Page 1 of 1

ஆயில் விலை மாற்றம்

Posted: Mon Jun 19, 2017 9:27 am
by ஆதித்தன்
கடந்த வாரத்தில் ஏறுமுகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட க்ரூடு ஆயில் விலை கீழே சரிந்து, பாட்டம் கீ பாயிண்டினையும் உடைத்து தொடர்ச்சியில் இருக்கிறது.

ஒர் பக்கம் ஆயில் உற்பத்தியினை கட்டுப்படுத்தி விலை ஏற்றத்திற்கு செயல்படும் பொழுது, மற்றொருபக்கம் அமெரிக்கா தனது வர்த்தக வாய்ப்பினை விரிவுப்படுத்திக் கொள்ள ஏதுவாக கூடுதல் ஆழ்துளைகளைப் போட்டு க்ரூடு ஆயில் உற்பத்தியினை பெருக்குகிறது.

அமெரிக்காவின் செயல்பாட்டினால், ஆயில் விலை கீழே சரிந்துள்ளது என செய்திகள் விளக்கம் கொடுக்கின்றன.

ஆயில் தற்பொழுது 45 டாலரில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பாட்டம் லைனை உடைத்திருப்பதாலும், வாரத்தின் ஆரம்பமே கரடி பார்வை என்பதனாலும் மேலும் சரிவினை எதிர்பார்த்து, கீழே இறங்கியப்பின் நிதானமாக வாங்குவது நல்லது.