பொக்கிஷமாய் பாதுகாக்கிறேன்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

பொக்கிஷமாய் பாதுகாக்கிறேன்

Post by Thamillmadhan » Sat Jul 28, 2012 10:51 am

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
ஏதோ ஒரு புள்ளியில்
சந்தித்தோம் !

பெயரை மட்டுமே
அறிந்து நட்புகொண்டோம்
எவ்வளவோ முரண்கள்
இருந்தபோதும் - நாம் கொண்ட
அன்பு குறைந்துவிடவில்லை!

தோல்விகளை கண்டு - நான்
துவண்டு போன நொடியில்
ஒரு அன்னையாய்
எனை தாங்கினாய்!

தவறான பாதைகளில் -நான்
அடியெடுத்து வைத்த போது
எனை தடுத்து
நல்வழி காட்டினாய்!

தோல்விகளை முறித்து - நான்
வெற்றி கண்ட நேரத்தில்
நீயே வென்றதாய் எண்ணி
பெருமை கொண்டாய்!

உதிரத்தில் பங்கு
கொண்ட - உறவுகளும்
உதவ தயங்கிய
காலத்தில்...

உயிரில் பங்கு கொண்ட
உறவாய் - வாழ்க்கை எனும்
முள்ப்பாதை கடக்க
உடன் நிற்கும் நட்பே!

உன்னை போற்றி
பொக்கிஷமாய் பாதுக்கப்பதை
தவிர - வேறு என்ன
செய்து விடமுடியும்
என்னால்....
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொக்கிஷமாய் பாதுகாக்கிறேன்

Post by umajana1950 » Sat Jul 28, 2012 11:45 am

உதிரத்தில் பங்கு
கொண்ட - உறவுகளும்
உதவ தயங்கிய
காலத்தில்...

உயிரில் பங்கு கொண்ட
உறவாய் - வாழ்க்கை எனும்
முள்ப்பாதை கடக்க
உடன் நிற்கும் நட்பே!
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
இந்த தாடிக்கார கிழவனின் வரிகளை, உங்கள் கவிதையை நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
வாழ்த்துக்கள்.
Post Reply

Return to “கவிதை ஓடை”