Page 1 of 1

ட்ரம்ப் பேச்சு எதிர்பார்ப்பு - எகிறும் டாலர் விலை

Posted: Wed Mar 01, 2017 11:11 am
by ஆதித்தன்
இன்று மாலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அரசின் முக்கிய நடவடிக்கை குறித்த அறிக்கை வெளியிட இருப்பதால், இன்றைய மார்க்கெட் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என கருதப்படுகிறது.
In a speech that will be watched by millions of viewers in the United States and around the world, the President is expected to speak of his presidency and address pressing issues like his plans for health care, the tax system, the military, and his goals for his administration.
வரிக் கொள்கை பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புகள் முன்னரே கருத்து தெரிவிக்கப்பட்டு டவ் 30 பங்குகள் 20800 என்ற உச்சத்தில் உள்ளது என்பது அறிந்த ஒன்று.

இருதரப்பு வர்த்தகத்தின் WTO ஒப்பந்த விதிமுறையை புதிய வரிக்கொள்கை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றே கருதுகிறோம் என ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் Yasutoshi Nishimura, இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் முதல்கட்ட காலை வர்த்தகத்திற்கு பின், தற்போதைய நிலையில் USD/JPY (113.44) இணை 0.69% உயர்வினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட கால முடிவில் USD/JPY கரன்சி இணை இறக்கத்தினை காணும் என்று டெக்னிகல் அனலைசிஸ் மூலம் பகுப்பாய்வினை பல்வேறு நிதித்துறை ஆலோசகர்கள் வெளியிட்டு கருத்து தெரிவித்திருந்த வேளையில், மார்க்கெட் மீண்டும் உச்ச நிலையை நோக்கி நகருமா? என்பது இன்றைய மாலை நடக்க இருக்கும் ட்ரம்ப் அறிவிப்பு நிகழ்ச்சிக்குப்பின் தெரியலாம்.