Page 1 of 1

பாரக்ஸ் மார்க்கெட் கரன்சியில் நேற்று நடந்தது

Posted: Thu May 16, 2019 6:36 am
by ஆதித்தன்
யென் டாலர் கரன்சி, நேற்று 450 பாயிண்ட் கீழே விழுந்தது, அப்படியே திரும்ப ஆரம்பித்த மேல் இடத்துக்கே ஏறிவிட்டது, கடைசியில் 150 பாயிண்ட் கீழே முடிந்துள்ளது. இதுமாதிரியான சூழல் வந்தால் கிடைத்த இலாபம் போய்விடும் என்பதால், தொடரும் பொழுது இலாபத்தில் ஸ்டாப் லாஸ் நிலையினை சுருக்கிக் கொண்டே பின் சென்றால், ரிவர்சல் ஆகும் பொழுது இலாபத்துடன் வெளியேறலாம்.

தங்கம் நேற்று நன்றாக கீழ் மேல் கீழ் என்று நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறான மார்க்கெட்டில் இலாபம் உறுதியாக எடுத்துவிடலாம். கீழே 350 பாயிண்ட் போனது அங்கிருந்து 700 பாயிண்ட் மேல், அங்கிருந்து 500 பாயிண்ட் கிழ் என இரட்டிப்பு நிலை ஒரிடத்திலிருந்து அமைந்திருப்பது உறுதியான இலாப முடிப்புக்கு உதவும்.

இரோ டாலர் கரன்சி நேற்று பெரிதாக நிகழ்வு இல்லை. 350 பாயிண்ட் கீழே இறங்கியுள்ளது, 450 பாயிண்ட் மேல் ஏறியுள்ளது... பின் கீழே இறங்கி ஆரம்ப நிலைக்கு வந்திருக்கிறது. இப்படியான நிகழ்வுகள் நிலையினை தள்ளிப்போட வேண்டிய சூழலை உருவாக்கிவிடும்.

போட்ட ஆர்டரினை அன்றைய தினமே முடித்துக் கொள்வது நல்லது.