Page 1 of 1

பல மடங்கு இலாபம் கொடுக்கும் அல்ட் காயின் வர்த்தக வாய்ப்பு

Posted: Mon Jun 19, 2017 8:40 pm
by ஆதித்தன்
அல்ட் காயின் எனப்படும் பிட்காயினுக்கு எதிராக வர்த்தகம் செய்யப்படும் கிரிப்டோ கரன்சி காயின், அவ்வப்பொழுது திடீரென விரைவு உச்சத்தினை எட்டுவதும் பின் விலை சரிவதும் என காணப்படுவது இயல்பு.

கைப் எனப்படும் விரைவு இன்வஸ்ட்மண்ட் ரிட்டர்ன் ப்ரோக்கிராமில் இயங்குபவர்கள் இத்தகைய அல்ட்காயின் டிரேடிங்கில் ஈடுபட்டு 5 நாட்களில் 200% - 500% மேல் இலாபம் ஈட்டுவார்கள்.

கடந்த வாரத்தில்ம ராய் ப்ளாக்ஸ் என்ற அல்ட் காயின் கைப் இன்வஸ்ட்டர்களால் அடையாளம் காணப்பட்டு, ஒரே வாரத்தில் 500% க்க்கும் மேல் விலை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வாரத்தில் 1 ராய் ப்ளாக்ஸ் 800 சத்தோசி என்றிருந்தது, இன்று 5500 சத்தோசி என்ற விலைக்கு ட்ரேடிங் ஆகிக் கொண்டிருக்கிறது.

ஆரம்பக் கட்டத்திலேயே விவரம் கிடைக்கப் பெற்றலாம், ஆய்வு செய்து முதலீடு செய்ய யோசனை செய்வதற்குள் 500% விலை உயர்வினை அடைந்துவிட்டதால், அதன் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது.

பிட்காயின் வர்த்தகம் உச்சக்கட்டத்தினை எட்டிக் கொண்டிருப்பதால், அடுத்தக்கட்ட வாய்ப்புகள் என்பது அல்ட் காயின்களிலேயே உள்ளது. ஆகையால், விரைவாக சம்பாதிக்க நினைப்பவர்கள் அல்ட் காயின்களில் பார்வையை செலுத்த ஆரம்பியுங்கள்.

எனது பார்வையும் அல்ட் காயின்களை நோக்கியே தேடிக் கொண்டிருக்கிறது.. விரைவில் ஏதேனும் ஒர் நல்ல அல்ட் கிரிப்டோகரன்சியில் முதலீட்டுத் தகவல் கிடைத்தால் பகிரப்படும்.