென்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. நெகட்டிவ் போனால், அந்த ஆர்டர் Equity = 3 pips Value Balance இருக்கும் வரைத் தாங்கிக் கொள்ளும். அதற்கும் மேல் நெகட்டிவ் சென்றால் ஆர்டர் க்ளோஸ் ஆகிவிடும். அதாவது ரிஸ்க் தொகையான உங்கள் பணம் முழுவதும் காலியாகிவிடும். அவ்வாறு
ஆர்டர் க்ளோஸ் ஆகும் வரை தங்களது கணக்கிலிருந்து பேலன்ஸ் குறையாது. ஆர்டர் க்ளோஸ் ஆகியப் பின்னரே மைனசோ/ப்ளசோ ஆகும்.
அதற்காக உங்களிடம் ரிஸ்க் தொகை இல்லாத நிலையில் ஆர்டரினை க்ளோஸ் செய்வதற்கான ஒர் ரன்னர் கால்குலேஷன் தான் Equity.
=======================================================
ஸ்டாப் லாஸ் கொடுக்க வேண்டாம், சரியான ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் லைனில் மட்டும் ஆர்டர் போட்டு விரைவாக வெளியில் வந்துவிடுங்கள் என்று இதுவரை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் ஸ்டாப் லாஸ் என்பது புதியவர்களுக்கு மிக முக்கியம் என்பதால் இதனைப் பற்றிய விவரம் வரவிருக்கும் பாடத்தில் கண்டிப்பாக சொல்லித்தரப்படும்.
=====================================================
எந்த பாயிண்டில் ஆர்டர் போடுவது என்பது பற்றிய பாடங்கள் இதுவரை மூன்று கொடுக்கப்பட்டுள்ளது. என்னும் 10 பதிவுகள் வரும்... இவற்றினை முழுவதுமாக படித்துக் கொண்டால் இலாபங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடலாம். பாரக்ஸ் டூட்டோரியல் பாடம் படிக்க >
viewtopic.php?f=37&t=6259
======================================================
ரியல் அக்கவுண்ட் தொடங்குவதற்கு முன் நன்றாக டெமோவில் ப்ராக்டிஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ப்ராக்டிஸ் என்று சொன்னது இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும், பை/ செல் போடுவது அல்ல ப்ராக்டிஸ்.
முழுமையான பயிற்சி என்பது, ஒர் நாளைக்கு இரண்டு ஆர்டர் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒன்றினை காலை 11.30 டு 1.30 க்குள்ளும் இரண்டாவது ஆர்டரினை 5.30 டூ 8 க்குள்ளும் போட வேண்டும். இந்த ஆர்டர் போடுவதற்கு ஒர் அரை மணி நேரத்திற்கு முன்னரே மார்க்கெட்டை வாட்ச் செய்து, ஒர் வியூகம் வகுக்க வேண்டும். வியூகத்திற்கான ட்ரிக்ஸ் டூட்டோரியலில் சொல்லித் தரப்படும். அதனைப் பயன்படுத்தி... அடுத்த மார்க்கெட் எந்த திசையினை நோக்கி அமையும் என்று நீங்கள் ஹெஸ் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், படுகை.காம் ஒர் பதிவாகச் செய்யுங்கள்.
இங்கு ஒர் பதிவாகச் செய்வதுதான் மிக முக்கியம். நீங்கள் உங்களது வியூகத்தினை எங்களிடம் சொல்லும் பொழுது, அதில் எங்களது வியூகத்தினையும் சொல்வோம். இப்படி நாம் டிஸ்கஸ் செய்வதனால் வியூகத்திற்கான கூடுதல் பாயிண்ட் நமக்கு கிடைக்கும்... இவ்வாறக நீங்கள் ஒர் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் ஒர் மாதத்தில் முழுமையாகக் கற்றுக் கொள்ளலாம்.
மேலும் தங்களது இப்போதைய டார்கெட் தினம் 10 பைப்ஸ் ப்ராபிட் எடுக்க வேண்டும் என்பதனை குறிக்கோலாக கொள்ளுங்கள்.. பின் அதனை 20 பைப்ஸாக மாற்றுங்கள்... 20 பைப்ஸ் சக்சஸ் ஆனதும் ரியல் அக்கவுண்ட்க்குள் செல்லலாம்.
மேலும் இது ஒர் விளையாட்டு, இதில் வெற்றி தோல்வி என இரண்டும் உண்டு. ஆனால், அவற்றில் நமக்கு இலாபம் இருக்க வேண்டும் அதுவே நமது நோக்கம். தோல்விகளுக்காக பயப்படத்தேவையில்லை.
20 பைப்ஸ் தொடர்ந்து வெல்ல ஆரம்பித்தப் பின்னர் ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள்... எளிதாக வெற்றியடையலாம்.