Page 1 of 1

பிரிட்டன்டாலர் கரன்சி நிலவரம்

Posted: Tue May 21, 2019 9:56 am
by ஆதித்தன்
பிரிட்டன் டாலர் கரன்சி நேற்றைய நாளில் 300 பாயிண்ட் மேல் ஏறி, பின் அங்கிருந்து கீழே இறங்கிவிட்டது.

விலை மாற்றம் இல்லாமல் நேற்றைய நாள் முடிந்துவிட்டது.

வாரத்தின் முதல் நாள் பெரிய அளவில் மார்க்கெட் நகர்வு இல்லாததால் சிலர்க்கு மட்டுமே இலாப வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

Re: பிரிட்டன்டாலர் கரன்சி நிலவரம்

Posted: Wed May 22, 2019 5:04 am
by ஆதித்தன்
செவ்வாய்

பிரிட்டன் அதிகப்படியான இடைவெளியாக 1000 பாயிண்ட் நேற்று வர்த்தகம் நடந்துள்ளது. இது உறுதியான இலாபத்தினை பலர்க்கும் கொடுத்திருக்கும்.

மார்க்கெட் ஆரம்பத்தில் 250 பாயிண்ட் கிழே இறங்கினாலும், அங்கிருந்து 1000 பாயிண்ட் மேல் ஏறி காளை முகமெடுத்தாலும், அங்கிருந்து 850 பாயிண்ட் கீழே இறங்கி பழைய நிலைக்கு திரும்பிவிட்டது.

மார்க்கெட் கீழே செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

1.2696 என்ற புள்ளி சப்போர்ட் லைனிலிருந்து உடைத்து கீழே செல்லலாம்.

Re: பிரிட்டன்டாலர் கரன்சி நிலவரம்

Posted: Thu May 23, 2019 7:18 am
by ஆதித்தன்
புதன்

இலாபம் கொடுக்கக்கூடிய எளிமையான வர்த்தக சூழல் பிரிட்டன் டாலர் கரன்சி இணையில் நடந்துள்ளது.

800 பாயிண்ட் கீழே விழுந்துள்ளது, எளிதான இலாபத்தினை உருவாக்கியுள்ளது. பின்னர் 650 பாயிண்ட் விழுந்த உடனே ஏறிவிட்டது. இது மார்க்கெட் சூழலில் வர்த்தகர்கள் நட்டங்களை வாங்கி இலாபப்படுத்தியுள்ளார்களோ என்ற கேள்விகளை உருவாக்கக்கூடியது. பின் ஏறியது இறங்கி, மார்க்கெட் சரிவினை உறுதி செய்துள்ளது.

தற்போதை சார்ட் தொடர்ச்சியான சரிவினை காட்டுகிறது. ரெசிஸ்டன்ஸ் 1.2675

விலை 1.2650

Re: பிரிட்டன்டாலர் கரன்சி நிலவரம்

Posted: Fri May 24, 2019 10:08 am
by ஆதித்தன்
வியாழன்

முந்தைய தொடர்ச்சியாக கீழே 550 பாயிண்ட் சரிவினைக் கொடுத்த வர்த்தக நடை, பிறகு வேகமாக 700 பாயிண்ட் மேல் ஏறியுள்ளது.

மார்க்கெட் நடை இடைவெளி 750 பாயிண்ட் அமைந்தது இலாபத்துக்கு ஏதுவானது ஆகும்.

மார்க்கெட் வாரக்கணக்கு கரடிக்கு சாதகமாக அமைவதற்கு இன்றைய வாரக் கடைசி மார்க்கெட் நடை இருக்கும் போல் தெரிகிறது.

இதன் ரெசிஸ்டன்ஸ் லைன் 1.2675

Re: பிரிட்டன்டாலர் கரன்சி நிலவரம்

Posted: Fri May 24, 2019 9:00 pm
by ஆதித்தன்
வெள்ளி

வாரத்தில் 1200 பாயிண்ட் கரடிக்கு சாதகமாகச் சென்றாலும், கடைசி நாளில் திருப்பம் பெற்று, இறுதியாக 425 பாயிண்ட் கரடிக்கு சாதகமாக மார்க்கெட் முடிந்துள்ளது.

விலை 1.2686