Ichimoku Trend Indicator - இச்சிமோக்கு வர்த்தகப் போக்கு அறிவிப்பான்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Ichimoku Trend Indicator - இச்சிமோக்கு வர்த்தகப் போக்கு அறிவிப்பான்

Post by ஆதித்தன் » Wed Feb 15, 2017 1:11 pm

Image
பாரக்ஸ் வர்த்தகத்தினை எளிமைப்படுத்தி இலாபம் சம்பாதிப்பதற்காக பல்வேறு ட்ரெண்ட் இண்டிகேட்டர்களை வல்லுனர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். அதில் 1969-ஆம் ஆண்டு கோச்சி ஹசோடா என்ற ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட இச்சிமோக்கு ட்ரெண்ட் அறிவிப்பானும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. கோச்சி ஹசோடா ஒர் பத்திரிக்கை எழுத்தாளர், இவரை "இச்சிமோக்கு சஞ்சின்" என்றும் அழைப்பார்கள்.
"Ichimoku Sanjin;" this translates to "what a man sees in the mountain"
இச்சிமோக்கு சஞ்சின் என்ற அடைமொழியில் அறிந்து கொள்ள வேண்டிய ஒர் வியக்கத்தாக விடயம், இச்சிமோக்கு சஞ்சின் என்பதனை ஜப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் கூறுவதனை தமிழுக்கு மாற்றினால் பொருள் "என்ன மனிதர், மலை உச்சியினை பார்க்கிறார்" என்ற ஆச்சர்ய வாக்கியம் விளக்கம் வருகிறது. அதனையே கொஞ்சம் தமிழ் மொழியோடு ஒப்பிட்டுப் பார்த்தால்,

இச்சிமோக்கு சஞ்சின்
இச்சி - உச்சி /(உற்றுநோக்கு)
மோக்கு - நோக்கு
சஞ்சின் - சஞ்சீவி மலை

இச்சிமோக்கு சஞ்சின் என்பதனை தமிழில் சொல்வது என்றால், "மலை மீதிருந்து பார்ப்பவர்" என்ற சரியான பொருள் கிடைக்கிறது. மேலிருந்து கீழே பார்க்கும் பொழுதுதான் ஒர் தெளிவான பரந்த பார்வையினை ஒர் இடத்திலிருந்து செலுத்த முடியும். இச்சிமோக்கும் ஒர் பார்வையில் சார்ட் நிலவரத்தினை அறிவது என்ற chart on one glance வார்த்தையினை ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம், தமிழுக்கும் ஜப்பானிஸ்க்கும் பழமை தொடர்பு உண்டு என்பதனையே கொஞ்சம் திரித்தால் கிடைக்கும் முழுமையான தமிழ் அர்த்தம் நமக்கு விளக்குகிறது.

இச்சிமோக்கு வர்த்தகப்போக்கு அறிவிப்பான்:(Ichimoku Trend Indicator -Tamil)

Ichimoku Kinko Hyo என்று ஜப்பான் மொழியில் அழைக்கப்படும் இந்த ட்ரெண்ட் இண்டிகேட்டர், பெயரில் விளக்குவது, சமநிலை கொண்டு ஒர் பார்வையில் அறிந்து கொள்வது ஆகும். சார்ட்டில் ஒர் மலைத்தொடர்ச்சி போன்று அல்லது மேகக்கூட்டம் போல் காணப்படுவதால் மிக எளிதாக பார்த்தவுடன் தற்போதைய வர்த்தகப்போக்கு நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. செங்கோவ் என்றக் காரணி இச்சிமோக்கு மலைப் பாங்கினை வரைய பயன்படுகிறது.

இச்சிமோக்கு இண்டிகேட்டரின் தனித்துவம், முந்தை ஸ்டிக் நிலைகளின் விலை உச்சம் மற்றும் விலை மட்டம் ஆகியவற்றின் சராசரியினால் மார்க்கெட் நிலவரத்தினை ஐந்து காரணிகள் கொண்டு வரைவது ஆகும். அவை, 1. டெங்கன்-சன், 2. கிஜீன்-சென், 3. செங்கோவ்-காலம் ஏ, 4. செங்கோவ்-காலம் பி, மற்றும் 5. சிக்கோவ்

1. Tenkan-san : முந்தைய 9 ஸ்டிக்களின் உச்சம் & மட்டம் ஆகியவற்றின் சராசரியில் வரையப்படும் புள்ளி.(conversion line)

2. Kijun-sen: முந்தைய 26 ஸ்டிக்களின் உச்சம் & மட்டம் ஆகியவற்றின் சராசரியில் வரையப்படும் புள்ளி. ஆகையால், டெங்கன்-சன் காட்டிலும் கொஞ்சம் மெதுவாக மாற்றம் அடையும், Baseline.

3. Senkou Span A: Tenkan-san and the Kijun-sen ஆகியவற்றினை கூட்டி கிடைக்கும் சராசரி புள்ளி மூலம் தற்போதைய ஸ்டிக்கிலிருந்து, முன்னே 26-வது காலத்தில் வரையப்படுகிறது.

4. Senkou Span B: முந்தைய 52 ஸ்டிக்களில் உச்சம் & மட்டும் ஆகியவற்றினை கூட்டி கிடைக்கும் சராசரி புள்ளி மூலம் தற்போதைய ஸ்டிக்கிலிருந்து, முன்னே 26-வது காலத்தில் வரையப்படுகிறது.

5. Chikou Span: தற்போதைய விலை நிலவரப்படி, ஸ்டிக் முடிவின் விலை புள்ளி கொண்டு, தற்போதைய ஸ்டிக்கிலிருந்து பின்னே 26 ஸ்டிக் தள்ளி வரையப்படும் கோடு.

மேற்க்கூறப்பட்ட ஐந்து காரணிகள் தான் இச்சிமோக்கு இண்டிகேட்டர் வரையப் பயன்படுத்தப்படுகிறது. அதன் அமைப்பினை கீழ் உள்ள படத்தில் பார்க்கலாம்.
Image
இச்சிமோக்கு ட்ரண்ட்:
இச்சிமோக்கு இண்டிகேட்டர்படி எளிதாக ஒர் பார்வையில் தற்போதைய மார்க்கெட் எந்த ட்ரெண்டில் சென்று கொண்டிருக்கிறது என்பதனை சொல்லிவிடலாம். அதற்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இச்சிமோக்கு மேக அமைப்பு. செங்கோவ் ஏ, மேல்பக்கம் ஆதிக்கம் கொண்டிருந்தால் அப் ட்ரெண்ட்(காளை), செங்கோவ் பி, மேல் பக்கம் ஆதிக்கம் கொண்டிருந்தால் டவுன் ட்ரெண்ட்(கரடி). மேலும்,

1. தற்போதைய விலை, மேகத்திற்கு மேல் இருந்தால் காளை.
2. தற்போதைய விலை, மேகத்திற்கு கீழ் இருந்தால் கரடி.
3. விலை மேகக் கூட்டத்திற்குள் இருந்தால், எல்லைக்குட்பட்ட அலைப்போக்கு.(Wave Trend)

4. விலை மேகத்திற்கு மேலிருக்கையில், செங்கோவ் ஏ ஆதிக்கம் இருந்தால் வலுவான காளை.
5. விலை மேகத்திற்கு கீழிருக்கையில், செங்கோவ் பி ஆதிக்கம் இருந்தால் வலுவான கரடி.

ichimoku trend pictures from forex market chart:
Image
Image
Image

இச்சிமோக்கு வர்த்தக சிக்னல்:

லைன் கிராஸ் சிக்னல்,
1. டெங்கன் லைன் கீழிலிருந்து மேலாக கிஜீன் லைனை தாண்டிச் செல்ல ஆரம்பிப்பது காளை வர்த்தகத்திற்கான ஆரம்ப அறிகுறி - Buy Signal.
( When the Tenkan line crosses the Kijun line from below, that is a signal to buy)

2. டெங்கன் லைன் மேலிருந்து கீழாக கிஜீன் லைனை தாண்டிச் செல்ல ஆரம்பிப்பது கரடி வர்த்தகத்திற்கான ஆரம்ப அறிகுறி - Sell Signal.
(When the Tenkan line crosses the Kijun line from above, that is a signal to sell)

சிக்கோவ் சிக்னல்
3. சிக்கோவ் லைன் மேகக்கூட்டத்திற்கு மேல் மற்றும் மார்க்கெட் கேண்டில் ஸ்டிக்ஸ்க்கு மேலாக அமைந்தால், காளை. அல்லது, சிக்கோவ் லைன் மேகக்கூட்டத்திற்கு கீழாகவும் மார்க்கெட் கேண்டில் ஸ்டிக்ஸ்க்கு கீழாகவும் அமைந்தால் கரடி.
(When the Chikou span line is above the cloud and above price, that is bullish. Likewise, when the Chikou span line is below the cloud and below price, that is bearish)

Image
Image
Image

உறுதியான சிக்னல்:

கிராஸ் சிக்னல் விழும்பொழுது, அதற்கு ஏதுவாக இச்சிமோக்கு மேகமும் ட்ரெண்டில் இருந்தால் நம்பிக்கையுடன் வர்த்தக ஆர்டர் புக் செய்யலாம்.

ட்ரெண்ட் சங்கம ரிவர்சல்.
டெங்கன் லைன், கிஜீன் லைனை கிராஸ் செய்து மேல் எழும்பிப் போகும் பொழுது, செங்கோவ் ஏ லைன் மேலாக ஆதிக்கத்தில் இருப்பது, கரண்ட் பிரைஸ் செங்கோவ் ஏ & பி லைனுக்கு மேலாக இருப்பது, சிக்கோவ் லைன் செங்கோவ் மேகத்திற்கு மேல் & கேண்டில் ஸ்டிக்ஸ்களுக்கு மேல் அமைவது என எல்லாம் காளைக்கு சாதகமாக இருப்பது அடுத்து ட்ரெண்ட் ரிவர்சலுக்கு வித்திடலாம், இதைப்போல் அனைத்தும் கரடிக்கு சாதாகமாக இருப்பது அப் ட்ரெண்ட் ரிவர்சலுக்கு ஏதுவாகலாம்.

Image
Ichimoku Support and Resistance:
வர்த்தகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வர்த்தக முறையினை கையாளுவது என்பது இயல்புதான். ஆனாலும் ஒர் சில பொதுமுறைகளை வர்த்தக பயிற்சியாளர்கள் கொடுப்பது வழக்கம். அந்த முறையில் இச்சிமோக்கு இண்டிகேட்டரை பயன்படுத்துவதற்கும் ஒர் சில பயன்பாட்டு முறைகளைக் கொடுத்துள்ளனர்.. அதில் ஒன்று, சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் கோடாக குமோ மேகங்களை கணக்கீடு செய்து ப்ரேக் அவுட் பாயிண்டில் வர்த்தகம் செய்வது.

இச்சிமோக்கு குமோ மேகங்கள் கேண்டில் ஸ்டிக்ஸ் கீழே அமைந்தால் சப்போர்ட்டாக எடுத்துக்கொண்டு, அதன் செங்கோவ் ஏ-ஐ சப்போர்ட் 1 ஆகவும், செங்கோவ் பி-யை சப்போர்ட் 2 ஆக குறிப்பிடுவார்கள். மார்கெட் பிரைஸ் சப்போர்ட் 2 ஐ- உடைத்து கீழிறங்குவது செல் ஆர்டர்க்கு உகந்த இடமாக வரையறுக்கிறார்கள்.


இச்சிமோக்கு குமோ மேகங்கள் கேண்டில் ஸ்டிக்ஸ் மேலே அமைந்தால் ரெசிஸ்டன்ஸ் ஆக எடுத்துக்கொண்டு, அதன் செங்கோவ் ஏ-ஐ ரெசிஸ்டன்ஸ் 1 ஆகவும், செங்கோவ் பி-யை ரெசிஸ்டன்ஸ் 2 ஆக குறிப்பிடுவார்கள். மார்கெட் பிரைஸ் ரெசிஸ்டன்ஸ் 2 ஐ- உடைத்து மேல் செல்வது பை ஆர்டர்க்கு உகந்த இடமாக வரையறுக்கிறார்கள்.

நாம் அதில் கவனமாகப் பார்க்க வேண்டியது, குமோ மேகத்தில் மேலோ கீழோ அமையும் கிடைமட்ட அமைப்புதான். மேகத்தில் இருக்கும் கிடைமட்ட பகுதியில் லைன் வரைந்தால் முந்தைய ரெசிஸ்டன்ஸ் பகுதியாகவோ அல்லது பாட்டம் பகுதியாகவோ இருக்கும்.

முந்தைய ரெசிஸ்டன்ஸ், அடுத்தக்கட்ட பாட்டமாகவோ அல்லது முந்தைய பாட்டம் அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் ஆகவோ அமையும் வாய்ப்பு உள்ளதால், மேகத்தில் அமையும் கிடைமட்ட அமைப்பிலான கோடு முக்கியத்துவம் பெறுகிறது.

பிப்னாச்சி முறையில் அடுத்தக்கட்ட முறையினை வரைந்துப் பார்த்தாலும், இச்சிமோக்கு குமோ மேகத்தில் அமைந்திருக்கும் கிடைமட்டப் பகுதி அருகே பெரும்பாலும் வருவதனைப் பார்க்கலாம்.

ஆகையால், மேகத்தில் உருவாகும் கிடைமட்டக் கோடுகளை ரெசிஸ்டன்ஸ் ஆகவோ சப்போர்ட்டாகவோ எடுத்துக் கொள்ள உகந்தது.

ichimoku indicator details in video

[youtube]https://www.youtube.com/watch?v=21jW63eAFJU[/youtube]
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: Ichimoku Trend Indicator - இச்சிமோக்கு வர்த்தகப் போக்கு அறிவிப்பான்

Post by vk90923 » Wed Feb 15, 2017 10:13 pm

ஆதி சார் வணக்கம், உங்களது ஒவ்வொரு செயலும் மிகவும் ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் உங்களை மென்மேலும் வாழ்த்துகிறேன் நன்றி.

Tenkan-san-(red line) டெங்கன் - சிகப்பு நிற கோடு
Chikou-san-(green-line) சிக்கோவு-பச்சை நிறகோடு
Kiju-san-(blue-line) ஊதா நிறகோடு
Senkou A -san-(mount) மலை மேடு
Senkou B -san-(cloud) மேகமூட்டம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Ichimoku Trend Indicator - இச்சிமோக்கு வர்த்தகப் போக்கு அறிவிப்பான்

Post by ஆதித்தன் » Sat Feb 18, 2017 8:26 am

Image
Ichimoku Support and Resistance:
வர்த்தகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வர்த்தக முறையினை கையாளுவது என்பது இயல்புதான். ஆனாலும் ஒர் சில பொதுமுறைகளை வர்த்தக பயிற்சியாளர்கள் கொடுப்பது வழக்கம். அந்த முறையில் இச்சிமோக்கு இண்டிகேட்டரை பயன்படுத்துவதற்கும் ஒர் சில பயன்பாட்டு முறைகளைக் கொடுத்துள்ளனர்.. அதில் ஒன்று, சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் கோடாக குமோ மேகங்களை கணக்கீடு செய்து ப்ரேக் அவுட் பாயிண்டில் வர்த்தகம் செய்வது.

இச்சிமோக்கு குமோ மேகங்கள் கேண்டில் ஸ்டிக்ஸ் கீழே அமைந்தால் சப்போர்ட்டாக எடுத்துக்கொண்டு, அதன் செங்கோவ் ஏ-ஐ சப்போர்ட் 1 ஆகவும், செங்கோவ் பி-யை சப்போர்ட் 2 ஆக குறிப்பிடுவார்கள். மார்கெட் பிரைஸ் சப்போர்ட் 2 ஐ- உடைத்து கீழிறங்குவது செல் ஆர்டர்க்கு உகந்த இடமாக வரையறுக்கிறார்கள்.


இச்சிமோக்கு குமோ மேகங்கள் கேண்டில் ஸ்டிக்ஸ் மேலே அமைந்தால் ரெசிஸ்டன்ஸ் ஆக எடுத்துக்கொண்டு, அதன் செங்கோவ் ஏ-ஐ ரெசிஸ்டன்ஸ் 1 ஆகவும், செங்கோவ் பி-யை ரெசிஸ்டன்ஸ் 2 ஆக குறிப்பிடுவார்கள். மார்கெட் பிரைஸ் ரெசிஸ்டன்ஸ் 2 ஐ- உடைத்து மேல் செல்வது பை ஆர்டர்க்கு உகந்த இடமாக வரையறுக்கிறார்கள்.
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: Ichimoku Trend Indicator - இச்சிமோக்கு வர்த்தகப் போக்கு அறிவிப்பான்

Post by vk90923 » Sat Feb 18, 2017 1:33 pm

மிகவும் நன்றி சார் மேலும் புதிய தகவல்களையும் மற்றும் inx பற்றி பல புதிய தகவல்களை பற்றி நம் படுகை உறுப்பினர்களுக்கு பதிவிடும்படி வேண்டி கொள்கிறேன் சார்.நன்றி
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”