ஆப்சன் ட்ரேடிங் இலாபப் பணம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சுருக்கமாகச் சொல்கிறேன்.
ஆப்சன் ட்ரேடிங் நிர்வாகம் நான்கு தனிப்பிரிவுகள் சேர்ந்த குழு நிர்வாகம் ஆகும். அவை ரெகுலேட்டர் (regulator), மார்க்கெட் மேக்கர், புரோக்கர் மற்றும் ட்ரேடர்.
சட்டப்படி கணக்குகளைத் தணிக்கை செய்து ஆப்சன் ட்ரேடிங் புரோக்கர் & மேக்கர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் ரெகுலேட்டர். பல ரெகுலேட்டர்கள் குழு பாரக்ஸ் அனுமதி பெற்ற நாடுகளில் உள்ளது. குறிப்பிட்ட புரோக்கர் எந்த ரெகுலேட்டரின் கீழ் செயல்படுகிறார் என்பதனை தளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
மார்க்கெட் மேக்கர் தான் இலாபங்களை வழங்குவதற்கான பணத்தினை முதலீடு செய்கிறார்கள். ஒர் புரோக்கர் தளம் பல மார்க்கெட் மேக்கர்களின் முதலீடுகளை உள்ளீடாகக் கொண்டு செயல்படுகின்றன. இவர்கள் வங்கிகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களாகவும் இருக்கலாம்.
புரோக்கர் தான் வெப்சைட் வைத்து ட்ரேடர்கள் ட்ரேடிங் செய்ய ஆவண செய்கிறார்கள். ஆப்சன் ட்ரேடிங் வசதியினை பல புரோக்கர்கள் வழங்குகிறார்கள்.
பணத்தினை முதலீடு செய்து ட்ரேடிங் செய்யும் நாம் தான் ட்ரேடர்கள்.
ஆப்சன் ட்ரேடிங்கில் புரோக்கர்கள் மார்க்கெட் மேக்கர்க்கும் ட்ரேடர்க்கும் நடுவில் இருந்து ஒபன் செய்யும் ஆர்டரிலிருந்து கமிசனை எடுத்துக் கொண்டு, முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கான இலாபத்தினை உடனே பொதுக்கணக்கிலிருந்து பிடித்தம் செய்து தருகிறார்கள். இதில், மார்க்கெட் மேக்கரும் பணம் இலாபம் பார்க்க வாய்ப்பு உள்ளது, ட்ரேடரும் பணம் இலாபம் பார்க்க வாய்ப்பு உள்ளது.
ட்ரேடர்க்கான இலாபம் வழங்குப்படுவதனை கொஞ்சம் விவரமாக தெரிந்ததை சொல்கிறேன், புரிந்து கொள்ளுங்கள்...
ஆப்சன் ட்ரேடிங்கில் கால் மற்றும் புல் என இரண்டே ஆப்சன்... இன்னும் தெளிவாகச் சொன்னால், வெற்றி தோல்வி என்ற இரண்டே ஆப்சன் தான்.
யார் பக்கம் வெற்றி எனக் கூறிதான் ட்ரேடர்கள் 85% இலாபத்தினை மையமாகக் கொண்டு ஆர்டர் புக் செய்கிறார்கள்.
மார்க்கெட் விலை மேல் செல்வதனை காளை என்றும் கால் ஆப்சன் வெற்றி என்றும் கூறுவார்கள்.
மார்க்கெட் விலை கீழே சென்றால் கரடி என்றும் புட் ஆப்சன் வெற்றி என்றும் கூறுவார்கள்.
புரோக்கர் தளத்தில் நிறைய ட்ரேடர்கள் இருப்பார்கள். கால் கிளிக் பண்ணவங்க ஒர் பக்கம், புட் கிளிக் பண்ணவங்க ஒர் பக்கம் என முதலீடுகள் பிரிக்கப்பட்டு, வெற்றியாளர்க்கு தோல்வியாளர் பணத்திலிருந்து 85% கொடுக்கப்பட்டது போக மீதம் 15% புரோக்கர் எடுத்துக் கொள்வார்.
சுருங்க விளங்கச் சொன்னால்,
இராமசாமி 100 டாலர் கால் ஆப்சன் ஆர்டர் ஒபன் செய்திருக்கிறார்.
முனியாண்டி 100 டாலர் புட் ஆப்சன் ஆர்டர் ஒபன் செய்திருக்கிறார்.
இருவரது பணமும் புரோக்கரிடம் கொடுத்தாச்சு.
ரிசல்ட் காளை வென்று, கால் ஆப்சன் தேர்ந்தெடுத்தவர் வெற்றியாளர்.
இப்போ இராமசாமிக்கு 185 டாலர் கொடுக்கப்படும். முனியாண்டிக்கு சுழியம் தான் கிடைக்கும். மீதமுள்ள 15 டாலர் புரோக்கர்க்கு சென்றுவிடும்.
சரி, அடுத்தும் இராமசாமி 100 டாலர் கால் ஆப்சன் ஆர்டர் ஒபன் செய்கிறார்.
முனியாண்டி 50 டாலர் மட்டுமே புட் ஆப்சன் ஆர்டர் ஒபன் செய்கிறார்.
ரிசல்ட் காளை வென்று மீண்டும் இராமசாமி 185 இலாபத்திற்கு தகுதி ஆகிவிடுகிறார்.
ஆனால், இருப்பது 150 டாலர்?
இங்குதான் மார்க்கெட் மேக்கர் முதலீடு பணம் உள்ளீடு ஆகிறது.
எந்த ஆப்சன் வென்றதோ அதற்கு இணையான தொகையை எதிர் ஆப்சன் பகுதியில் இல்லை என்றால், தேவையான பணத்தினை மார்க்கெட் மேக்கர் தனது நட்டமாக கொடுத்துவிடுவார்.
அதைப்போல், வெற்றியான ஆப்சன் பகுதியில் குறைவான பணம் இருந்து, தோல்வியான பகுதியில் அதிகம் பணமிருந்தால், கூடுதல் பணம் மார்க்கெட் மேக்கர்க்கு இலாபமாக சென்றுவிடும்.
உதாரணத்திற்கு, மேல் குறிப்பிட்ட இரண்டாவது ஆர்டரில் 100 டாலர் போட்ட இராமசாமிக்கு பதில், 50 டாலர் போட்ட முனியாண்டி வென்றிருந்தால், கூடுதல் தொகையான 50 டாலர் மார்க்கெட் மேக்கர்க்கும், முனியாண்டிக்கு 185% ஆன, 92.50 டாலரும், புரோக்கர்க்கு 7.50 டாலரும் என 150 டாலர் பிரிக்கப்படும்.
இப்பொழுது ஆப்சன் பாரக்ஸ் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும், இதில் புரோக்கர்கள் என்பது வெறும் மார்க்கெட் மேக்கர்க்கும் ட்ரேடர்க்கும் நடுவில் மத்திமாக செயல்படும் ஒர் மூன்றாம் மனிதர். குறிப்பாக தணிக்கைக்கு உட்பட்ட அரசு அப்ரூவல் பெற்றவர் தான் ஆப்சன் புரோக்கர்.
ஆப்சன் ட்ரேடிங்கில் சம்பாதிக்கும் தொகையை உடனே எடுத்துக் கொள்ளலாம்.
ஆயிரம் ரூபாய் போட்டு, ஒரு இலட்சம் ரூபாய் சம்பாதித்தால் கூட உடனே எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு நம்பகமான உண்மையான பாரக்ஸ் புரோக்கர் தளத்தில் வர்த்தகம் செய்தல் வேண்டும் என்பது அவசியம்.
ஆப்சன் ட்ரேடிங் பயிற்சி எடுத்துக் கொள்ள கிளிக் 2 எம் டாட் காம் (www.click2m.com) வெப்சைட்டில் ஒர் கணக்கு தொடங்கிக் கொள்ளுங்கள்.
ஆப்சன் ட்ரெடிங்க் பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
பாரக்சில் சம்பாதிக்க வாழ்த்துகள்.
ஆப்சன் ட்ரேடிங்கில் ஒர் நிமிடத்தில் 85% இலாபம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked