Page 1 of 1

ஆயில் விலை சரிவு, வாங்கு விலை என்ன?

Posted: Thu Jun 08, 2017 6:58 am
by ஆதித்தன்
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஆயில் மிக முக்கிய முதலீட்டுப் பங்காக வரும் மாதங்களில் இருக்கும் என்று சொன்னார்கள், அதற்குள் விலைச் சரிவு ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்தல் என்பது அவசியமற்றது. விலைச் சரிவில்தான் விலை ஏற்றம் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

விலை ஏற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் பண்ட் மேனஜர் மற்றும் ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்கள் செய்யும், தந்திரங்களில் ஒன்று விலைச் சரிவு. விலைச் சரிப்பினை உயர் விலையில் விற்று ஆரம்பித்துவிட்டு, பின்னர் குறைந்த விலையில் வாங்குவதன் மூலம் இலாபம் என்பதனைக் காட்டிலும் கூடுதல் பங்குகளை வாங்கி மேலும் டிமாண்டினை அதிகரிக்கச் செய்து பெரிய விலை உயர்வினையும் மிகப்பெரிய இலாபத்தினையும் எட்ட முடிகிறது.

நேற்று மட்டும் 4% விலைச் சரிவினை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்து ஒர் 5% சரிவு ஏற்பட்டுவிட்டால் உடனே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

நேற்றைய நிலவரத்தின் பொழுது வாங்காத காரணத்தினால் ரிஸ்க் பண்ட் கூடுதல் இருப்பாகக் கிடைத்துள்ளது. மேலும் குறைந்த விலையில் வாங்குவது என்பது மிகச் சிறப்பு என்ற ரீதியிலும் நேற்று காலையில் கைவச இருப்பினைக் கொண்டு ஆயிலை வாங்காமல் விட்டது இன்று நன்மையாக அமைந்துள்ளது. ஆனால், ஆயிலில் முதலீடு செய்வது என்பது ஊர்ஜிதமான ஒன்று.

அடுத்தக்கட்ட சரிவு எதனை மையப்படுத்தி அமையும் என்பது இப்போதைக்கு தகவல் கிடைக்கவில்லை என்றாலும் வருகிற இங்கிலாந்து தேர்தல் நேர வர்த்தகத்தினை மையமாகக் கொண்டு உடனடி இலாபத்திற்காக முதலீடுகளை ஒன்றிலிருந்து மன்றொன்றிற்கு மாற்றும் விதமாக ஏதேனும் நடக்கலாம் என்று கருதுகிறேன்... அதில் நீண்ட கால முதலீடாக செய்யப்பட்ட ஆயில் பணத்தினை எடுத்து கரன்சிக்கு மாற்றிவிட்டு, பின்னர் மீண்டும் ஆயிலுக்கு மாற்றும் நிகழ்வினை எதிர்பார்க்கிறேன்.

ஆயில் விலை மேலும் சரிந்தால் வாங்க உகந்தது.