Page 1 of 1

தங்கம் இந்த வாரம் மார்க்கெட் நிலவரம்

Posted: Mon May 20, 2019 9:59 am
by ஆதித்தன்
வர்த்தகத்திற்கு எளிதான தங்கம், இந்த வாரத்தில் எத்திசையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதனை தொடர்ச்சியாக இப்பதிவில் பார்க்கலாம்.

தற்போதைய நிலையில், 1266 என்ற விலையினை டபுள் பாட்டமாகக் கொண்டுள்ளது. இதனை உடைத்தால் இறக்கமாகவும், இதனை சப்போர்ட்டாகக் கொண்டு 1291 ஐ உடைத்து மேலேறினால் மேலாகவும் இவ்வாரம் அமையும்.

வார ஆரம்ப விலை - 1276

Re: தங்கம் இந்த வாரம் மார்க்கெட் நிலவரம்

Posted: Tue May 21, 2019 9:51 am
by ஆதித்தன்
அதிக அளவில் இடைவெளி காட்டும் தங்கம் நேற்றைய நாளில் 350 பாயிண்ட் மட்டுமே இடைவெளி கொண்டிருக்கிறது, ஆனால் மார்க்கெட் அடுத்து கீழே சரிவடையும் என்ற ஒர் நிலைப்பாட்டில் இருப்பது போன்ற காட்சியினை மேலும் காட்டிக் கொண்டே இருக்கிறது.

Re: தங்கம் இந்த வாரம் மார்க்கெட் நிலவரம்

Posted: Wed May 22, 2019 4:50 am
by ஆதித்தன்
புதன் - 1274

மார்க்கெட் 500 கீழே விழுந்து புதிய பாட்டத்தினை செவ்வாய் அமைத்துவிட்டது, அடுத்து அங்கிருந்து அப்படியே 500 பாயிண்ட் மேல் எழும்பி 1274 என்ற ஆரம்ப விலைக்கே வந்துவிட்டது.

மார்க்கெட் தொடர்ச்சியான இறக்கத்தினை தொடரலாம்.

மேல் சென்றுவிடுமோ என்ற அச்சத்தினை 1277 என்ற ரெசிஸ்டன்ஸில் வைத்துக் கொண்டால், அதனை உடைத்து மேல் செல்லும் பொழுது, மேல் பக்கத்துடன் சென்றுவிடலாம்.

1273 என்ற புள்ளியினை உடைத்து கீழ் இறங்கும் பொழுதே அதன் கூடவே கீழ் சென்றுவிடலாம்.

Re: தங்கம் இந்த வாரம் மார்க்கெட் நிலவரம்

Posted: Thu May 23, 2019 7:10 am
by ஆதித்தன்
புதன்

400 பாயிண்ட் மேல் ஏறி, அப்படியே கீழ் இறங்கிவிட்டது.

கீழ்பக்கமாக தொடர்ச்சியாக செல்லவேண்டிய சார்ட் நிலவரத்தில்தான் இருக்கிறது. அதே நேரத்தில் வார ஆரம்ப நிலையில் இருந்த நிலைக்கு தற்போதைய நிலை கொஞ்சம் கூடுதலாக இறக்கத்திற்கு வாய்ப்பு தெரிகிறது.

அதே நேரத்தில் மார்க்கெட் ஏற்றம் கொள்வதாக இருந்தால், 1274 என்ற விலைப்புள்ளியினை உடைக்கும் பொழுதே அதற்கான வேகம் அதிகரிக்கலாம். ஆகையால், இப்போதைய நிலை இறங்கு முகம். மார்க்கெட் நிலவரத்தில் 1274 உடைத்தால் ஏற வேண்டும்.

Re: தங்கம் இந்த வாரம் மார்க்கெட் நிலவரம்

Posted: Fri May 24, 2019 10:15 am
by ஆதித்தன்
வியாழன்

1400 பாயிண்ட் மார்க்கெட் நடை காளைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கரன்சியினைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக தூர மார்க்கெட் நடை தங்கத்தில் அமைந்து வருகிறது என்பதனை தினசரி மார்க்கெட் அனலைசிஸ் செய்வோர்க்கு நன்றாக தெரிந்திருக்கும்.

மார்க்கெட் நடை தூரம் அதிகமாக இருப்பது என்பது இலாபத்தினை உறுதி செய்யும் ஒர் காரணி.

தங்கம் தினசரி வர்த்தகத்திற்கு கரன்சியினைக் காட்டிலும் கூடுதல் இலாப வாய்ப்பினைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

காலை முதல் தங்கத்தின் மார்க்கெட் மேல் பக்கமாகச் சென்றாலும் இறுதிக்கட்ட மார்க்கெட் ரிவர்சல் செய்து கொண்டிருப்பது, இன்றைய வார இறுதி நாளும் தொடர் சாய்வுக்கு ஏதுவாக இருக்கலாம்.

ரெசிஸ்டன்ஸ் லைன் 1285

Re: தங்கம் இந்த வாரம் மார்க்கெட் நிலவரம்

Posted: Fri May 24, 2019 9:12 pm
by ஆதித்தன்
வெள்ளி

1276 இல் திங்கள் ஆரம்பித்த மார்க்கெட் , வெள்ளி அன்று 1283 இல் முடிந்துள்ளது.

வாரத்தில் மாற்றம் 750 பாயிண்ட் காளைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

தினம் ஆயிரம் பாயிண்ட் நடையிருந்தாலும், இறுதியாக வார வர்த்தக நடை இடைவெளியும் பெரும்பான்மையான வாரங்களில் அவ்வாறே அமைகிறது.