Page 1 of 1

Forex market நடந்தவை - தங்கம் ஜோர்

Posted: Tue May 14, 2019 7:07 am
by ஆதித்தன்
நேற்று EUR/USD கரன்சி வர்த்தகத்திற்கு சஞ்சு கடினமான சூழலில் அமைந்திருந்தது. ஏறுவது போல 350 பாயிண்ட் ஏறிவிட்டு, அப்படியே 400 பாயிண்ட் கீழே இறங்கிவிட்டது. குறைவான இடைவெளியின் ஆன வர்த்தகத்தால் இலாப வாய்ப்பு குறைவு.

ஆனால், நேற்று தங்கத்தின் விலை விர்ரென விரைவாக இரண்டு மணி நேரத்தில் 1800 பாயிண்ட் மேல் ஏறிவிட்டது. நிலையான மேல் ஏற்றத்தில் பலருக்கு தங்கம் வர்த்தகம் இலாபத்தினை கொடுத்திருக்கிறது.

பிரிட்டன்/டாலர் கரன்சி ஆரம்பத்தில் மேல் ஏறினாலும், இடையில் பின் வாங்கி கீழே 900 பாயிண்ட்க்கு சரிந்துவிட்டது. ஏறியபின் சரிந்தாலும், சரிவு ஏற்றத்தினைக்காட்டிலும் இரட்டிப்பாக அமைந்தாலும் வர்த்தகம் நலமாக அமைந்தது.