நிஜமான நிழல்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

நிஜமான நிழல்!

Post by mubee » Sun Sep 15, 2013 11:37 am

எதிர்பார்ப்பை தளமாக்கி
இனிய நட்பு இயங்குவதில்லை

நிலவு நிலத்தை
நிரந்தரமாக மறந்தாலும்
உன்னதமான நட்பு
ஒரு பொழுதும் உறங்காது

உடுக்கை இழந்தவேளை
உதவக்கரம் தானாகவரும்
இடுக்கண் வீழ்ந்த வேளை
ஏற்ற தோழமை ஓடிவரும்

அர்த்த இராத்திரியில்
அணிசேர்ந்து குடைபிடிப்போர்
எந்த இராத்திரியில்
என்ன ஆவார் தெரியாது

பசை கண்டு உறவாடும் நட்பு
அது காய்ந்த போது
அதுவாய் அகன்றுவிடும்

உள்ளபோது சேர்ந்திருந்து
உறிஞ்சிச் சுகங்கண்ட
ஒட்டுண்ணி நட்புகள்
மண் அள்ளிப் போட சிலவேளை
மயானத்துக்கு வரக்கூடும்

சத்தியமான தோழமையை நீ
சதிக்காரத்தனமென நிராகரித்தாலும்
உனது அந்திப் பயணத்திலும்
நிழலாகப் பின்தொடர்ந்து
தகனத்திலும் சங்கமித்து அது
தன்னையே இழந்துவிடும்
Post Reply

Return to “கவிதை ஓடை”