Page 1 of 1

பாரக்ஸ் மார்க்கெட் செய்தி

Posted: Fri May 17, 2019 7:44 am
by ஆதித்தன்
இரோடாலர் கரன்சி கடைக்கட்டத்தில் மேல் ஏற ஆரம்பித்தது, தொடர்ச்சியாக நேற்றைய நாளிலும் மேலே 200 பாயிண்ட் ஏறியிருக்கிறது. பின்னர் அங்கிருந்து 500 பாயிண்ட் கீழே இறங்கியிருக்கிறது, ஆரம்பித்திலிருந்து 300 பாயின்ட் கீழே இறங்கியுள்ளது. இது மார்க்கெட்டிலிருந்து இலாபத்துடன் வெளியேற உதவும் சுழல் ஆகும்.

டாலர்யென் கரன்சி, தொடக்கம் கீழே 150 பாயிண்ட் இறங்கியுள்ளது. பின் அங்கிருந்து 600 பாயிண்ட்ஸ் மேல் ஏறியுள்ளது. மொத்தத்தில் 500 பாயிண்ட்ஸ் காளையின் ஆதிக்கத்துடன் முடிந்துள்ளது. இது நல்ல இலாபத்தினை அனுபவ வர்த்தகர்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கும். இப்படியான மார்க்கெட் அவ்வப்பொழுது நிகழ்வதுதான். மார்க்கெட்டில் நிலையாக நிற்பவர்கள் எப்படியும் சம்பாதித்துவிடுவது இதுபோன்ற நல்ல மார்க்கெட் சூழலினை பயன்படுத்திக் கொள்வதுதான்.

இதைப்போல், பிரிட்டன்டாலர் கரன்சியி கரடியின் ஆதிக்கத்தில் காலையிலிருந்து செயல்பட்டு, இறுதி வரை என 600 பாயிண்ட் இறங்கியுள்ளது. முழுமையாக கரடியின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது மட்டுமில்லாமல் 600 இறக்கம் என்பதால் எளிதில் இலாபத்துடன் வெளியேற்யிருப்பர். மார்க்கெட் இடைவெளி அதிகம் இருப்பது இலாபத்தினை கொடுக்கும்.

தங்கம் 1250 பாயிண்ட் கீழே விழுந்துள்ளது. பெரிய இடைவெளி நடந்துள்ளது, பலரும் இலாபத்தினை எடுத்திருப்பர்கள். நீண்ட நாள் வர்த்தகர்கள் பெரும்பாலும் தங்கம் ட்ரேடிங் செய்வார்கள். எப்படியும் தங்கம் மார்க்கெட் இலாபம் கொடுக்கும்.

Re: பாரக்ஸ் மார்க்கெட் செய்தி

Posted: Sat May 18, 2019 8:58 am
by ஆதித்தன்
இரோடாலர் மார்க்கெட் கரடி ஆதிக்கத்தில் 150 பாயிண்ட் முடிந்துள்ளது, மிகவும் குறைவான இடைவெளியே அமைந்தது.

பிரிட்டன்டாலர் 750 பாயிண்ட் தொடர்ந்து சரிந்து, பெரிய இலாபத்தினை கரடி பிடியாளர்களுக்கு கொடுத்திருக்கிறது.

டாலர்யென் கரன்சி, காலை யென் மார்க்கெட்டில் 450 பாயிண்ட் கீழே இறங்கிவிட்டது, ஆனால் டாலர் மார்க்கெட்டில் முழுமையாக திரும்பி கூடுதலாக 150 பாயிண்டும் ஏறி இடைவெளி 650 உருவாக்கியுள்ளது. இது இலாபத்திற்கான வாய்ப்பான மார்க்கெட்டினையே உருவாக்கியுள்ளது.

தங்கம் 1100 பாயிண்ட் கீழே இறங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை மார்க்கெட், இரோடாலர் தவிர்த்து மற்ற மூன்று கரன்சிகள் இலாப வாய்ப்பில் முடிந்துள்ளது, உறுதியான இலாபத்தினை உருவாக்கியுள்ளது.

டாலர்க்கான வாரமாக அமைந்திருக்கிறது.