Page 1 of 1

உயரப் பறக்குமா டூவிட்டர்? - பங்கு வர்த்தகம்

Posted: Thu May 11, 2017 10:25 am
by ஆதித்தன்
பங்குச் சந்தையில் குதித்த முதல் மாதத்தில் ஜெட் வேகத்தில் மேல் எழும்பிப் பறந்த டூவிட்டர் 74 டாலரைத் தொட்டது, அதன் பின்னர் அந்த உயரத்தினை மீண்டும் தொடவே இல்லை.

அன்றைய நிலையிலிருந்து இன்று வரை மார்க்கெட்டில் அதன் பயணம் இறக்கத்தினை நோக்கியே வந்து கொண்டிருந்தது, தற்பொழுது 14 டாலர் என்ற நிலையில் டபுள் பாட்டம் அமைத்திருப்பது தெரிகிறது.

2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தும் பொழுது கொடுக்கப்பட்ட விலையான 45$ என்பதனைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையான 18 டாலரில் வர்த்தகம் ஆவதால், முதலீட்டாளர்கள் இதன் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ளது.

மீண்டும் ஏற ஆரம்பித்தால், முதல் கட்ட ஏற்றம் என்பது 31 டாலர் விலையினை மையமாகக் கொண்டு எழும்பிச் செல்லும் என்பதால் நீண்ட நாள் முதலீடாக 50% பார்க்க நினைப்பவர்கள் இதில் பணத்தினைப் போடலாம்.