காதலின் அர்த்தம்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

காதலின் அர்த்தம்

Post by thamilselvi » Mon Jul 02, 2012 3:25 pm

காதல் என்ற வார்த்தையில்
காமத்தை ஒளித்து
காவிய காதல் என்று
கற்புரம் அடித்து
இன்றோ நாளையோ
நாளை மறுதினமோ
மணப்போம் என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழி பாவைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேனும்
பாவிச் சிறுக்கி இவளுக்கு
பாடம் புரிந்திருக்க வேணும்
புதிராய் நின்றுவிட்ட
வாழ்க்கை அரிச்சுவடிகளை
தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை
காதலின் அர்த்தம் மட்டும்
உன் அகராதியிலாவது கண்டு சொல்
காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா
என்று...
Sivacbe20
Posts: 9
Joined: Fri Jul 06, 2012 10:26 am
Cash on hand: Locked

Re: காதலின் அர்த்தம்

Post by Sivacbe20 » Fri Jul 06, 2012 12:24 pm

நிறைய பேருக்கு காதலுக்கும் கமதுக்கும் வித்யாசமே தெரியலைங்க! காதலின் உச்சகட்ட வெளிப்பாடு காமமா இருக்கனும். ஆனால் நெருக்கமா இல்லைன்னா லவ் பண்ணி என்ன் பிரயோஜனம்னு நினைக்கிரவங்க எத்னையோ பேர் இருக்காங்க
Post Reply

Return to “கவிதை ஓடை”