Open a Deal & Set Take Profit for Auto Executing

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by ஆதித்தன் » Mon Apr 22, 2013 4:35 am

Image
இரண்டாம் பாகத்தில் ஆர்டர் போடுவதற்கு முன், முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தோம்... இப்பொழுது ஆர்டர் எப்படிப் போடுவது, இலாபத்துடன் எப்படி க்ளோஸ் செய்வது என்பதனைப் பார்ப்போம்.

முதலில் படத்தினைப் பாருங்கள், அடுத்து விடியோவினைப் பாருங்கள். படத்தின் படி, ஒவ்வொரு ஸ்டெப்பாக கீழே விளக்கமாக சொல்லியிருக்கிறேன்.. அதனை முழுமையாகப் படித்துவிட்டு, உங்களது டொமோ ட்ரேடிங்க் அக்கவுண்டிற்குள் லாக்கின் ஆகி, இப்பவே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் எனில் போன் செய்யுங்கள், அல்லது இங்கு பின்னூட்டம் கொடுங்கள்.

டொமோ அக்கவுண்ட் என்னும் ஒபன் செய்யவில்லை என்றால், http://forex.padugai.com என்ற தளத்திற்கு சென்று ஒர் டொமோ அக்கவுண்ட் ஒன்று தொடங்கிக் கொள்ளுங்கள்.

விடியோவில் நான்கு - ஐந்தாம் பாகத்தில் டீல் ஒபனிங்க் பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும்..நீங்கள் அனைத்து விடியோவினையும் பார்த்துவிட்டால்.... புல் ட்ரெயினிங்க் ஒவர்
How to Create New Order & Close with PROFIT in Forex Trading?

முதல் இருக்கும் படத்தினைப் பாருங்கள். சரி, இப்பொழுது உங்களது டொமோ அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்டு கொண்டு, ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் சர்வர்க்குள் லாக்கின் ஆகுங்கள்... இப்பொழுது படத்தினைப் பாருங்கள்... இரண்டும் ஒன்றாக இருக்கிறதா?? சரி, இப்போ ஸ்டெப் பை ஸ்டெப்பாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன், கவனமாக படித்துக் கொள்ளுங்கள்.

1. முதலில் EUR/USD என்ற கரன்சி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

2. ஆர்டர் சைசினை 0.1 என்ற சிறிய அளவிற்கு செட் செய்யுங்கள். உங்கள் கணக்கில் 1000 டாலர் இருந்தால் 0.2 என்ற சைஸ் ஆர்டர் போடலாம். ($500=01, 1500 = 0.3 என நமது பேலன்ஸ்க்கு தகுந்தவாறு ஆர்டர் சைஸ் செட் செய்து கொள்ளுங்கள். 0.1 சைஸ் ஆர்டர் என்றால் ஒர் பைப்பிற்கு 1 டாலர் கிடைக்கும்.... 0.2 என்றால் ஒர் பைப்பிற்கு 2 டாலர் கிடைக்கும்... பிராபிட் அதிகம் வேண்டும் என்பதற்காக, பேலன்ஸ் குறைவாக வைத்துக் கொண்டு, பெரிய சைஸ் ஆர்டர் போடாதீர்கள், ஏனெனில் ஒர் பைப்பிற்கு எவ்வளவு அதிகமாக இலாபம் கிடைக்குமோ, அதைப்போல் நெகட்டிவ்வாக சென்றால் நட்டமும் கிடைக்கும். ஆகையால் எப்பொழுது சிறிய சைஸ் ஆர்டரையே செட் செய்யுங்கள்.

3. மேலிருக்கும் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்து, ஒன் கிளிக் ஆர்டர் செட்டப்பினை AGREE கொடுத்து ஒகே செய்யுங்கள்.

4. மார்கெட் இப்பொழுது என்னப் பாயிண்ட்/விலை சென்று கொண்டிருக்கிறது எனப் பாருங்கள்.

5. மார்கெட் நிலவரத்தினை 1 minute chart, 5 minute chart, 30 minute chart எனப் பார்த்து, இப்பொழுது மேல் சென்றுவிட்டு கீழ் இறங்குகிறதா? கீழ் சென்றுவிட்டு மேல் ஏறுகிறதா? என்பதனை தெளிவாக அனலைசிங்க் செய்யுங்கள். மார்க்கெட் செல்லும் திசையினை ஒர் 30 நிமிடம் வாட்ச் செய்யுங்கள், பின்னர் என்ன ஆர்டர், எந்தப் பாயிண்டில் போடலாம் என முடிவு செய்யுங்கள்.

6. மார்கெட்டினை வாட்ச் செய்து, சார்ட் அனலைசிங்க் செய்து, பை/செல் என ஏதேனும் ப்ராபிட் கொடுக்கும் ஆப்சனைத் தேர்வு செய்துவிட்டீர்கள் அல்லவா?, இப்போ நடுவில் இருக்கும் BUY / SELL என்பதில் நீங்கள் தேர்வு செய்த பையோ அல்லது செல்லோ... நீங்கள் எதிர்பார்க்கும் பாயிண்ட் வந்ததும் ஒர் கிளிக் செய்து ஆர்டரைப் புக் செய்யுங்கள்.

7. ஆர்டர்/டீல் ஆப்சனை க்ளிக் செய்ததும், ஆர்டர் புக் ஆகி, OPEN POSITION என சார்ட்டுக்குக் கீழே காண்பிக்கப்படும். அதில் ஆர்டர் விவரம் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் EUR/USD என இருக்கும் கரன்சி மேல் ஒர் டபுள் கிளிக் செய்யுங்கள்... திறக்கும் புதிய சிறிய விண்டோவில் வலப்பக்கம் இருக்கும் Take Profit என்னும் ஆப்சன் பாக்சில் ஒர் டிக் கொடுத்து, எத்தனை பைப் ப்ராபிட் எதிர்பார்க்கிறீர்களோ, அல்லது எந்தப் பாயிண்ட் வரை ஆர்டர் இலாபத்துடன் வரும் என எதிர்பார்க்கிறீர்களோ அதுவரைக்கும் கொடுத்து அப்டேட் செய்யுங்கள்.

நீங்கள் பாயிண்ட் கொடுக்கும் பொழுதே கீழே, அந்தப் பாயிண்ட்க்கு எவ்வளவு டாலர் இலாபம் கிடைக்கும் என கீழே ஓடிக் கொண்டே இருக்கும்.. அதனைப் பார்த்து ஓகேன்னதும் அப்டேட் செய்யாமல்... இத்தனைப் பைப் தான் வரும்... அந்த பைப் வரைக்கும், என்ன இலாபமோ அது போதும் என, 5 பைப் ... 10 பைப் என குறைந்த இலாபத்தில்.. ஆர்டரை இலாபத்துடன் செட் செய்து கொள்ளுங்கள்... பின் நல்ல அனுபவத்திற்குப் பின் கூடுதல் பைப் இலாபம் பார்க்கலாம்.

Take Profit என்று செட் செய்வது போல, இடப் பக்கம் இருக்கும் STOP LOSS என்பதன் மூலம், நெகட்டிவ்வாக மார்கெட் செல்லும் பற்றத்தில், இந்த பாயிண்ட்க்கு மேல் போனால் ஆர்டரை க்ளோஸ் செய்துவிடலாம் எனவும் செட் செய்து வைக்கலாம்.

டேக் ப்ராபிட்/ ஸ்டாப் லாஸ் ஆகியவற்றினை டெமோ அக்கவுண்ட் கொண்டே நன்றாகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்... இவற்றினைப் பற்றி மேலும் விவரமாக அடுத்து வரும் பாகங்களில் பார்க்கலாம் இப்போதைக்கு ஆர்டர் போடுவது, டேக் ப்ராபிட் என ஒர் 5 பைப் செட் செய்வது என்பதனை கற்றுக் கொள்ளுங்கள்.

8. டேக் பிராபிட் என்பதனை அப்டேட் செய்தவுடன், பார்த்தால் கீழ் ஆர்டர் பொசிசனில் எல்லாம் செட் ஆகியிருக்கும்... ஸ்டாப் லாஸ் கொடுத்திருந்தால், S/L என்ற இடத்தில் அது எந்த பாயிண்டோ அது காண்பிக்கும், அதைப்போள் T/P (take profit) பாயிண்டும் தெரியும்... ஒர் வேளை மார்கெட் மூவ்மெண்ட்க்கு தகுந்தவாறு இப்பாயிண்டுகளை மாற்றியமைக்க விரும்பினால் மீண்டும் டபுள் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். அந்த சிறிய விண்டோவில் பாயிண்ட் சரியாக கொடுத்துவிட்டு, அப்டேட் எனக் கொடுக்க வேண்டுமே தவிர, CLOSE எனக் கொடுத்துவிடாதீர்கள், ஆர்டர் அந்த இடத்தில் நட்டம்/இலாபம்.... எதுவோ அதுவாக க்ளோஸ் ஆகிவிடும்... ஆகையால் கவனமாக செய்யுங்கள்.

9. ஆர்டர் மார்கெட் நிலவரத்திற்கு தகுந்தவாறு இலாபம் நட்டம் என Profit என்னும் இடத்தில் தெரிந்து கொண்டே இருக்கும்... எப்பொழுது சிகப்பு மாறி/மைனஸ் மாறி பச்சைக்கலரில் இலாபத்துடன் காண்பிக்கிறதோ, அப்பொழுது நீங்கள் விரும்பினால், அதே லைனில் இடப்பக்கம் இருக்கும் CLOSE என்றப் பட்டனை கிளிக் செய்து ஆர்டரை க்ளோஸ் செய்து கொள்ளலாம். இல்லாவிடில், அப்டேட் செய்துள்ள S/L & T/P என்ற பாயிண்டில் எந்தப் பாயிண்ட் முதலில் வருகிறதோ, அந்தப் பாயிண்டில் க்ளோஸ் ஆகிவிடும்... அதாவது ப்ராபிட் பாயிண்டிற்கு சென்றால் ப்ராபிட்டாகவும், லாஸ் பாயிண்டினைத் தொட்டால் லாஸ் ஆகவும் ஆர்டர் தானாகவே க்ளோஸ் ஆகிவிடும்.

எந்தவொரு பாயிண்டும் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் தான் பார்த்து ஆர்டரை க்ளோஸ் செய்ய வேண்டும்... இல்லை அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால்.... ஆர்டர் ஓடிக் கொண்டே இருக்கும்.... ப்ராபிட் என்றால் பிரச்சனை இல்லை எவ்வளவு பைப் சென்றாலும் ஓடிக் கொண்டே இருக்கும்.. நெகட்டிவ் பைப்பாக சென்றால்... நம் கணக்கில் பேலன்ஸ் இருக்கும் வரைக்கும் தான் ஓடும்... அதாவது 100 டாலர் பேலன்ஸ் வைத்துள்ளீர்கள், எனில் 100 டாலர் நஷ்டம் என்றால், அத்தோடு ஆர்டரும் க்ளோஸ் ஆகிவிடும்... அதுவே 1000 டாலர் ப்ராபிட் என்றால், அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும்... நீங்கள் வந்து க்ளோஸ் செய்து கொள்ள வேண்டியதுதான்...

10. மார்கெட் மேலும் கீழுமாக செல்வதால், ப்ராபிட் சென்றது என்றால் அடுத்து நஷ்டத்திற்கு திரும்பி ஓடும்... ஆகையால், 5 பைப் இலாபத்தினைப் பார்த்து உடனே க்ளோஸ் செய்யுங்கள். கொஞ்சம் அனுபவம் வந்தப் பின்னர், 10 பைப்... 20 பைப்...50 பைப் என ஒர் நாளைக்கு இலாபம் பார்க்கலாம்.


இப்போ, உங்களுக்கு ஆர்டர் எப்படி போடுவது, ஆர்டரை எப்படி ஆட்டோமெட்டிக்காக Execute செய்ய ஸ்டாப் லாஸ், டேக் ப்ராபிட் பாயிண்ட் கொடுப்பது, ஆர்டர் இலாபம் வந்தவுடன், எப்படி நாமே க்ளோஸ் செய்வது என எல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. இவற்றினை அப்படியே டெமோ அக்கவுண்டில் செய்து பாருங்கள்...

ஏதேனும் சந்தேகம் எனில் எனக்கு தொடர்பு கொள்ளலாம்..

டெமோ அக்கவுண்ட் ஓபன் செய்யாதவர்கள், இலவசமாக ஒர் டெமோ அக்கவுண்டினை நமது http://forex.padugai.com என்ற வலைத்தளம் வழியாகச் சென்று ஓபன் செய்து கொள்ளுங்கள்.


நாளை அடுத்தப் பாகத்தோடு சந்திக்கிறேன் ... நன்றி
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by empandi » Mon Apr 29, 2013 7:47 pm

சார்,வணக்கம் நீங்கள், காட்டிய வழியில் 2வது பாஸ் ஆகிவிட்ன். அதாவது,sell, buy, புரிந்துவிட்டது. (sell-விற்ப்பது.buy-வாங்குவது-சரியாங்க் சார்).அடுத்தது. எனக்கு.real a/c.kku என்ன செய்ய வேண்டும்.என கூறுங்கள்.குறைந்தபட்சம் எவ்வளவு? பணம் முதலிடு செய்யலாம்? ஒரு வேளை லாபம் வந்தால் பணம் வாங்க கிரடிட் கார்டு நாம்பர் கேட்பார்கலா.?! ஏன்? என்றால்.,paypal a/c open செய்து கடைசியில் கிரிட் கார்டு யில்லாமல் அ/க் வ்வெரிஃபை ஆகாமல் உள்ளது. அடுத்து, சார்,செல்-லில் அர்டர் போடவேண்டுமா? அர்டர் போடால் கூடும் போது க்லோஸ் செய்ய வேண்டுமா? 1. ஒரு ஆர்டர்,எத்தனை நாள் வேலிட்டி. இன்று ஆர்டர் போடால் இன்றே க்லோஸ் செய்ய வேண்டுமா? கொஞ்சம் உதவி செய்ய முடியுமா சார் :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by ஆதித்தன் » Mon Apr 29, 2013 10:05 pm

empandi wrote:சார்,வணக்கம் நீங்கள், காட்டிய வழியில் 2வது பாஸ் ஆகிவிட்ன். அதாவது,sell, buy, புரிந்துவிட்டது. (sell-விற்ப்பது.buy-வாங்குவது-சரியாங்க் சார்).அடுத்தது. எனக்கு.real a/c.kku என்ன செய்ய வேண்டும்.என கூறுங்கள்.குறைந்தபட்சம் எவ்வளவு? பணம் முதலிடு செய்யலாம்? ஒரு வேளை லாபம் வந்தால் பணம் வாங்க கிரடிட் கார்டு நாம்பர் கேட்பார்கலா.?! ஏன்? என்றால்.,paypal a/c open செய்து கடைசியில் கிரிட் கார்டு யில்லாமல் அ/க் வ்வெரிஃபை ஆகாமல் உள்ளது. அடுத்து, சார்,செல்-லில் அர்டர் போடவேண்டுமா? அர்டர் போடால் கூடும் போது க்லோஸ் செய்ய வேண்டுமா? 1. ஒரு ஆர்டர்,எத்தனை நாள் வேலிட்டி. இன்று ஆர்டர் போடால் இன்றே க்லோஸ் செய்ய வேண்டுமா? கொஞ்சம் உதவி செய்ய முடியுமா சார் :thanks:

SELL = முதலிலேயே விற்றுவிடுவது... பின் ஆர்டர் க்ளோஸ் செய்வது வாங்குவது. அதாவது விற்றுவிட்டு குறைந்த விலையில் இலாத்தோடு வாங்குவது. அதிக விலைக்கு விற்றுவிட்டு, இறக்கத்தில் குறைந்த விலைக்கு வாங்குவது.

BUY = குறைந்த விலைக்கு வாங்கி, பின் ஆர்டர் க்ளோஸ் செய்வதன் மூலம் அதிக விலையில் விற்பது. குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, விலை ஏற்றத்தில் விற்பது.

ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்ய, ஏற்கனவே ஒபன் செய்த இமெயில் ஐடி மூலம் லாக்கின் ஆகி, உள்ளே இருக்கும், ரியல் அக்கவுண்ட் என்ற பட்டனை கிளிக் செய்து பார்மினை பில் செய்து, ஐடி ப்ரூப் மற்றும் அட்ரஸ் ப்ரூப் ஆகியவற்றின் ஸ்கேண் காபியினை அப்லோடிங்க் செய்தால், இரண்டு நாளில் ரியல் அக்கவுண்ட் அப்ரூவல் கிடைக்கும். அதிலும் MT4 server தேர்வு செய்யுங்கள்.

ரியல் அக்கவுண்ட் அப்ரூவல் கிடைத்தவுடன், கேஸ் டெபாசிட் என்ற ஆப்சன் வழியாகச் சென்றால், விசா கார்டு என்ற முறையில், விசா டெபிட் கார்டு மூலம் நமது பணத்தினை டெபாசிட் செய்யலாம்/. குறைந்தப் பற்றம் $100 என்றாலும், குறைந்தது $300 டாலர் இருந்தால் 0.1 என்ற ஆர்டர் சைசில் விளையாட ஏதுவாக இருக்கும்.

இலாப பணத்தினை அல்லது கணக்கில் இருக்கும் பணத்தினை வித் ட்ரா செய்யவும், இதே கார்டினைப் பயன்படுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பேங்க் ட்ரான்ஸ்பர் என்பதன் மூலம், நமது வங்கிக் கணக்கு எண் விவரம் மற்றும் பேங்க் SWIFT CODE ஆகியவற்றினைக் கொடுத்தாலும், நமது வங்கிக்கு ட்ரான்ஸ்பர் செய்துவிடுவார்கள். இதே முறையில் நாமும் அவர்களது வங்கிக்கு ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்.

ஆகையால் வித் ட்ரா செய்வதில் பிரச்சனை இல்லை.

==============================================================================

பேபாலில் கிரிடிட் கார்டு இல்லாமல், அக்கவுண்ட் வெரிபை ஆகவில்லையா??? என்ன சொல்கிறீர்கள்???

அப்படின்னா நான் என்ன கிரிடிட் கார்டா வைத்திருக்கிறேன்??? இல்லை.

பேபாலில் அக்கவுண்ட் அக்டிவேட் ஆக பேன் கார்டு மட்டுமே தேவை. அவ்வாறு அக்கவுண்ட் ஒபன் ஆகிவிட்டது என்றால், அடுத்து செய்ய வேண்டியது நமது பேங்க் அக்கவுண்டினை பேபால் அக்கவுண்ட் உடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்துவிட்டால், பேபாலுக்கு வரும் பணம், இரண்டு நாளில் நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.

இதற்கு நீங்கள் கிரிடிட் கார்டும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை... டெபிட் கார்டினையும் வெரிபை பண்ண வேண்டிய அவசியமில்லை.

எனது டெபிட் கார்டினையும் பேபாலில் இணைக்க முடியவில்லை. இதனால், நம்மால் பேபால் மூலம் எந்த பொருளையும் வாங்க முடியாதே தவிர, பிற தளத்திலிருந்து வரும் பணத்தினை வாங்க முடியாது, அதனை நம் வங்கிக்கு பெற்றுக் கொள்ள முடியாது என்றில்லை.

இந்தியா வங்கிகள் பெரும்பான்மையானவை பேபாலுடன் டை அப் வைத்துக் கொள்ளவில்லை... குறிப்பாக எஸ்.பி.ஐ கூட பேபாலுடன் டை அப் வைத்துக் கொள்ளவில்லை. அதனாலேயே நம்மால் டெபிட் கார்டினை இணைக்க முடியவில்லை... மற்றப்படி எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், அந்த வங்கிக் கணக்கிற்கு நமது பணத்தினை ஆன்லைன் பேங்க் ட்ரான்ஸ்பர் வழியாக அனுப்பிவிடுவார்கள்.

ஆகையால் தைரியமாக, உங்களது வங்கிக் கணக்கினை இணைத்துக் கொண்டு பேபாலினை பயன்படுத்துங்கள்.

பேபால் எல்லோரிடமும், ஆன்லைனில் பொருள் வாங்க வேண்டுமா? உங்க டெபிட் கார்டினையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கேட்பதனால்... எல்லோரும், முயற்சித்துவிட்டு, பின் வெரிபை ஆகவில்லை என கவலை கொள்கிறார்கள்... இது ஆப்சனல் தான்.... கட்டாயம் இல்லை. ஆகையால் ஸ்கிப் செய்துவிட்டு போய்கிட்டே இருங்கள்.
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by empandi » Tue Apr 30, 2013 10:17 am

சார்,வணக்கம். ரெம்ப நன்றி சார், முயற்சிசெய்து பார்கிரேன்.
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by empandi » Tue Apr 30, 2013 12:08 pm

சார்,வணக்கம் This bank account has already been added to PayPal but was not successfully confirmed. Please contact our Customer Service department for help confirming your bank account.2. பான் கார்டு not valid என்று கான்பிக்கிறது.(You have entered your existing PAN. Please enter a different one.) வேறு வழி ஏதும் இருக்கிறதா? a/c lagin ஆக முடியாதா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 12:29 pm

empandi wrote:சார்,வணக்கம் This bank account has already been added to PayPal but was not successfully confirmed. Please contact our Customer Service department for help confirming your bank account.2. பான் கார்டு not valid என்று கான்பிக்கிறது.(You have entered your existing PAN. Please enter a different one.) வேறு வழி ஏதும் இருக்கிறதா? a/c lagin ஆக முடியாதா

அக்கவுண்ட் ஒபன் செய்யும் பொழுதே, பேன் கார்டு எண் கொடுத்திருப்பீர்கள் அல்லவா, பின் ஏன் இப்போதும் முயற்சி செய்கிறீர்கள்???

பேங்க் அக்கவுண்ட் ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டது என்றால், உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஒர் 2 ரூபாயோ 3 ரூபாயோ அனுப்பி இருப்பார்கள் அல்லவா? அதனைப் பார்த்து, அதிலிருக்கும் ரிமார்க்ஸ் கோடினைக் கொடுத்தால் தானே அக்கவுண்ட் வெரிபை ஆகும்!!! அதனைச் செய்தீர்களா?

அக்கவுண்ட் ஒபன் ஆனப் பின்னர் தானே பேங்க் அக்கவுண்ட் இணைக்க முடியும்??? அப்படியிருக்கும் பொழுது இப்போது லாக்கின் ஆவதில் உங்களுக்கு என்னப் பிரச்சனை??
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by dhaya1982 » Tue Jun 11, 2013 1:27 pm

வணக்கம் திரு.ஆதி சார்
Buy / Sell Order செய்தபிறகு Profit ற்காக காத்துகொண்டிருக்கிறோம் நாம் எதிர்பார்த்தபடி Profit காண்பித்தால் close செய்துகொள்கிறோம்.
1. ஒருவேளை negative சென்றுகொண்டிருந்தாள் [Real A/c ஆக இருந்தால் ] Balance போய்விடும்தானே ?

2.அல்லது Negative சென்றுவிட்டு Profit க்கு திரும்பும் என சிறிது நேரம் காத்திருந்து Close செய்து கொள்ளலாமா ?

3.மேலும் நான் செய்வது Demo A/c என்பதால் மட்டும் Negative ஆக செல்லும்போது Equity மட்டும் குறைத்து காட்டுகிறது Real A/c ல் Negative ஆக செல்லும்போது Equity மற்றும் Balance குறைத்துகட்டும் சரிதானே சார் ?

4. இதனால்தான் Stop lose மற்றும் Take profit பயன்படுத்துகிறோம் மேலும் நாம் எதிர்பார்த்த Point வருவதர்க்கு நேரமானால் Stop lose மற்றும் Take profit Set செய்கிறோம் சரிதானே சார் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by ஆதித்தன் » Tue Jun 11, 2013 1:38 pm

எல்லாமே சரியாகத் தான் புரிந்து கொண்டுள்ளீர்கள்.

நெகட்டிவ் செல்லும் பொழுது நமது கணக்கிலிருக்கும் பணம் குறைந்து கொண்டே செல்லும், அது நம் கணக்கு குறைந்தப் பற்ற தேவையான 1 பைப் பேலன்ஸ் வரைக்கும் செல்லும்... அதற்கும் மேல் நெகட்டிவ் நீடித்தால் ஆர்டர் க்ளோஸ் ஆகிவிடும். பணமும் முழுமையாகப் போய்விடும்.

ஆகையால் எப்பொழுதும், னெகட்டிவ் பைப்ஸ் கால்குலேட் செய்து ஆர்டர் சைசுக்குத் தகுந்தவாறு ஈக்குவிட்டி பேலன்ஸ் நம் கணக்கில் இருக்க வேண்டும் எனச் சொல்கிறோம். இதற்கு காரணம் நெகட்டிவ் சென்றது திரும்பவும் நாம் ஆர்டர் இட்ட புள்ளிக்கு வரும் என்பதுதான்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by dhaya1982 » Tue Jun 11, 2013 3:08 pm

நன்றி திரு.ஆதி சார்

1. தாங்கள் சொல்லும் Equity Share -சரிவிகிதபங்கு. Equity Share க்கும் இங்கு Trading ல் நாம் செய்யும் [Investment]முதலீட்டுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
திரு.ஆதி சார் அது எனக்கு தெரிவில்லை சார் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது நான் கீழ் குறிப்பிட்டுள்ளதுதானா ?

2.[1 பைப் பேலன்ஸ் வரைக்கும் செல்லும்... அதற்கும் மேல் நெகட்டிவ் நீடித்தால் ஆர்டர் க்ளோஸ் ஆகிவிடும். பணமும் முழுமையாகப் போய்விடும்.] அப்படியென்றால் signal Profit க்கு திரும்பவரும் என காத்திருக்க முடியாதா?

3.அப்படியென்றால் நாம் செய்யும் தொகையுடன் சேர்த்து கூடுதல் [இந்த கூடுதல் தொகைதானா Equity Shareஅதாவது நாம் Investment செய்யும் அதே அளவுக்கு ]தொகை நமது கணக்கில் இருக்கவேண்டுமா ?

4.நீங்கள் சொல்வது போல 1 பைப் negative சென்று profit க்கு signal திரும்புகிறது என வைத்துகொள்வோம் அந்த ஒரு பைப் சென்ற அளவுக்குமேல் நமது தொகை அதாவது அதிகமாக இருந்தால்தான் signal Profit நோக்கி வரும்போது[எந்த இழப்பும் இல்லாமல் ] profit ல் close செய்யமுடியும் அல்லது மேற்சொன்னாதர்க்கு நேர் மாறாக இருந்தால் அவ்வளவுதான் Lose முடிந்தது அப்படியா சார்


இது வரைக்கும் பயமில்லாமல் இருந்தேன் சார் தற்போது என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிட்டது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Deal & Set Take Profit for Auto Executing

Post by ஆதித்தன் » Tue Jun 11, 2013 4:20 pm

dhaya1982 wrote:
இது வரைக்கும் பயமில்லாமல் இருந்தேன் சார் தற்போது என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிட்டது
பயமிருக்க வேண்டும். அப்பொழுதுதான் சரியா சிக்னலை மட்டும் தேர்ந்தெடுத்து வெற்றி பெற முடியும்.
dhaya1982 wrote:
1. தாங்கள் சொல்லும் Equity Share -சரிவிகிதபங்கு. Equity Share க்கும் இங்கு Trading ல் நாம் செய்யும் [Investment]முதலீட்டுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
dhaya1982 wrote:
Equity என்பதனை அதன் அர்த்தத்திலே பார்க்காமல் பொதுவாக ஒர் ஊமை பாசையில் பார்க்கலாம்.

அதாவது, உங்கள் கணக்கில் பேலன்ஸ் 100 டாலர்.
நீங்கள் போட்டிருக்கும் ஆர்டர் EUR/USD-இல் 1.3200 என்ற விலையில் 10000 டாலர் வாங்கியிருக்கிறீர்கள். சுருக்கமாக 1 பைப் = 1 டாலர்.
நாம் வாங்கியிருப்பதால் மார்க்கெட், 1.3250 என விலை ஏறினால் இலாபம்... இறங்கினால் நட்டம். ஒகே..

தற்பொழுது, மார்க்கெட் 1.3150 என்றப் புள்ளிக்கு சென்றுவிட்டது என்றால், தங்களது கணக்கில் பேலன்ஸ் அதே 100 டாலர் இருக்கும். ஆனால் ஈக்குவிட்டி = 50 டாலர் காமிக்கும். காரணம், தற்போதைய விலை நிலவரப்படி 50 பைப்ஸ்= 50 டாலர் லாஸ் ஆகியிருக்கிறது. அதே நேரத்தில் ஆர்டர் க்ளோஸ் ஆகவில்லை. ஆகையால், ஆர்டர் க்ளோஸ் ஆகும் வரை நம் பேலன்ஸில் உள்ள பணம் போகாது.

அதே நேரத்தில்.... மார்க்கெட் 1.3100 என்றப் புள்ளிக்குச் சென்றுவிட்டால் ... ஈக்குவிட்டி = 0 / 2 பைப்ஸ் . அப்படி ஈக்குவிட்டி ஜிரோ அல்லது 2 பைப்ஸ் பேலன்ஸ் இல்லாமல் போய்விட்டது என்றால் ஆர்டர் க்ளோஸ் ஆகிவிடும். மொத்த லாஸ்.

இல்லை, மார்கெட் 1.3110 என்றப் புள்ளிக்குப் போனது மீண்டும் திரும்பி ஏற ஆரம்பித்து...1.3250 என வந்தால் உங்களுக்கு நஷ்டமில்லை இலாபம் தான். ஏனென்றால், மார்க்கெட் நெகட்டிவ்வான 90 டாலரை உங்களது பேலன்ஸ் தாங்கிக் கொண்டது மட்டுமில்லாமல், தற்பொழுது இலாபத்திற்கு சென்றுவிட்டது.

அதைப்போல், மார்க்கெட் கண்டு இவ்வளவு அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் திடீர் உச்சம்/டவுன் என்பது 200 பைப்ஸ் தான். ஆகையால் தான் 500 பைப்ஸ் ஈக்குவிட்டியுடன் சிக்னல் பார்த்து ட்ரேடிங்க் செய்தால் நஷ்டம் வராது. அதுவும் நாங்கள் சொல்லும் திசையினை கொஞ்சம் யோசித்து செய்தால் நஷ்டம் வராது.

என்று ஒவ்வொரு வாரமும் மார்க்கெட் நிலவர அலசல் தொடர்ந்து வரும் பதிவினை, ட்ரேடிங்க் செய்ய விருப்பம் உள்ள நீங்கள் படித்துக் கொண்டு வருகிறீர்களா? கடந்த ஒர் மாதத்தில் மார்க்கெட் விலை என்ன நிலைக்கு எல்லாம் சென்று வந்துள்ளது என்பது தெரியுமா?

இப்படி பதிவுகளைத் பின் தொடராமல் செய்தால், ஏதோ ஒன்றினைப் பிடித்துக் கொண்டு, உங்கள் விருப்பத்தில் சென்றால், மற்றொருபக்கம் தெரியாது... கவனமாக மற்ற பதிவுகளையும் பாருங்கள்.

dhaya1982 wrote: அப்படியென்றால் signal Profit க்கு திரும்பவரும் என காத்திருக்க முடியாதா?
கண்டிப்பாக திரும்பும், நீங்கள் சரியான ரெசிஸ்டன்ஸ்/பாட்டம் லைனில் ஆர்டர் போட்டிருந்தால்... நடுவில் போட்டால், கால தாமதம் அதிகம் ஆகும். அதற்கு ஏற்ற ஈக்குவிட்டியினையும் நீங்கள் கூட்டிக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும். ஆகையால், அவ்வப் பொழுது சிக்னல் பார்த்து சரியாக ஆர்டர் போட்டு, அவ்வப் பொழுது வெளியேறிவிட வேண்டும்.
dhaya1982 wrote: 3.அப்படியென்றால் நாம் செய்யும் தொகையுடன் சேர்த்து கூடுதல் [இந்த கூடுதல் தொகைதானா Equity Shareஅதாவது நாம் Investment செய்யும் அதே அளவுக்கு ]தொகை நமது கணக்கில் இருக்கவேண்டுமா ?
நாம் இன்வஸ்மெண்ட் செய்த தொகையைத்தான் ஈக்குவிட்டிக்கு கால்குலேட் செய்கிறோம்... ஆகையால், நெகட்டிவ் வாய்ப்பு எவ்வளவு பைப்ஸ் இருக்கிறது என்பதனைப் பார்த்து, அதற்குத் தகுந்த பேலன்ஸ் நம்மிடம் இருந்தால் மட்டும் ஆர்டர் போட்டுக் கொள்ளலாம். கூடுதல் பணம் போட்டு ஆடுவது என்பது உங்களுடைய விருப்பம். ஆனால், மார்க்கெட்டில் விளையாட குறைந்தப்பட்ச தொகை 100 வைத்துக் கொண்டும், ஆயிலில் விளையாட முடியும் என்றாலும், கரன்சியில் விளையாட 300 டாலர் நல்லது.

dhaya1982 wrote: 4.நீங்கள் சொல்வது போல 1 பைப் negative சென்று profit க்கு signal திரும்புகிறது என வைத்துகொள்வோம் அந்த ஒரு பைப் சென்ற அளவுக்குமேல் நமது தொகை அதாவது அதிகமாக இருந்தால்தான் signal Profit நோக்கி வரும்போது[எந்த இழப்பும் இல்லாமல் ] profit ல் close செய்யமுடியும் அல்லது மேற்சொன்னாதர்க்கு நேர் மாறாக இருந்தால் அவ்வளவுதான் Lose முடிந்தது அப்படியா சார்
ஆமாம்.

ஆனால், இவ்ளவு நெகட்டிவ் போகும் என்று தெரிந்து கொண்டு தானே நாம் ஆர்டர் போடுகிறோம்.. ஆகையால், நெகட்டிவ் சென்றாலும் திரும்பும் நிலையில் இலாபம் பார்த்துக் கொள்ளலாம்.

எவ்வளவு பாயிண்ட் நெகட்டிவ் இன்று போக வாய்ப்பிருக்கிறது, என்ற சிக்னல் பார்க்கத் தெரிந்தவர்கள் சரியாக ஈக்குவிட்டி கணக்கிட்டு இலாபம் பார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, நம் பணத்தில் 30% அல்லது அதற்கு குறைவான நெகட்டி பாயிண்ட் உள்ள இடத்தில் மட்டும் நம்பிக்கையோடு ஆர்டர் போட்டு இலாபம் ஈட்டிக் கொள்ளலாம். இப்போ ஆர்டர் போடுன்னு யாரும் உங்களைச் சொல்வதில்லை... சரியான விலைப்புள்ளி கிடைக்கும் பொழுது மட்டும் ஆர்டர் போடுங்கள்... இலாபங்கள் சம்பாதியுங்கள்...

குறிப்பாக ஆயில் இதற்கு உதவியாக இருக்கும்.

அதைப்போல், நமக்கான நஷ்டத் தடைப்பை (Stop Loss) நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனும் பொழுது, நஷ்டம் வந்தால் அது நம்முடைய தவறாகத்தான் முடியும்.

சும்மா சும்மா ஆர்டர் போட்டா நடப்பது இயற்கைக்கே வெளிச்சம்.


எதுவும் எளிதுமல்ல..., எவரும் நமக்கு சும்மா இலாபத்தினைக் கொடுப்பதுமல்ல.

நம் திறமையைக் காட்டி நாம் தான் வெல்ல வேண்டும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”