Page 1 of 1

Bank interest rate decision news trading USD/CAD

Posted: Wed Jul 12, 2017 11:12 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=-W2dnmanWmI[/youtube]

பேங்க் ஆப் கனடா தனது வட்டி விகித விவரத்தினை இன்று மாலை வெளியிட இருக்கிறது, அதற்கான முக மதிப்பாக 0.75% என்று நிர்ணயம் செய்துள்ளனர்.

கடந்த ஒர் ஆண்டுக்கும் மேலாக வட்டி விகிதம் 0.50% என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், இந்தமுறை சற்று கூட்டலாம் என நினைத்திருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு மதிப்பான 0.75% , அப்படியே இன்றைய முடிவில் ஏற்கப்பட்டால் USD/CAD கரன்சி இணையில் பெரிய மாற்றம் இல்லாமல் போனாலும் மேலும் கீழும் என அதிக வாலலிட்டி/ஏற்ற இறக்கம் கூடுதல் மார்க்கெட் கெப்பாசிட்டியுடன் நடக்க வாய்ப்புள்ளது.

அவ்வாறு இல்லாமல், கடந்தமுறை மதிப்பான 0.50% என்பதனை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறோம் என்று அறிவித்துவிட்டால், எதிர்பார்ப்பின்படி எதிர்மறையான நெகட்டிவ் ரிசல்ட் ஆகும்.

நியூஸ் நெகட்டிவ் ஆகும் பற்றத்தில் மார்க்கெட் கனடியன் டாலர்க்கு எதிராகச் செயல்பட்டு மேல் எழும்ப ஆரம்பிக்கும்... இதன் வேகம் 100 பிப்ஸ் தாண்டும் என எதிர்பார்க்கிறேன்.