பிட்காயின் முதலீடு எச்சரிக்கை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயின் முதலீடு எச்சரிக்கை

Post by ஆதித்தன் » Thu Jun 15, 2017 4:02 pm

பிட்காயின் தற்பொழுது அசுர வளர்ச்சியினை அடைவது போலத் தெரியலாம், ஆனால் அதில் இலாபம் ஈட்டுவது என்பது பாதையில்லா செங்குத்து சிகரத்தின் மீது ஏறுவதற்கு சமம், கொஞ்சம் தவறினாலும் மீண்டும் தரைக்கே வீழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது.

உதாரணத்திற்கு இரண்டு நாளைக்கு முன்னால் 3100 டாலர் விலைக்குச் சென்ற பிட்காயின், அடுத்த நாள் காலையில் 2600 டாலர்க்குச் சென்றுவிட்டது.

அதே நேரத்தில் மற்றொரு வர்த்தக மேடையில் 4000 டாலர் உச்ச விலைக்குச் சென்றுவிட்டு திரும்பி சராசரி விலையான 2600 அருகே வந்திருக்கிறது.

அதாவது கண் இமைக்கும் நேரத்தில் விபத்துகள் நடப்பதுபோல, ஒர் சில மணி நேரத்தில் வர்த்தக மேடையில் விலை சர் சர்ரென்று ஏறுவதும்... அடுத்த நொடியில் கீழே விழுவதும் என கடந்த ஒர் மாதமாக நடந்து கொண்டிருப்பது என்பது நல்லதற்கல்ல... இது மார்க்கெட் மேக்கர்களால் விளையாடப்படும் சூதாட்டத்திலும் மோசமான விளையாட்டு. ஆகையால் சூழலைப் புரிந்து தற்போதைய காலத்தில் ரொம்ப சூதானமாக நடந்து கொள்ளுங்கள்.

5000 டாலர் விலை ஏறும் என்பதற்காக வாங்கினாலும், ஒர் மணி நேரம் தவறினால் கூட மார்க்கெட் விலை சட்டென ஆரம்ப இடத்திற்கே திரும்பி வந்துவிடும் அளவிற்கு ஆபத்து இருக்கிறது என்பதனைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். ஆகையால் ஏற்கனவே சொல்லியபடி ரொம்ப எதிர்பார்க்காமல் ஏறிக் கொண்டிருக்கும் பொழுதே வெளியேறிட விழிப்புடன் இருங்கள்.

பிட்காயின் விலை ஏறுகிறது என்பதனைப் பார்த்து கொண்டிருக்கிறேனே தவிர, அதில் முதலீடு செய்ய எனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”