படித்ததில் பிடித்தது -கேள்விகள் பல?

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

படித்ததில் பிடித்தது -கேள்விகள் பல?

Post by cm nair » Thu Nov 07, 2013 11:41 pm

ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்


தமிழின,இந்திய,இந்து கலாசாரத்தில்
நிலையாமை தத்துவத்திற்க்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு
இதை போற்றி புகழ்ந்து படிப்பித்தது ஏன்?
ஒருபக்கம் power of positive thinking பேசுகிறது
மறுபக்கம் வாழ்வே மாயமென ஒப்பாரி ஏனோ?
கேள்விகள் பல?
விடை கிடைத்தது இந்தக் கவிதையில்?
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி இதில்
வாழ்வதில்லை நீதி
"நிலை" மாறுகிறது.விலைவாசி போல விலைமாறமாற‌
நம் நிலைகளும் மாறுகிறது
பூமியே நிலை மாறி சுற்றுது
மனிதர் மட்டுமென்ன?
சொன்ன வாக்குறுதிகள் காற்றோடு போச்சு
உறுதி மொழிகள் எதிலும் உறுதியே இல்லை
நாவுக்கு கொள்கை இல்லை
கொள்கைகள் மாறுகிறது
குணங்கள் மாறுகிறது
பச்சோந்தி போல நிறம் மாறுகிறது மனிதமனம்
எதுவுமே நிலையாக இல்லை
இதில் உயிரை மட்டும் நிலைக்க வைக்க முடியுமா என்ன?
பிறந்தவன் இறப்பது உறுதி
ஆனால் பிறப்புக்கு முன்பே இறப்புமுண்டு
பிரசவத்திலே இறந்து கூட பிறப்புமுண்டு
இப்படி ஏன் சோககீதம் பாடுகிறார்
இப்படி மரணம் என அமங்கலம் பாடினால்
மனிதனுக்கு எப்படி ஆர்வம் வரும்?
எப்படி உற்சாகம் வரும்?
எப்படி ஆசை வரும்
ஆர்வம்,உற்சாகத்தை குறைக்க அவர் இப்படி பாடவில்லை
ஆசையை அதனால் விளைந்த அநீதியை தடுக்கத்தான்
ஞானிகள் நிலையாமை தத்துவத்தை நிலைநிறுத்தினார்
'நிலைக்கும்'என கனவு காண்கிறது மனம்
அழியும் உடலுக்காக
ஆவியாகும் உயிருக்காக‌
பேராசைப்பட்டு நீதியை மறக்கிறது
சமூக நீதியை மற‌ந்து
மானுடதர்மத்தை துறந்து
கொலை,கொள்ளை,ஊழல வன்முறை,காமம்,களவு
என அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணமாகிறது இந்த கனவு
கனவு காணாதே கலைந்து விடும் என எச்சரித்தார்
கலைந்தோடும் இந்த வாழ்வுக்காக,எரியும் இந்த உடலுக்காக‌
மனித சாதியே நீர் மானுட நீதியை மறவாதீர்,என எச்சரித்தார் நகைச்சுவையாக‌
Post Reply

Return to “கவிதை ஓடை”