படித்ததில் பிடித்தது-மனமுடைந்து நிற்கிறது பட்ட மரம் ....

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

படித்ததில் பிடித்தது-மனமுடைந்து நிற்கிறது பட்ட மரம் ....

Post by cm nair » Mon Oct 28, 2013 12:20 pm

எனது
இலைகள் எங்கே போயின ...?
எனது
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன
மரத்தின் ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல்
மனமுடைந்து
நிற்கிறது பட்ட மரம் நான் ....!!!

காதலுடன்
என் கிளையில் கொஞ்சி
குழாவிய இளம் பறவைகளின்
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை
இழந்தேன் .........!!!

வாட்டும் வெயிலில்
நடை தளர்ந்து வரும் போது
நிழலுக்காக வந்து பேசும்
மனிதர்களின் இன்பபேச்சை
கேட்பதை இழந்தேன் .....!!!

ஊஞ்சலலாடி விளையாடும்
சின்ன சின்ன முத்துக்களின்
செல்லமான சண்டையையும்
ஓலமிட்டு அழும் சத்தத்தையும்
கேட்பதையும் இழந்தேன் ....!!!

காதலர்கள் மரத்தடியில்
ஊடல் செய்து உறவாடும்
அழகை என் கள்ள கண்ணால்
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!

பட்டுப்போன
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும்
அரித்துக்கொண்டிருக்க
போதாததற்கு குறைக்கு
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில்
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!

அதோ
வருகிறது என் பாசக்கயிறு
கோடரி என்ற சாவுகாவி
ஏய் கோடரியே -கவனி
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும்
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே
பயன்படுத்துகிறாய் .....!!!

(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம்
வளர்ப்போம் )
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படித்ததில் பிடித்தது-மனமுடைந்து நிற்கிறது பட்ட மரம் ....

Post by ஆதித்தன் » Mon Oct 28, 2013 12:29 pm

பச்சைச் சேலையில்
பாவையாய் நின்றாலும்
பிடுங்கித் திங்கும் ஊரில்
பட்டுவிட்டப் பின் ஏது
பறந்த மனம்
Post Reply

Return to “கவிதை ஓடை”