மார்கெட் தொடங்கியது = 1.3111
மார்கெட் முடிவுற்றது = ~~~1.305
அதாவது கிட்டத்தட்ட 50 பைப் கரடி கெயின் பண்ணியிருக்கிறது..
வாரத்தின் உச்சம் = 1.3201
வாரத்தின் மட்டம் = 1.3001
சுருக்கமாகச் சொன்னால், இந்த வாரம் மார்கெட் 200 பைப் மேல் கீழ் என ப்ளக்சிபுள் கொண்டு ஆட்டம் போட்டியிருக்கிறது.
இந்த சார்ட் வைத்துக் கொண்டுதான் அடுத்தக்கட்ட மூவ்மெண்ட் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு ஃபோரக்ஸ் PRO அல்லது எக்ஸ்பர்ட் எனப்படும் சிறந்த வெற்றியாளர்கள் தீர்மானிக்கிறார்கள். ஏன் டேட்டாக்களை கலெக்ட் செய்பவர்களும், இந்த சார்ட் மூவ்மெண்ட்க்குத் தகுந்தவாறே அடுத்தக்கட்ட மூவிங்க் பாயிண்ட் தேர்வு செய்கிறார்கள்.
அதன்படி அடுத்த வாரத்தின் முதல் நாளும் இதே பாட்டம்/ரெசிஸ்டன்ஸ் லைன் ஆகியவற்றினைக் கொண்டுதான் ஆர்டர் மூவ்மெண்டைக் கணிக்க இருக்கிறார்கள். நாமளும் இந்த சார்ட்டைக் கொண்டு வாரத்தின் ஓய்வில் அலசினால், வரும் வாரங்களில் சிறப்பாக ஆர்டர் செய்து தோல்வி இல்லாமல் வெற்றியடையலாம்.
அதன்படி அலசலைத் தொடர்வோம்!
இந்த சார்ட்டில் பிவோட் பாயிண்ட் எனச் சொல்லப்படும் மத்திப் பாயிண்டான 1.3100 என்ற இடத்தில் நீங்கள் பை ஆர்டர் போட்டாலும், செல் ஆர்டர் போட்டாலும் சரி இலாபம். பின் ஏன் பிவோட் பாயிண்டை மட்டும் சொல்லி ஏதோ ஆர்டர் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் ... ரெசிஸ்டன்ஸ் ... பாட்டம் என தேடி அழைகிறோம்???
டபுள் பாட்டம் அல்லது டபுள் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் அடுத்தடுத்து ரிட்டர்ன் வந்தால் அடுத்த மூவ் எதிர் திசையில் இருக்கும் என்று இன்று மாலை சொன்னேன் நினைவிருக்கலாம். அதனை மேலும் உறுதியாக்கும் விதமாக இந்த வரைபடத்திலும் உச்ச உயரத்தினை ஆரம்பிக்கும் முன் பாட்டம் லைனை மீண்டும் மீண்டும் வந்து பார்த்திருப்பதனைப் பாருங்கள். அதைப்போல், இறக்கத்தினை கொடுப்பதற்கு முன்னும் இரண்டாவது முறையாக உச்சத்தினை தொட்டிருப்பதனைப் பாருங்கள். (குறிப்பு: அதற்காக எல்லா இடத்திலும் இதைப்போல் நடக்கும் என்பது இல்லை... 80% நம்பலாம்)
இது மிக முக்கியம் ... மார்கெட் உச்சத்திலிருந்து இறங்கியதினைப் பாருங்கள்... 1.3120 என்ற இடத்தில் திரும்பி ஏறும் என நினைத்து ஆர்டர் ப்ளேஸ் செய்வதற்குள்.... கீழாக இறங்கி ... 20 நிமிடத்தில் 80 பைப்ஸ் கீழே சென்று 1.3040 என்ற இடத்திற்கு சென்று விட்டது... ஒர் வேளை நீங்கள் 15 பைப்ஸ் ஸ்டாப் லாஸ் கொடுத்து பை ஆர்டர் போட்டிருந்தால்? 15 டாலர் அவுட்... இல்லை ஸ்டாப் லாஸ் கொடுக்காமல் விட்டு கணக்கில் 50 டாலர் மட்டும் இருந்தால்? எல்லாமே அவுட்!!! இந்த சட்டன் மூவ்மெண்ட் நேரத்தில் உங்களால் லாஸ் ஆகிறது என்று க்ளோஸ் செய்ய டென்சனுடன் முயற்சிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிடும். அதுவே, நிறைந்த ஈக்குவிட்டி/பேலன்ஸ் நம் கணக்கில் இருந்தால்? மார்கெட் என்னும் இறங்குகிறது... 120 பைப் ஆர்டர் லாசில் இருக்கிறது.... ஆனாலும், ஆர்டர் ரன் ஆகிக் கொண்டே இருக்கிறது... இறங்கியது பின்னர் நிதானமாக மேலே ஏறுகிறது.... இரண்டு நாள் கழித்து மீண்டும் நாம் ஆர்டர் போட்ட இடத்திற்கே வந்துவிட்டது. அதாவது 5 பைப் இலாபத்திற்கு வந்துவிட்டது... இந்த நேரத்தில் என்னும் உயரட்டும் என பார்க்கக் கூடாது ஒர் பைப் கிடைத்தாலும் போதும்டா என க்ளோஸ் செய்துவிட வேண்டும்... ஏனெனில் நமது மொத்த இலாபம் 120 பைப்!! ஆகையால் தான் எப்பொழுதும் ஸ்டாப் லாஸ் கொடுக்க வேண்டாம். இலாபத்தினை மட்டும் குறைவாக எதிர்பாருங்கள்... நெகட்டிவ் பாயிண்டை நிறைய எதிர்பாருங்கள், என்று நான் சொல்லிக் கொள்வது. அதைப்போல் இறங்குவது மீண்டும் திரும்புவது என்பது, அதன் இறக்கத்தில் 50% இறக்கத்தினை பின் ஏறி கழித்துவிடும் என நம்பலாம்... அதற்கு மேலும் வரும் என காத்திருப்பது தவறு.
இது நீங்கள் இடையில் போட்டதால் தப்பித்தீர்கள்... அதுவே, உயருகிறது என்பதற்காக உச்சத்தில் இருக்கும் பொழுது பை என ஆர்டர் புக் செய்துவிட்டால்... திரும்பும் என்பது மார்கெட்டின் ஒவர் ஆல் மூவ்மெண்ட் பொறுத்துத்தான். அதாவது மார்கெட் கரடி முகம் என்றால் 1.279 என்ற பாயிண்டை நோக்கிச் செல்லும் பொழுது 1.3100 என்பதே இப்போதைய உச்சம்... இல்லை மார்கெட் என்னும் காளை முகத்தினை இழக்கவில்லை என்றால் 1.3400 வரை உச்சம் இருக்கிறது. ஆகையால் பயம் இல்லை. தானாக அடுத்த இரண்டு மூன்று நாட்களில் இப்போதைய 1.3200 உச்சத்தினை தொட்டுவிடும். சரி, கரடி முகம் அப்படியென்றால் என்ன செய்வது????
தவறுதலாக போட்டுவிட்டோம் என்பது முதல் 10 பைப்பிற்குள் தெரிந்தால் க்ளோஸ் செய்து கொள்ளலாம். இல்லை, சரியாகத்தான் போட்டேன், மார்கெட் திடீர் அலை உள்வாங்கிவிட்டது என்றால், கரடி முகம் என்றாலும் ஆர்டரை அவவசரப்பட்டு க்ளோஸ் செய்ய வேண்டாம். நீங்கள் போட்டது பை ஆர்டர் தானே! ஒகே, இப்போ மார்கெட் கடைசி உச்சத்தினை எட்டுகிறது எனப் பாருங்கள் .... அதாவது 1.3100 கடைசி உச்சம் என தெரிகிறது... நமக்கு 100 பைப் லாஸ். சரி கரடி முகம், ஆகையால் அடுத்து 1.295 என்ற டார்கெட்டை நோக்கி கீழ் இறங்கும். இப்போ 1.3100 என்ற இடத்தில் ஒர் செல் ஆர்டர் போடுங்கள். அதன் ப்ராபிட்டை 1.3030 வரை போடுங்கள்.. ஆகையால் மார்கெட் மேலும் 70 பைப் இறங்கும் பொழுதும் உங்களுக்கு லாஸ் இல்லை, ப்ராபிட்டும் இல்லை. உச்சக்கட்ட பாட்டத்தினை தொட்டுவிட்டது என்னும் பொழுது செல் ஆர்டரை க்ளோஸ் செய்துவிடுங்கள்.... சோ, இதுவரைக்கும் இறங்குவதனால் ஏற்படும் லாசினைத் தடுத்தாகிவிட்டது.. இப்பொழுது மார்கெட் மீண்டும் உயர ஆரம்பிக்கும்... அதாவது வந்த இடத்திற்கே திரும்பாவிட்டாலும் 60% உறுதியாக உச்சக்கட்ட பாட்டத்திலிருந்து திரும்பும். நீங்கள் ஏற்கனவே சரியான பாட்டம் தெரியாமல் 80%ல் க்ளோஸ் செய்தாலும் ... பொறுமையாக இருந்து.... 60இல் 20 போக... மீதம் 40% ஐ ப்ராபிட்டாக மாற்ற மார்கெட் திரும்புவதற்காக காத்திருங்கள்... இப்பொழுதும் முழுமையான உச்சத்தினை தொடும் வரை காத்திராமல் ... ஒர் 25% வந்தவுடன் மீண்டும் ஒர் செல் ஆர்டர் போடுங்கள்....
இப்போ, 100 பைப் லாஸ் என்பது 75 பைப்ஸ் லாஸ் என்ற லெவலுக்கு வந்திருக்கும்... இப்பொழுது மீண்டும் மார்கெட்டை நன்றாக வாட்ச் செய்து கொண்டே வாருங்கள்... மார்கெட் கரடி முகம் என்றால் மட்டுமே செல் ஆர்டர் போட்டு லாசை தடுத்து ரிட்டன் ப்ராபிட் பார்க்க வேண்டும்.... காளை முகம் என மாறும் பொழுது ஆர்டர் போடக்கூடாது. இப்படி நிதானமாகவும்.... முழுமையான மார்கெட் அனலைசிஸ் ரிப்போர்ட் பார்த்தப்படியும் இருந்தால்.... எளிதாக ஏற்ற இறக்கத்தில்... 5 பைப் ... 5 பைப் என ஆர்டரை எதிரில் போட்டு மொத்த நெகட்டிவ் பைப்பையும் ப்ளஸ் ஆக மாற்றிவிட்டு.... ஆர்டரை க்ளோஸ் செய்து கொள்ளலாம்.
இப்படி எல்லாம் விளையாடி... எந்த நேரத்திலும் இழப்பு இல்லாமல் தப்பிக்க வேண்டும் என்றால் நம் கணக்கில் பேலன்ஸ் இருக்க வேண்டும்... இல்லாவிடில் மேலும் ஆட முடியாமல் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். ஆகையால் எப்பொழுதுமே 500 பைப்ஸ் ஈக்குவிட்டியுடன் ட்ரேடிங்க் விளையாட்டினை ஆட ஆரம்பியுங்கள்.
நீங்களும் மேலும் அலசுங்கள் ... உங்கள் ஆலோசனையும் கூறுங்கள்..