பொருள் வர்த்தகம் நிலவரம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பொருள் வர்த்தகம் நிலவரம்

Post by ஆதித்தன் » Mon Jun 10, 2019 10:09 am

கச்சா எண்­ணெய் விலை, சர்­வ­தேச சந்­தை­யில், முந்­தைய இரு வாரங்­க­ளாக சரி­வில் வர்த்­த­க­மா­கி­யது. கடந்த வார ஆரம்ப நாட்­களில், விலை சரிந்து, 1 பேரல், 50 அமெ­ரிக்க டாலரை எட்­டி­யது.வார இறுதி நாட்­க­ளான, வியா­ழன் மற்­றும் வெள்­ளி­யில், விலை­யேற்­றம் காணப்­பட்டு, வார முடி­வில், 1 பேரல், 54 அமெ­ரிக்க டாலர் என்ற நிலை­யில் வர்த்­த­கம் முடி­வுற்­றது.


உல­கின், இரண்­டா­வது மிகப் பெரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான, சவுதி அரே­பியா மற்­றும் வளை­குடா நாடு­களின் எண்­ணெய் உற்­பத்தி கூட்­ட­மைப்­பான, ‘ஒபெக்’ இணைந்து, கடந்த ஆண்டு டிசம்­ப­ரில், தின­சரி எண்­ணெய் உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை எடுத்­தன.
இந்த உற்­பத்தி குறைப்பு முடிவு, இம்­மாத ஜூன் இறு­தி­யில் காலா­வதி ஆக உள்­ளது. இந்­நி­லை­யில், இம்­மாத இறு­தி­யில் நடை­பெற உள்ள கூட்­டத்­தில், உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை மீண்­டும் நீட்­டிக்க வாய்ப்பு உள்­ள­தாக, அறி­விப்பு வெளி­யா­னது.


பொது­வா­கவே, விலை­யில் கடு­மை­யான சரிவு வரும்­போது, உற்­பத்தி நாடு­கள், விலை சரிவை கட்­டுக்­குள் கொண்டு வர­வும், அந்­நாட்டு சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­களை நஷ்­டத்­தி­லி­ருந்து காக்­க­வும், அவர்­க­ளது உற்­பத்­தியை குறைப்­பர். இத­னால், சந்­தை­யில் தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்தி, விலை­யேற்­றத்தை உறுதி செய்ய திட்­ட­மி­டும்.


இதன்­படி, ஜூன் மாதத்­திற்கு பின், உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்கை தொட­ரும் என்ற கருத்து வெளி­யாகி, அதன் கார­ண­மாக, வார இறுதி நாளில், 4 சத­வீ­தத்­துக்கு மேல் விலை உயர்வு நிகழ்ந்­தது.ஈரான் மற்­றும் வெனி­சுலா நாடு­கள் மீது, அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள பொரு­ளா­தார தடை கார­ண­மாக, கச்சா எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­மதி, கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.


மேலும், லிபிய நாட்­டின் உற்­பத்­தி­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மா­க­வும், சந்­தை­யில் எண்­ணெய் தட்­டுப்­பாடு நில­வும் என்ற அச்­சத்­தில், விலை உயர்ந்து, வர்த்­த­க­மாகி வரு­கிறது. வெனி­சுலா நாட்­டின் தின­சரி உற்­பத்தி, 2.7 லட்­சம் பேரல்­கள் குறைந்து, மார்ச்
மாதத்­தில், மொத்த தின­சரி உற்­பத்தி, 7.32 லட்­சம் பேரல்­கள் ஆக இருந்­தது.


மேலும், ஈரான் நாட்­டின் உற்­பத்தி, 27 லட்­சம் பேரல்­கள் என்ற நிலை­யில் உள்­ளது.அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் குறித்து, இரு நாடு­க­ளுக்­கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வரு­கிறது. மேலும், இரு நாட்டு தலை­வர்­களும் நேரில் பேச்சு நடத்த உள்­ள­னர். இந்த பேச்­சில் சுமு­க­மான உடன்­பாடு ஏற்­படும் என்­றும், பொரு­ளா­தார வளர்ச்சி மீண்­டும் பழைய நிலைக்­குத் திரும்­பும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.



இத­னால், தொழிற்­சாலை தேவை மற்­றும் கச்சா எண்­ணெய் தேவை உய­ரும் என்ற கருத்­தும், விலை உயர்­வுக்கு கார­ண­மாக அமைந்­தது.


தங்கம் வெள்ளி


உல­க­ள­வில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த இரு வாரங்­க­ளாக, உயர்ந்த வண்­ணம் உள்­ளது. கடந்த வாரம், 1 அவுன்ஸ் தங்­கம், 1,500 அமெ­ரிக்க டாலர்­களை தாண்டி வர்த்­த­க­மா­கிறது.அமெ­ரிக்­கா­வில், புதி­தாக பணி­யில் அமர்த்­தப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை குறித்து, மாதம் ஒரு முறை, அறிக்கை வெளி­வ­ரும்.



இந்த அறிக்கை, கடந்தவியா­ழன் அன்று வெளி­யா­னது.இதில், கடந்த மே மாதத்­தில், அதற்கு முந்­தையஏப்­ரல் மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது, மிகக்குறை­வா­கவே இருந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது.இத­னால், அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தார வளர்ச்சிமந்­த­மாக உள்­ளது என்ற கருத்­தா­லும், வரும்காலங்­களில் வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­ட­லாம் என்ற கருத்து கார­ண­மா­க­வும், தங்­கம் விலை அதி­க­ரித்­தது.


அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு சரிவு கார­ண­மா­க­வும் தங்­கம் மற்­றும் வெள்ளி விலை மேலும் உயர ஆரம்­பித்­தது. கடந்த இரு வாரங்­களில் மட்­டும், 1 அவுன்ஸ் தங்­கம், 60
அமெ­ரிக்க டாலர் வரை அதி­க­ரித்­தது.அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே
நடக்­கும் வர்த்­தக மோதல் கார­ண­மாக, இரு நாடு­களின் ஏற்­று­மதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இச்­சூ­ழ­லில், உல­கின் மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார நாடு­களின் வளர்ச்சிகுறை­யும் என்ற கணிப்­பால், தங்­கத்­தின் மீதானமுத­லீட்டு ஆர்­வம், முத­லீட்­டா­ளர்­க­ளி­டையேஅதி­க­ரித்­தது. இது­வும், சந்­தை­யில், தங்­கத்­தின் விலை உயர்­வுக்கு ஒரு கார­ண­மாக அமைந்­தது.

வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் சூழ­லில், அரசு சார்ந்த கரு­வூ­லங்­களில் ஆதா­யம் உய­ரும் என்ற கார­ணத்­தால், பொது­வா­கவே முத­லீட்­டா­ளர்­கள் தங்­கம் மீதான முத­லீட்டை குறைத்து, அரசு கரு­வூ­லங்­களில் அதிக முத­லீடு செய்­வது வழக்­க­மா­கும். எனவே தான், வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் போது, தங்­கத்தை நல்ல முத­லீட்டு பொரு­ளாக கருதி, சர்­வ­தேச அள­வில்,
முத­லீட்­டா­ளர்­கள், அதில் முத­லீடு செய்­கின்­ற­னர்.

வட்டி விகி­த­மும், தங்­கம் விலை­யும் எதிர்­ம­றை­யான போக்கை கொண்­டவை. வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் போது, தங்­கத்­தின் மீதான முத­லீட்டு ஆர்­வம் குறைந்து, அரசு சார்ந்த முத­லீ­டு­களில் அதி­க­மாக முத­லீடு செய்­வர் முத­லீட்­டா­ளர்­கள்.அதே­போல, வட்டி விகி­தம் குறை­யும் போது, தங்­கம் மீதான முத­லீடு அதி­க­ரிக்­கும். 2004ல் அமெ­ரிக்­கா­வின் வட்டி விகி­தம், 5.5 சத­வீ­த­மாக இருந்­தது.



அப்­போது, 1 அவுன்ஸ் தங்­கத்­தின் விலை, 280 அமெ­ரிக்க டால­ராக இருந்­தது. பின்­னர் படிப்­ப­டி­யாக வட்டி விகி­தம் குறைக்­கப்­பட்டு, 0.25 சத­வீ­தம் வரை எட்­டி­யது.அப்­போது தங்­கத்­தின் விலை, 1 அவுன்ஸ், 1,920அமெ­ரிக்க டாலரை எட்­டி­யது.தற்­போது வட்டி விகி­தம், 2.5 சத­வீ­த­மாக உள்­ளது.


பன்­னாட்டு நிதி­யம், உலக பொரு­ளா­தா­ரம், நடப்பு ஆண்­டில், முந்­தைய, 3.5 சத­வீ­தத்­தி­லி­ருந்து குறைந்து, 3.3 சத­வீ­த­மாக இருக்­கும் என்று தெரி­வித்­தது. மேலும், அமெ­ரிக்க பொரு­ளா­தார வளர்ச்சி, 2.5 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 2.3 சத­வீ­த­மாக இருக்­கும் என்­றும் அறி­வித்­தது.இந்த அறி­விப்­புக்­குப் பின், பொரு­ளா­தார வளர்ச்சி குறை­யும் என்ற கோணத்­தில், முத­லீட்­டா­ளர்­கள், தங்­கம் மற்­றும் வெள்ளி மீதான முத­லீட்டை அதி­க­ரித்­த­னர். இதன் கார­ண­மாக, வார இறுதி நாளில் விலை உயர்ந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. வரும் நாட்­க­ளி­லும், தங்­கத்­தின் விலைக்கு சாத­க­மாக இது அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


செம்பு


செம்பு விலை­யா­னது, தொடர்ந்து ஆறு வாரங்­க­ளாக சரிந்து, வர்த்­த­க­மாகி வரு­கிறது. அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்ந்­தது, இதற்கு முக்­கிய கார­ணம்.மேலும், சீனா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் கார­ண­மாக, ஏற்­று­மதி பாதிப்­புக்­குள்­ளாகி இருக்­கிறது. இத­னால், தொழிற்­சாலை கனி­மங்­க­ளான, செம்பு, இரும்பு, துத்­த­நா­கம், கார்­பன் போன்ற, அனைத்து தொழிற்­சாலை மூல­த­னப் பொருட்­களின் விலை­களும் சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கின்றன.


லண்­டன் பொருள் வணிக சந்­தை­யில், தொழிற்­சா­லை­களின் குறி­யீட்டு எண், 2015ம் ஆண்­டுக்­குப் பின், முதன்­மு­றை­யாக, 3 சத­வீ­தத்­துக்கு மேல் சரிவு கண்­டது குறிப்­பி­டத்­தக்­கது. உல­கில், அதிக அள­வில் செம்பு உலோ­கத்தை தொழிற்­சா­லைக்கு பயன்­ப­டுத்­தும் நாடு, சீனா.



அந்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­வைத்தே, கமா­டிட்டி பொருட்­களின் விலை மதிப்பு, நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது. தற்­போ­தைய சூழ­லில், நாட்­டின், ஜி.டி.பி., வளர்ச்சி குறை­யும் என்ற அச்­சம் கார­ண­மாக, விலை சரிந்து வரு­வது குறிப்­பி­டத் ­தக்­கது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”