Page 2 of 3

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Wed Jun 12, 2013 7:58 pm
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்

Take Profit & Stop lose போடும்போது Take Profit ல் எவ்வளவு லாபம் வரை போடலாம் Stop lose ல் குறைந்தளவு எவ்வளவு கொடுக்கலாம்?

மேலும் தாங்கல் Forex Trading விவரங்களை அலசும் பகுதியை தற்போது படிக்கிறேன் அதனை பார்க்கும்போது அவ்வளவு சீக்கிரம் நான் கற்றுக்கொள்ள மாட்டேன் காலதாமதம் ஆகும் என நினைக்கிறேன்

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Thu Jun 13, 2013 7:03 pm
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

Take Profit & Stop lose போடும்போது Take Profit ல் எவ்வளவு லாபம் வரை போடலாம் Stop lose ல் குறைந்தளவு எவ்வளவு கொடுக்கலாம்?

மேலும் தாங்கல் Forex Trading விவரங்களை அலசும் பகுதியை தற்போது படிக்கிறேன் அதனை பார்க்கும்போது அவ்வளவு சீக்கிரம் நான் கற்றுக்கொள்ள மாட்டேன் காலதாமதம் ஆகும் என நினைக்கிறேன்
Stop Loss என்பது நமது பேலன்ஸில் 20% இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்படியான வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கம்மி.. அப்படியான வாய்ப்புகளில் மட்டும் ஆர்டர் போடுங்கள்... போலும், அவ்வாறன இடங்களை தேர்வு செய்வது என்பது பற்றி அடுத்த வாரத்திற்குப் பின் அடுத்தக்கட்ட பயிற்சியில் தெளிவாகக் கொடுக்கிறேன்.

பைப்ஸ் பற்றி எங்கேயே கேட்டு நான் பதில் கொடுக்கவில்லை என்பது தெரியும், ஆனால் அது எந்த இடத்தில் கேட்டீர்கள் என்பதுதான் தெரியவில்லை.

விவரம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது, பார்க்க > viewtopic.php?f=50&t=5927

2வது லிங்க் > viewtopic.php?f=50&t=6226

இரண்டையும் ஒர் முறைக்கு நான்கு முறைப் படியுங்கள்... அல்லது புரியும் வரைக்கும் படியுங்கள்.. இது மனப்பாடம் செய்யக்கூடியது அல்ல. ஆகையால் நன்றாக புரிந்து படித்துக் கொண்டால்... இதைப்போல், ஆயில்/கோல்டு போன்றவற்றிகும் சரியாக பைப்ஸ் கால்குலேஷன் தயார் செய்து கொள்ளலாம். இல்லாவிடில்... அதற்கு உங்களுக்குள் கேள்வி எழும்பும். ஆகையால் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Tue Jun 18, 2013 11:08 am
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்


Forex Demo A/c ல் 1.33559 ல் ஒரு Sell Order போட்டேன் Market trend 1.33531 காண்பித்தது வாங்கிவிட்டேன் அப்படிஎன்றால் [1.33559-1.33531]= 2.8 லாபம் தானே ஆனால் என்னுடைய ல் 977.90 இருந்தது தற்போது 978.60 இது எனக்கு P&L A/c காண்பித்த லாபம் இவ்வளவு தான் 0.70 என்ன காரணம் சார்?

அடுத்த Sell Order போட்டேன் 1.33542 Point ல் Market trend இறங்க ஆரம்பித்தது

இப்படி
1.33542 - 1.33541= [-]2.10

1.33542 - 1.33534= [-]1.10

1.33542 - 1.33530= [-]0.89


Sell Order போடும்போது போட்ட Point ல் இருந்து இறங்கும்போது Profit [ + ] ல் தானே காண்பிக்க வேண்டும் [ - ] Loss ல் காண்பிக்கறது புரியவில்லை சார்

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Tue Jun 18, 2013 11:20 am
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்


Forex Demo A/c ல் 1.33559 ல் ஒரு Sell Order போட்டேன் Market trend 1.33531 காண்பித்தது வாங்கிவிட்டேன் அப்படிஎன்றால் [1.33559-1.33531]= 2.8 லாபம் தானே ஆனால் என்னுடைய ல் 977.90 இருந்தது தற்போது 978.60 இது எனக்கு P&L A/c காண்பித்த லாபம் இவ்வளவு தான் 0.70 என்ன காரணம் சார்?

SELL & BUY
என்ற பட்டன் அருகில் விலை ஓடிக் கொண்டிருக்கும். அதில் விற்பனை விலையும் , வாங்கும் விலையும் ஒரே போல் இருப்பதில்லை என்பதனை நீங்கள் கவனிக்கவில்லையா?

அதாவது, 1.33559 என விற்பனை விலை காண்பிக்கப்பட்டால், அருகில் வாங்கும் விலை 1.33539 எனக் காட்டப்பட்டிருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், வாங்கும் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான ஸ்பிரட் 2 பைப்ஸ். நீங்கள் ஆர்டர் போடும் பொழுதே -2 பைப்ஸ் ஆகிவிடும். அந்த -2 பைப்ஸ் தாண்டிச் செல்லும் பொழுதுதான் இலாபம். மேல் குறிப்பிட்ட அனைத்து வித்தியாசத்திலும் -2 பைப்ஸ் சேர்த்தால், சரியாகத்தான் இருக்கிறது.


அதைப்போல், ஒவ்வொரு கரன்சிக்கு வேவ்வேறு விதமான ஸ்பிரட் இருக்கும். ஆகையால், குறிப்பிட்ட கரன்சிக்கான ஸ்பிரட் என்ன என்பதனை விலைக்கான இடைவெளி மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Tue Jun 18, 2013 2:13 pm
by poojakumar
சார் ஒரு sell /buy ஆர்டர் போடும் போது equity எப்படி calculate பண்ணுவது. ஸ்டாப் லாஸ் எந்த பாயிண்ட் இல் கொடுப்பது. இப்போ இறுக டெமோ அக்கௌண்டில் விர்சுவல் money 1000$ இருக்கு அதனால 20 $ லாஸ் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ரியல் அக்கௌன்ட் கு அது ரொம்ப கஷ்டம். அதனால லாஸ் வராம எப்படி எந்த பாயிண்ட்இல் ஆர்டர் போடுவது . விளக்கம் தாருங்கள் ப்ளீஸ் .

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Tue Jun 18, 2013 2:54 pm
by ஆதித்தன்
poojakumar wrote:சார் ஒரு sell /buy ஆர்டர் போடும் போது equity எப்படி calculate பண்ணுவது. ஸ்டாப் லாஸ் எந்த பாயிண்ட் இல் கொடுப்பது. இப்போ இறுக டெமோ அக்கௌண்டில் விர்சுவல் money 1000$ இருக்கு அதனால 20 $ லாஸ் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ரியல் அக்கௌன்ட் கு அது ரொம்ப கஷ்டம். அதனால லாஸ் வராம எப்படி எந்த பாயிண்ட்இல் ஆர்டர் போடுவது . விளக்கம் தாருங்கள் ப்ளீஸ் .

equity கால்குலேட் செய்ய முதலில் நாம் ஒர் பைப்பின் வேலிவ் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 0.1 சைசில் ஆர்டர் போட்டால் ஒர் பைப்ஸ் = 1 டாலர். மேலும் விவரமாக பைப்ஸ் பற்றிப் படிக்க > viewtopic.php?f=37&t=6259 இதில் மூன்றாவது லிங்க் பார்க்கவும்.

1 Pips Value = 0.1 order size = $1

=======================================

Current Order Value = Open price +/- Running price = Profit/Loss

மேல் உள்ள லிங்க் வழியாக கரண்ட் ஆர்டர் வேலிவ் தெரிந்து கொண்டிருப்பீர்கள். தற்பொழுது கீழ் உள்ள பார்முலா மூலம் ரன்னிங்க் ஈக்குவிட்டி தெரிந்து கொள்ளுங்கள்.

equity = Balance +/- Current order value(Profit/Loss).

எடுத்துக்காட்டாக நீங்கள் ஒபன் செய்த ஆர்டர் -50 என்றால் equity = 1000 - 50 = 950 , ஆர்டர் வேலிவ் +100 என்றால் Equity = 1000 + 100 = 1100.

இங்கு ஆர்டர் ப்ளசில் சென்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. நெகட்டிவ் போனால், அந்த ஆர்டர் Equity = 3 pips Value Balance இருக்கும் வரைத் தாங்கிக் கொள்ளும். அதற்கும் மேல் நெகட்டிவ் சென்றால் ஆர்டர் க்ளோஸ் ஆகிவிடும். அதாவது ரிஸ்க் தொகையான உங்கள் பணம் முழுவதும் காலியாகிவிடும். அவ்வாறு ஆர்டர் க்ளோஸ் ஆகும் வரை தங்களது கணக்கிலிருந்து பேலன்ஸ் குறையாது. ஆர்டர் க்ளோஸ் ஆகியப் பின்னரே மைனசோ/ப்ளசோ ஆகும்.

அதற்காக உங்களிடம் ரிஸ்க் தொகை இல்லாத நிலையில் ஆர்டரினை க்ளோஸ் செய்வதற்கான ஒர் ரன்னர் கால்குலேஷன் தான் Equity.

=======================================================

ஸ்டாப் லாஸ் கொடுக்க வேண்டாம், சரியான ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் லைனில் மட்டும் ஆர்டர் போட்டு விரைவாக வெளியில் வந்துவிடுங்கள் என்று இதுவரை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் ஸ்டாப் லாஸ் என்பது புதியவர்களுக்கு மிக முக்கியம் என்பதால் இதனைப் பற்றிய விவரம் வரவிருக்கும் பாடத்தில் கண்டிப்பாக சொல்லித்தரப்படும்.

=====================================================

எந்த பாயிண்டில் ஆர்டர் போடுவது என்பது பற்றிய பாடங்கள் இதுவரை மூன்று கொடுக்கப்பட்டுள்ளது. என்னும் 10 பதிவுகள் வரும்... இவற்றினை முழுவதுமாக படித்துக் கொண்டால் இலாபங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடலாம். பாரக்ஸ் டூட்டோரியல் பாடம் படிக்க > viewtopic.php?f=37&t=6259

======================================================

ரியல் அக்கவுண்ட் தொடங்குவதற்கு முன் நன்றாக டெமோவில் ப்ராக்டிஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ப்ராக்டிஸ் என்று சொன்னது இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும், பை/ செல் போடுவது அல்ல ப்ராக்டிஸ்.

முழுமையான பயிற்சி என்பது, ஒர் நாளைக்கு இரண்டு ஆர்டர் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒன்றினை காலை 11.30 டு 1.30 க்குள்ளும் இரண்டாவது ஆர்டரினை 5.30 டூ 8 க்குள்ளும் போட வேண்டும். இந்த ஆர்டர் போடுவதற்கு ஒர் அரை மணி நேரத்திற்கு முன்னரே மார்க்கெட்டை வாட்ச் செய்து, ஒர் வியூகம் வகுக்க வேண்டும். வியூகத்திற்கான ட்ரிக்ஸ் டூட்டோரியலில் சொல்லித் தரப்படும். அதனைப் பயன்படுத்தி... அடுத்த மார்க்கெட் எந்த திசையினை நோக்கி அமையும் என்று நீங்கள் ஹெஸ் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், படுகை.காம் ஒர் பதிவாகச் செய்யுங்கள்.

இங்கு ஒர் பதிவாகச் செய்வதுதான் மிக முக்கியம். நீங்கள் உங்களது வியூகத்தினை எங்களிடம் சொல்லும் பொழுது, அதில் எங்களது வியூகத்தினையும் சொல்வோம். இப்படி நாம் டிஸ்கஸ் செய்வதனால் வியூகத்திற்கான கூடுதல் பாயிண்ட் நமக்கு கிடைக்கும்... இவ்வாறக நீங்கள் ஒர் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் ஒர் மாதத்தில் முழுமையாகக் கற்றுக் கொள்ளலாம்.

மேலும் தங்களது இப்போதைய டார்கெட் தினம் 10 பைப்ஸ் ப்ராபிட் எடுக்க வேண்டும் என்பதனை குறிக்கோலாக கொள்ளுங்கள்.. பின் அதனை 20 பைப்ஸாக மாற்றுங்கள்... 20 பைப்ஸ் சக்சஸ் ஆனதும் ரியல் அக்கவுண்ட்க்குள் செல்லலாம்.

மேலும் இது ஒர் விளையாட்டு, இதில் வெற்றி தோல்வி என இரண்டும் உண்டு. ஆனால், அவற்றில் நமக்கு இலாபம் இருக்க வேண்டும் அதுவே நமது நோக்கம். தோல்விகளுக்காக பயப்படத்தேவையில்லை.

20 பைப்ஸ் தொடர்ந்து வெல்ல ஆரம்பித்தப் பின்னர் ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள்... எளிதாக வெற்றியடையலாம்.

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Thu Jun 20, 2013 3:20 pm
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்


ரெசிடென்ட் லைன் 1.32000 [Top]

பிவோட் பாயிண்ட் 1.31000


சப்போர்ட் லைன் 1.30000 [down]

சரியா சார்?

மேலும் Chart number 1.29000 ல் தொடங்குகிறது எனக்கு 1.34000தெரிகிறது மேலும் இதற்கும் மேலே ஏதோ Chart number மறைந்து உள்ளது போல தெரிகிறது இறுதியாக எந்த number வரை உள்ளது என சொல்லுங்கள்

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Thu Jun 20, 2013 3:33 pm
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்


ரெசிடென்ட் லைன் 1.32000 [Top]

பிவோட் பாயிண்ட் 1.31000


சப்போர்ட் லைன் 1.30000 [down]

சரியா சார்?

மேலும் Chart number 1.29000 ல் தொடங்குகிறது எனக்கு 1.34000தெரிகிறது இறுதியாக எந்த number வரை உள்ளது என சொல்லுங்கள்

pivot என்பது ஒர் மத்தி... அவ்ளதான். சரியாக 1.3100 என எடுத்துக் கொள்ளுதல் கூடாது.

Interest = PNR என்பது ஒர் பார்முலா.... அதற்காக எல்லோருடைய வட்டி விகிதத்திற்கும் ஒரே எண்ணை கொள்ள முடியுமா? அல்லது தேவையான எண்ணுக்கு இந்த பார்முலைவை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?


சோ.... பிவோட்... ரெசிஸ்டன்ஸ்...பாட்டம் ஆகிய பார்முலா லைன்-களை தற்போதைய சார்ட் நிலவரப்படி வரைந்து.. அதில் என்ன புள்ளி விலை இருக்கிறதோ அதுவே... அந்த விலை. நான் சொன்ன உதாரண விலையை கையில் எடுத்துக் கொண்டு... இப்படி இல்லை என்று சொல்வது... நம் புரிதலைக் கடினப்படுத்துகிறது. ஆகையால், ஒர் முறைக்கு இருமுறைப் படித்து புரிந்து கொள்ளுங்கள்... சந்தேகங்களுக்கு அதே பதிவில் பின்னூட்டம் கொடுங்கள்.

மேல் கீழ் என்பது.. அப்போதைய விலை நிலவரத்திற்கு ஏற்ப சென்று கொண்டே இருக்கும் (infinity).... அதனை டைம் ப்ரேம் மாற்றிப் பார்க்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம்.

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Thu Jun 20, 2013 7:11 pm
by dhaya1982
சார் தாங்கள் இதற்க்கு பதில் அளிக்கவில்லையே


Chart number 1.29000 ல் தொடங்குகிறது எனக்கு 1.34000 வரை தெரிகிறது மேலும் இதற்கும் மேலே ஏதோ Chart number மறைந்து உள்ளது போல தெரிகிறது இறுதியாக எந்த number வரை உள்ளது என சொல்லுங்கள்

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Posted: Thu Jun 20, 2013 7:31 pm
by ஆதித்தன்
dhaya1982 wrote:சார் தாங்கள் இதற்க்கு பதில் அளிக்கவில்லையே


Chart number 1.29000 ல் தொடங்குகிறது எனக்கு 1.34000 வரை தெரிகிறது மேலும் இதற்கும் மேலே ஏதோ Chart number மறைந்து உள்ளது போல தெரிகிறது இறுதியாக எந்த number வரை உள்ளது என சொல்லுங்கள்
மீண்டும் நான் மேல் கொடுத்த பதிலை படிக்கவும்.

மேல் கீழ் என்பது.. அப்போதைய விலை நிலவரத்திற்கு ஏற்ப சென்று கொண்டே இருக்கும் (infinity).... அதனை டைம் ப்ரேம் மாற்றிப் பார்க்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம்.
இதன் அர்த்தம்...

1.2900 < 1.2800 < 1.2600 < 1.2500 infinity/முடிவற்றது.

1.3400 < 1.3500 < 1.3600 < 1.400 infinity


அதற்காக ஒரே நாளில் 500 பைப்ஸ் மேல் சென்றுவிடாது... ஒரே நாளில் 500 பைப்ஸ் இறங்கிவிடாது...

விலை ஏற்றம் இறக்கம் என்பது ஒர் அரசின் தலையெழுத்தே இருக்கிறது. ஆகையால் ஒரே அடியாக எந்தவித மாற்றமும் வந்துவிடாது... சிறிது சிறிதாக மாற்றம் அடையும்.

உதாரணத்திற்கு EUR என்பது ஐரோப்பா கரன்சி ... USD என்பது அமெரிக்க கரன்சி.

அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடைந்தால் அமெரிக்காவுக்கு பிரச்சனை... EUR வீழ்ந்தால் ஐரோப்பா நாடுகளுக்கு பிரச்சனை. ஆகையால் இரண்டு நாடுகளும் முடிந்த வரைக்கும் தனது கரன்சியின் நிலையினை நிலாயாக வைத்திருக்க போராடும். அதாவது 1:1 என்பதனை நிலை நிறுத்தவே பெரிதும் போராடும்.

அதே நேரத்தில் USD/INR எடுத்துக் கொண்டால் 1:59 ஆகிவிட்டது. அதுவும் 54 லிருந்து 59 வந்த நிலைக்கே பேப்பர் செய்தி... இந்திய ரூபாய் விழ்ச்சி என்று கொட்டை எழுத்தில் போடுகிறார்கள்... விரைவில் மீண்டும் பழைய நிலைக்கே/54-க்கே வந்துவிடும் என நமது நிதி அமைச்சர் சிதம்பரம் பதில் கொடுக்கிறார்.

ஆக கரன்சி விலை என்பது இரு நாடுகளுக்கான பிரச்சனை... ஆகையால், அத்தனை எளிதில் வீழவும் செய்யாது... எழும்பவும் செய்யாது. ஆனால், 500 பைப்ஸ் என்பது தினசரி நடவடிக்கையால் ஏற்படும் ஒர் மாற்றம்... அது மேலும் கீழுமாய் இருக்கும்.

நீங்கள் நாட்டு நடப்பினையும் பொருளாதரத்தினையும் சற்று நோக்கி வந்தால் புரிதலில் கடினம் ஏற்படாது.