ரிஜிஸ்டர் செய்தவர்கள், ட்ரேடிங்க் சர்வர்க்கான டொமோ அக்கவுண்ட் ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் ஆகிய மூன்றினையும் மெயிலுக்குப் பெற்றிருப்பீர்கள். அதனைக் கொண்டு ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் சர்வர் PlatForm Meta Trader லாக்கின் ஆகுங்கள்.
லாக்கின் ஆனவுடன் மேல் உள்ள படத்தில் இருக்கும் அதே விண்டோ ஒபன் ஆகும். அந்த பக்கத்தில் வரிசையாக ஒவ்வொன்றாக செய்யுங்கள்.
[youtube]https://www.youtube.com/watch?v=5ZWa73mGiWU[/youtube]
1. முதலில் நாம் ட்ரேடிங்க் செய்யப் போகின்ற கரன்சி பேர் நேமைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 70-க்கும் மேற்பட்ட ட்ரேடிங்க் கரன்சி/ஆயில்/தங்கம்/சில்வர் என பல ப்ராடக்ட் இருந்தாலும் நாம் தேர்ந்தெடுப்பது மேஜர் பேர் எனச் சொல்லப்படும் EUR/USD எனப்படும் கரன்சியைத்தான் தேர்ந்தெடுத்து ட்ரேடிங்க் செய்யப் போகிறோம். ஏனெனில் இதுதான் பலரால் செய்யப்படுவது மட்டுமின்றி, எளிதாக சிக்னலும் பெற்றுக் கொள்ளலாம்.
2. இரண்டாவது ஆர்டர் சைஸ். செல்/பை ஆகிய டீல் ஆப்சனுக்கு நடுவில் இருக்கும் 1 என்ற நம்பரை, மைனஸ் பட்டனைக் கிளிக் செய்து 0.1 என்ற நம்பருக்கு கொண்டு வாருங்கள். 0.1 என்றால் 10,000 USD என்று அர்த்தம், அதுவே பைப் கணக்கில் கால்குலேட் செய்தால், 1 பைப் = 1 டாலர். நாம் குறைந்த தொகையினைக் கொண்டு ட்ரேடு செய்வதால் எப்பொழுதும் சிறிய சைசினைக் கொண்டு ஆர்டர் செய்யுங்கள்.. உங்கள் கணக்கில் 1000 டாலர் இருந்தால், 0.2 என்ற சைஸ் தேர்வு செய்து கொள்ளுங்கள்... 1500 டாலர் இருந்தால் 0.3 சைஸ்... இப்படி ஒவ்வொரு 500 டாலருக்கும் 0.1 வால்யூம் என நமது பேலன்ஸ்க்குத் தகுந்தவாறு ஆர்டர் சைஸ் தேர்வு செய்து கொண்டால் அதற்குத் தகுந்த இலாபம் சம்பாதிக்கலாம். எ.கா. 0.3 என்ற ஆர்டர் சைசில் ஒர் டீல் போட்டால், ஒர் பைப்பிற்கு 3 டாலர் இலாபம்/நட்டம் கிடைக்கும். 10 பைப் இலாபத்தோடு க்ளோஸ் செய்கிறோம் என்றால் 30 டாலர் ப்ராபிட். அதுவே, 0.1 சைஸ் என்றால் 10 டாலர் ப்ராபிட். ப்ராபிட் அதிகம் வேண்டும் என்பதற்காக பேலன்ஸ் 500 டாலர் வைத்துக் கொண்டு பெரிய சைஸ் ஆர்டர் போட்டால் சிக்கல் உண்டாகி பணம் எல்லாம் போய்விடும்... ஆகையால், ட்ரேடிங்க் விண்டோவினை திறந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது, EUR/USD என்ற கரன்சி பேர் சரியாக இருக்கிறதா? எனப் பார்த்தல்... அடுத்து ஆர்டர் சைஸ் வேலிவ் 0.1 தான் இருக்கிறதா? 1.0 என இருந்தால் முதலில் மைனஸ் செய்து 0.1 என்ற லெவலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும்.
3. மூன்றாவது ஸ்டெப் மேலிருக்கும் மவுஸ் படத்தில் 2 என இருந்தால், அதன் மீது ஒர் கிளிக் செய்து, ஒபன் விண்டோவில் AGREE என்ற பட்டனை கிளிக் செய்துவிடுங்கள்... இப்பொழுது மவுஸ் மீது நம்பர் 1 என மாறிவிடும். இதன் மூலம், நாம் செல் ஆர்டர் போட வேண்டும் என்றால், ஆர்டர் சைஸ் அருகில் இருக்கும் செல் என்பதனை ஒர் கிளிக் செய்தால் போதும், செல் ஆர்டர் புக் ஆகிவிடும்... அதைப்போல் பை ஆர்டர் போட வேண்டும் என்றால், பை ஆர்டர் மீது ஒர் கிளிக் செய்தால் பை ஆர்டர் புக் ஆகிவிடும்... இப்படி ஒர் கிளிக்கில் எளிதாக விரைவாக ஆர்டர் புக் செய்வதற்காக 1 கிளிக் ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3.a) ஆர்டர் செய்ய தயாராகியாற்றி, அடுத்து எந்தப் பாயிண்டில் ஆர்டர் போடுவது??? க்ராப்பினைப் பாருங்கள்.. இப்பொழுது மார்கெட் அப் ஆகுதா? டவுன் ஆகுதா? அடுத்த மூவ் மெண்ட் எப்படி இருக்கும்??? என்ன ஆர்டர் போடலாம் என்பதனை நிதானமாக சிந்தியுங்கள்.. இப்பொழுது மார்கெட் பாயிண்ட் என்ன எனப் பாருங்கள்.
3.b) எப்பொழுதுமே சார்ட் 1 hour என்ற டைமிங் பாட்டம் பாயிண்டுடன் தான் திறக்கும்... அதனை நீங்கள் 1 minute, 5 minute ... எனத் தேர்வு செய்து... மார்கெட் அவ்வப் பொழுது எப்படி மூவ்மெண்ட் ஆகியிருக்கிறது என அலசி ஆராய்ந்துவிட்டு நிதானமாக, ஆர்டர் புக் செய்யத் தயாராகுங்கள். பின் பை/செல் என ப்ராபிட் கொடுக்கும் ஆர்டரை தேர்வு செய்து புக் செய்யுங்கள்... அப்பொழுது மார்கெட்டில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறதோ, அந்த பாயிண்ட்-இல் ஆர்டர் புக் ஆகும்...(2பைப் Spread உண்டு)
4) மார்கெட் நிலவரப் பாயிண்ட் ஓடிக் கொண்டே இருக்கும்... எந்த பாயிண்ட் ஆர்டர் போட வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த பாயிண்ட் வந்தவுடன் ஒர் கிளிக் செய்துவிடுங்கள்... அவ்ளதான் ஆர்டர் புக் ஆகிவிடும்.
5) பை/செல் என ஆர்டர் கிளிக் செய்ததும், திறந்த ஆர்டர் சார்ட் விண்டோவுக்கு கீழ் காண்பிக்கப்படும். நீங்கள், ஒபன் பொசிசன்ஸ் என்பதனைக் கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
6) ஓபன் பொசிசன் ஆர்டர் நாம் ஆர்டர் புக் செய்திருந்தால் காண்பிக்கப்படும்.. அதன் அருகவே CLOSE என்ற ரெட் பட்டன் இருக்கும்... எப்பொழுது ஆர்டர் ப்ராபிட்டுடன் காண்பிக்கிறதோ, அப்பொழுது வேண்டும் என்றால் உடனே அந்த ரெட் பட்டன் மீது ஒர் கிளிக் செய்து க்லோஸ் செய்து கொள்ளலாம். அல்லது எப்பொழுது விரும்புகிறமோ, அப்பொழுது க்ளோஸ் செய்து கொள்ளலாம். நம் நோக்கம் இலாபம் என்பதால், பச்சைக்கலரில் இலாபத்துடன் டாலர் ஓட ஆரம்பித்தததும் க்ளோஸ் செய்து கொள்ளுங்கள்.
இன்று சனிக்கிழமை மார்கெட் லீவ் என்பதால், என்னால் புதிய டீல் ஒபன் செய்து காண்பிக்க முடியவில்லை. அடுத்த பாகத்தில் ஓபன் செய்த ஆர்டரில் எப்படி டேக் ப்ராபிட் என்று ப்ராபிட் பாயிண்ட் கொடுத்து ஆட்டோமெட்டிக்காக ஆர்டரை க்ளோஸ் செய்ய வைக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்.
இப்போதைக்கு நீங்கள், டொமோ அக்கவுண்டிற்குள் லாக்கின் ஆகி, ஆர்டர் புக் செய்யுங்கள்... ஆர்டர் இலாபத்துடன் வந்ததும் க்ளோஸ் செய்யுங்கள்.. மீண்டும் அடுத்தப் பாகத்தில் சந்திப்போம்..
நன்றி.