உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

Post by rajathiraja » Fri Mar 09, 2012 7:11 pm

பெண்ணே
அதோ பார்
உலக மகளிர் தின விழாவின்
தோ"ரணங்கள்" ஆடிக்கொண்டிருக்கின்றன.
கொஞ்ச நேரம்
உற்றுப்பார் அந்த ஊமை ரணங்களை.
மி்ன் மி்னி பூச்சியல்ல நீ.
மி்ன்னணு யுகத்தின் சுடரேந்தி நீ.

காதல்
உன் பயணத்தில்
ஒரு மைல் கல் தான்.
ஆனாலும்
தன் ஜிகினா எழுத்துக்களால்
அதை மாணிக்க கல்லாக்கிவிட
புறப்பட்டு விட்டது
புதுக் கவிஞர் கூட்டம்.
அந்த பாராங்கல்லில் நசுங்கிவிடாமல் இருக்க
பாராமுகம் காட்டு!..பெண்ணே
பாராமுகம் காட்டு நீ.

இந்த பட்டாளங்களிடையே
நீ பட்டுப்போய் விடாதே.

கவிதைவரிகளுக்கு
முடக்கு வாதம் ஏற்படும்போது
அவை
காதல் பற்றிய
"ஹைக்கூக்கள்" என்று
அழைக்கப்படுகின்றன.
சொற்களுக்கு
முட்கிரீடம் சூட்டி
சூன்ய வாதத்தையும்
மாயா வாதத்தையும்
காதலாக்கி
உன்னை
ஆதாம்களுக்கு ஏற்ற ஏவாளின்
மாடல்களாக்கி
மனம் களிப் பவர்களின்
தீனியாகி விடாதே.
மாதர் தம்மை அடிமையாக்கும்
மடமையை கொளுத்தும்
தீயாகி விடு.
காதல் சாக்கரின் தடவிய
இந்த பஞ்சுமி்ட்டாய்க்காரர்கள்
தூர ஓடிவிடுவார்கள்

உன்னைச்சுற்றி
சிலந்தி வலைகள் போல்
"ஜொள்" வலைகள்
பின்னும் இந்த கவிஞர்களிடம்
கவனம் தேவை..பெண்ணே
கவனம் தேவை.


இளந்தளிர்களே!
காதல் எனும்
மனிதநேயத்தின்
முதல் தீப்பொறியிலேயே
காதலைச் சுட்டு தின்று
உணர்ச்சியை பூதாகரமாக்கும்
புதுக்கவிதைப்பூச்சாண்டிகளை
புறந்தள்ளுங்கள்.


மிக மிக மெல்லிய
சோப்புக்குமிழிகளில்
சொர்க்கத்தீவுகள்
அமைத்து
கவிதைகளில்
கல்லா கட்டும்...இந்த
குல்லா வியாபாரிகளின்
குரல்களைப்
புரிந்து கொள்ளுங்கள்.

எதேச்சையாய்
அவர்கள் பேனா தெளித்த
மைப்புள்ளிகள் எல்லாம்

கால்விரல் நகத்துக்கு
பூசிய"மெகந்தி" என்பார்கள்.

சன்னல் கம்பிகள் வழியேயும்
முத்தம் இட
அந்த நிப்புமுனைகள்
உதடு குவிக்கும்.
கேட்டால்
அந்த பஞ்சுமேகம்
உன்
கன்னம் என்பார்கள்.

உன் கால்
கொலுசுகளின் ஓசைகள் பற்றி
"கொசுக்கடிகளாய்"
அவர்களின் வர்ணிப்புகள்.
அதற்கு யார் மருந்து அடிப்பது?
கவலை வேண்டாம்.
இந்த உலக மகளிர் தினமே
மருந்து அடிக்கட்டும்.
அதற்கான நேரம் இது.
உன் காற்சிலம்பை கழற்றி உடை.
உன் அறிவின் கதிரியக்கத்தில்
வைரங்கள் தெறிக்கட்டும்
வைரஸ்கள் தொலையட்டும்.

ஒரு புழுக்கைப்பென்சிலை
வைத்துக்கொண்டு
நகரப் பேருந்து நடத்துனர்
எச்சில் தொட்டு
கொடுத்த
பஸ் டிக்கட்டின்
பிஞ்சு சீட்டில்
ட்ஹ்இடேர்என்ர்உ
வானவில்லையும்
வண்ணாத்திப்பூச்சியையும்
அதில்
கசக்கிப்பிழிந்து
வார்த்தைகளை வார்த்து தருவார்கள்.
கேட்டால்
அந்த பஸ்ஸில் வந்த
உன்
சுடிதார் வர்ணங்களே
அவை என்பார்கள்.


அண்ணா சாலை தோறும்
தூவிக்கிடப்பது
தூசிகள்
இல்லையாம்.
காதலிகளின்
இதய ரோஜாக்கள் தானாம்.
கேட்டால்
அண்ணா சாலை
அன்று மட்டும்
தார் பூசவில்லை
ரோஜாக்களை
பூசிக்கொண்டது.
ஏனெனில்
அன்று காதலர் தினம்
என்று ஒருவன் கவிதை எழுதுவான்.


!

வாசலில்
உன் சுண்ணாம்புக்கோல
வளைவு நெளிவுகள்
அவன் அம்மா
பிழிந்து தந்த
ஜிலேபியையை விட கூட
இனிப்பு என்பான் இன்னொருவன்

இந்த தப்புத்தாளங்களை
வைத்துக்கொண்டு
சாரம் இல்லாத சில
வாரப்பத்திரிகைகள
காரம்
ஏற்றிக்கொள்ளுகின்றன.


காதல் எனும்
பூங்குமிழிக்கு..அவர்கள்
பூப்பல்லக்கு தூக்கட்டும்.
ஆனால்
பெண்ணியம் எனும்
கண்ணியம்
உருவாகவிடாமல்
அதன் சவப்பெட்டிக்கு
அல்லவா
அந்த காகிதப்பக்கங்களில்
சல்லாத்துணி விரிக்கிறார்கள்.

மெல்லிய
மயிலிறகுகளைக் கொண்டு
காது குடையும்
இவர்களது
கிளு கிளுப்பு வேலைகளில்
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
எங்கோ
தொலைந்து போகக்கூடாது அல்லவா?

கம்பியூட்டர் வகுப்புகள்
காமன் கரும்பு வில்லேந்தும்
களம் ஆகிப்போனதாய்
கணினியின்
பூலியன் அல்ஜீப்ராவில்கூட
காதலியின்
"ப்ரா" தைத்து
இவர்கள் கவிதை எழுதிவிடுவார்கள்.


கார்டியாலஜி என்றால்
இதயம் பற்றி
மட்டுமே
இந்த மக்கு டாக்டர்கள்
விரிவுரை ஆற்றுவார்கள்.
இதய வடிவில்
அவள்
அனுப்பியிருக்கும். அந்த
வேலண்டின்
"கார்டு"பற்றி
இவர்களுக்கு என்ன தெரியும்.
இந்த கார்டு
கொஞ்சம்
கசங்கினாலும்
எனக்கு
"இஸ்கேமியா" தான்.
காதலின்
இன்னொரு
இனிமையான பெயரும்.
இஸ்கேமியா" தான்.
மூட ஜனங்களே தெரிந்து கொள்ளுங்கள்
என்று
காதல் பற்றி ஒரு "மேனிபெஸ்டோ"
எழுதித்தள்ளுவான்
ஒரு இந்திரஜாலக்கவிஞன்.

புதுக்கவிஞர்களே
இன்று மட்டுமாவது
உங்கள் கவிதைகளுக்கு
விடை கொடுங்கள்.

இதற்கு
உலகத்து பெண்ணியமே
ஒன்று படு! போராடு!
இதனால் நீங்கள் இழக்கப்போவது
ஒன்றுமி்ல்லை.
முலாம் பூசிய
புதுக்கவிதைகள் எனும்
காக்காய்ப்பொன் விலங்குகளே

- ருத்ரா

Thanks : வார்ப்பு
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

Post by umajana1950 » Fri Mar 09, 2012 10:56 pm

கவிதைவரிகளுக்கு
முடக்கு வாதம் ஏற்படும்போது
அவை
காதல் பற்றிய
"ஹைக்கூக்கள்" என்று
அழைக்கப்படுகின்றன.
மிக மிக அற்புதமான கவிதை வரிகள். ஆனால், ஏனோ காதலை ஒரு தீண்டத் தகாதது போல் பாவித்திருக்கிறார்கள்.
-----------
கவிதை ஓடை சொந்தக் கவிதைகளுக்கு மட்டும் என்பதை மறந்து விட்டீர்களா?
அல்லது ருத்ரா உங்கள் புனை பெயரா......
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:01 pm

ராஜாவின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதை எனவே இந்த கவிதை ராஜாவுடையது தான்.... :grain:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

Post by rajathiraja » Sat Mar 10, 2012 5:23 am

umajana1950 wrote:கவிதை ஓடை சொந்தக் கவிதைகளுக்கு மட்டும் என்பதை மறந்து விட்டீர்களா?
அல்லது ருத்ரா உங்கள் புனை பெயரா......
நான் மறக்கவில்லை. ஆனால் நான் ரசித்த இந்த கவிதையை பதிய வேண்டும் என என் மனம் துடித்தது. எங்கே பதிவது? பழைய படுகையில் மாணவர் களம் இருந்தது. இதில் அது மிஸ்ஸிங்! எனவே இங்கே பதிந்திருக்கின்றேன். படுகை பிரச்சனைகள் தீர்ந்தபின் ஒரு ஒழுங்கமைப்பு ஏற்பட்ட பின் சரி செய்யலாம் என காத்திருக்கின்றேன்.
umajana1950 wrote:அல்லது ருத்ரா உங்கள் புனை பெயரா......

புனை பெயரும் அல்ல.. பூனை பெயரும் அல்ல... இந்த அளவுக்கெல்லாம் நமக்கு திறமை இல்லங்க! ஹி...ஹி
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

Post by rajathiraja » Sat Mar 10, 2012 5:26 am

muthulakshmi123 wrote:ராஜாவின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதை எனவே இந்த கவிதை ராஜாவுடையது தான்.... :grain:
என்னை புரிந்து கொண்ட லட்சுமியம்மாவுக்கு நன்றிகள்! இது என் எண்ணத்தை பிரதிபலிப்பவையே! ஆனால் இதை நான் எழுதவில்லை. அடுத்தவரின் படைப்பை அப்படியே போட்டு ஒரு திருட்டு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே தான் சொந்தக்காரரான ருத்ராவின் பெயரை சேர்த்தே போட்டிருக்கின்றேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 7:26 am

rajathiraja wrote:
umajana1950 wrote:கவிதை ஓடை சொந்தக் கவிதைகளுக்கு மட்டும் என்பதை மறந்து விட்டீர்களா?
அல்லது ருத்ரா உங்கள் புனை பெயரா......
நான் மறக்கவில்லை. ஆனால் நான் ரசித்த இந்த கவிதையை பதிய வேண்டும் என என் மனம் துடித்தது. எங்கே பதிவது? பழைய படுகையில் மாணவர் களம் இருந்தது. இதில் அது மிஸ்ஸிங்! எனவே இங்கே பதிந்திருக்கின்றேன். படுகை பிரச்சனைகள் தீர்ந்தபின் ஒரு ஒழுங்கமைப்பு ஏற்பட்ட பின் சரி செய்யலாம் என காத்திருக்கின்றேன்.
காப்பி பேஸ்ட் பிற்காலத்திற்கு நல்லதல்ல என சொல்லியிருந்தேன். அதன்படி இங்கு காப்பி பேஸ்டினை ஒரே ஒர் துணைக்களமாக உருவாக்கிவிட்டேன்.

பிற தளத்திலிருந்து எடுத்த, எந்த துறை சார்ந்த படைப்பாக இருந்தாலும், டாபிக் முன்பு அதனை குறிப்பிட்டு காப்பி பேஸ்ட் துணைக்களத்தில் பதியலாம். எ.கா : கவிதை - நீ வேண்டும், கட்டுரை: எங்கே போகிறது படுகை, கதை: ஆசைகள் அழிகிறது... இப்படி.


துணைக்களங்களாக பிரிப்பது வாசகர்கள் எளிதில் தேர்வு செய்து படிக்கத்தான், மற்றபடி நம் உழைப்பை பறைசாற்றும் சர்ச் இஞ்சின், உள்ளே உள்ள எழுத்துக்களைத்தான் பார்க்குமே தவிர.. சரியாக துணைக்களம் ஆக்கப்பட்டிருக்கிறதா என்றல்ல. ஆகையால், வாசகர்கள் நம் சொந்த பதிவுகளை படிக்கவே முன்னுரிமை கொடுத்து, நம் ஆக்கங்களை மட்டும் எடுத்துச் செல்வதில் தான் நம் சிறப்பு, திறமை, வளர்ச்சி என அனைத்தும் இருக்கிறது.

அதைப்போல், முன்பு போன்று ஒருவர் காப்பி பேஸ்டாக செய்தால், அவரது பதிப்பை தவிர்த்து பார்க்க அல்லது காப்பி பேஸ்ட் துணைக்களத்தை தவிர்த்து புதிய பதிவுகளைப் பார்க்க, முகப்பு பக்கத்தில் New post அருகில் Active Topics என இருக்கும் ஆப்சனை உபயோகிக்கலாம்.


ஒவ்வொருவரும்... காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, நண்பர்களை சரியாக பதிவிட உதவுவீர்கள் என நம்புகிறேன்.. அவ்வாறு பிற நண்பர்களை சரியாக பதிவிடச் செய்வதையே நம் முதல் பணியாக கருத வேண்டும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு! - ருத்ரா

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 1:23 pm

rajathiraja wrote:
muthulakshmi123 wrote:ராஜாவின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதை எனவே இந்த கவிதை ராஜாவுடையது தான்.... :grain:
என்னை புரிந்து கொண்ட லட்சுமியம்மாவுக்கு நன்றிகள்! இது என் எண்ணத்தை பிரதிபலிப்பவையே! ஆனால் இதை நான் எழுதவில்லை. அடுத்தவரின் படைப்பை அப்படியே போட்டு ஒரு திருட்டு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே தான் சொந்தக்காரரான ருத்ராவின் பெயரை சேர்த்தே போட்டிருக்கின்றேன்.
சில கதை கட்டுரை கவிதைகளை படிக்கும் போது ஏதோ நமக்காக நாமே எழுதியது போன்று தோன்றும் ..அதுபோல இந்த கவிதை ராஜாவை ஈர்த்திருக்கிறது சரியா ராஜா..
Post Reply

Return to “கவிதை ஓடை”