பிட்காயின் விலை சரிவு - ETF result

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயின் விலை சரிவு - ETF result

Post by ஆதித்தன் » Sat Mar 11, 2017 6:50 am

அமெரிக்க ஒழுங்குமுறைக் குழு பிட்காயின் டிஜிட்டல் கரன்சியினை ETF மார்க்கெட் பகுதிக்குள் ஏற்றுக் கொள்ளுமா? என்றக் கேள்விக்கான் விடை கிடைத்துவிட்டது.

பிட்காயினை தற்போதைய நிலையில் ETF மார்க்கெட் நிலைக்கு எடுத்து கண்காணிப்பதனை அமெரிக்க ஒழுங்குமுறைக் குழு மறுத்துவிட்டது. மேலும் ETF market நிலைக்கு கொண்டுவர, தற்போதைய மார்க்கெட் நிலவரம் அனைத்தும் அறிந்தாலே செய்ய முடியும் என்ற கருத்தினையும் தெரிவித்துவிட்டனர்.
"Based on the record before it, the Commission believes that the significant markets for bitcoin are unregulated," the SEC said in a statement. "The commission notes that bitcoin is still in the relatively early stages of its development and that, over time, regulated bitcoin-related markets of significant size may develop."
ETF மார்க்கெட்க்கு பிட்காயின் வந்தால், பெரிய முதலீட்டாளர்களான மார்க்கெட் மேக்கர்ஸ் 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மார்க்கெட் மேக்கர்ஸ், அவ்வளவு எளிதாக ஒவர் பிரைசில் வாங்கமாட்டார்கள்.. அதாவது பிட்காயின் உச்ச விலையில் இருக்கிறது. இப்படியான சூழலில் வாங்க மாட்டார்கள். குறைந்த விலைக்கு வாங்கியப் பின்னரே, அதற்கான அப்ரூவல் கொடுத்துக் கொள்வார்கள்.

மேலும், மார்க்கெட்டினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க பிற மார்க்கெட் அனைத்தினையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மார்க்கெட் மேக்கர்ஸ் உறுதியாக இருப்பார்கள். ஆகையால், பிற பிட்காயின் மார்க்கெட்டினையும் தனது ஒழுங்குமுறை ஆணைக்குள் புகுத்திக் கொண்டால்தான், ஏற்றுக் கொள்வார்கள்.

தற்போதைய பிட்காயின் மார்கெட் ஒழுங்குமுறை ஆணைக்குள் இல்லாமல் செயல்படுவதால், அதனை சரி செய்தால் மட்டுமே மறுபரீசிலனை செய்ய முடியும் என்றும் சொல்லிவிட்டார்கள்.

மார்க்கெட் இவர்களது பதிலுக்காக காத்திருந்து, 1250 வரை ஏறியது... மறுத்ததும் சட்டென 1000-க்கு விழுந்துவிட்டது.


கொஞ்சம் சுதாரித்து மார்க்கெட் பழையபடி 1100க்கு வந்துவிட்டது.

பிட்காயின் தனது மதிய காலத்தினை முடித்து மாலைக்குள் செல்கிறது.... பின் இரவு நேரமான ஓய்வு எடுக்கும் காலத்தில் மீண்டும் வாங்குவது நல்லது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”