ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by udayakumar » Fri Mar 09, 2012 1:04 pm

ஆதித்தா!!!
நீ அமைத்த புதிய தளம்...
புத்துணர்வுடன் வளர்ந்து...
இவ்வுலகின் இணையத்தில்
புதுப் பொழிவுடன்
ஆதிக்கம் செலுத்த வேண்டுமென
வாழ்த்துகிறேன் ..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by Aruntha » Fri Mar 09, 2012 2:50 pm

ஆதித்தனின் ஆயுள் கனவு
ஆன்லைன் தளம்
அமைத்து விட்டான்
அழகிய வடிவில்
அனுதினமும் போராடி
அவனியில் வளர்ந்து விட்டான்
ஆக்கங்கள் பல போட்டு
ஊக்கங்கள் பல தந்து
அனைவருக்கும் வாழ்வளிக்க
அன்பான வாழ்த்துக்கள்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by rajathiraja » Sat Mar 10, 2012 5:37 am

ஆதித்தா!
பாதிப்புகளை படிகளாக்கி சாதிக்கலாம் வா!

ஆயுதத்தை வீசினால் தான் காயம் ஏற்படும்.
காகிதத்தை வீசினால் காயம் ஏற்படுமா?
ஆனால் அந்த காகிதமே உலகை வெல்லும் ஆயுதமாக மாறுவது
இந்த இணைப்புக்களால் மட்டுமே!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 1:35 pm

அன்பானவர்கள் நிறைந்த தளம்

ஆதித்தனின் ஆதிக்கம் நிறைந்த தளம்

இணைப்பை ஏற்படுத்தும் இணைய தளம்

ஈடு இணையில்லா புகழை பெறப்போகும் தளம்

உழைப்பவர்கள் நிறைந்த தளம்

ஊதியத்தை அள்ளிக் கொடுக்க போகும் தளம்

எதிர்காலத்தில் நிலைத்தன்மை பெறப் போகும் தளம்

ஏதிலார் குற்றத்தையும் தன்குற்றம் போல் காணும் தளம்

ஐயத்தை போக்கி ஆர்வத்தை அளிக்கும் தளம்

ஒற்றுமையை உறுப்பினரிடையே ஏற்படுத்தும் தளம்

ஓயாத உழைப்பை கொடுக்கும் ஆதியின் தளம்

ஒளடதமாக உறுப்பினருக்கு விளங்கும் தளம்

வாழ்க வளர்க.....
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by udayakumar » Sat Mar 10, 2012 1:51 pm

Aruntha wrote:ஆதித்தனின் ஆயுள் கனவு
ஆன்லைன் தளம்
அமைத்து விட்டான்
அழகிய வடிவில்
அனுதினமும் போராடி
அவனியில் வளர்ந்து விட்டான்
ஆக்கங்கள் பல போட்டு
ஊக்கங்கள் பல தந்து
அனைவருக்கும் வாழ்வளிக்க
அன்பான வாழ்த்துக்கள்
அருந்தா அப்படி என்ன சோகமோ?
நான் வந்த நாளிலிருந்து கன்னத்திலுள்ள
கைடியடுக்கவில்லையே!
எனக்கே கை வலிக்கிறதம்மா ?
இனியாவது உங்கள் சோகம் களைந்து..
கைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by Aruntha » Sat Mar 10, 2012 2:34 pm

அட கடவுளே நான் கன்னத்தில வச்சிருக்கிற கைக்கு இவ்வளவு அர்த்தம் சொல்றாங்களே...........! இருந்தாலும் படுகை உறவுகளுக்கெல்லாம் என் மேல ரொம்ப பாசம் தான் அக்கறையா அறிவுரை ஆறுதல் சொல்றாங்கப்பா. நீங்க சொல்லிட்டிங்க தானே இனி மாத்திட தான் வேணும்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by udayakumar » Sat Mar 10, 2012 7:09 pm

Aruntha wrote:அட கடவுளே நான் கன்னத்தில வச்சிருக்கிற கைக்கு இவ்வளவு அர்த்தம் சொல்றாங்களே...........! இருந்தாலும் படுகை உறவுகளுக்கெல்லாம் என் மேல ரொம்ப பாசம் தான் அக்கறையா அறிவுரை ஆறுதல் சொல்றாங்கப்பா. நீங்க சொல்லிட்டிங்க தானே இனி மாத்திட தான் வேணும்.
என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து உங்கள் படத்தை மாற்றியமைக்கு ரொம்ப நன்றி உங்கள் படம் இப்பபோது நன்றாக உள்ளது..ஆனால் யாரோ தலை சுளுக்கிவிடும் தைலம் கொண்டு வாருங்கள் என்று சொன்ன மாதிரி எங்கோ பார்த்த ஞாபகம் இருக்குதே!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by Aruntha » Sat Mar 10, 2012 7:29 pm

இருக்கும் இருக்கும் ஞாபகம் இருக்கும் நான் குத்துற குத்தில ருக்குமணிக்கு ராம்குமார் தைலம் போட வேண்டி வரும்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by udayakumar » Sat Mar 10, 2012 11:43 pm

Aruntha wrote:இருக்கும் இருக்கும் ஞாபகம் இருக்கும் நான் குத்துற குத்தில ருக்குமணிக்கு ராம்குமார் தைலம் போட வேண்டி வரும்.
படுகைக்கு வருவதற்கு முன்பே கராத்தே ,குங்பூ, மல்யுத்தம் எல்லாம் கற்றுக் கொண்டு வாருங்கள்.. ஏனென்றால் அருந்தாவுடன் மல்லுக்கட்ட வேண்டுமல்லவா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by Aruntha » Sat Mar 10, 2012 11:47 pm

முதல் நீங்க சொல்லுங்க உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? ஏன் கேக்கிறன் என்று புரியலயா? அண்ணா, முதல் குத்து வாங்க போறது நீங்க தான்
Post Reply

Return to “கவிதை ஓடை”