நான் இயந்திரமல்ல

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

நான் இயந்திரமல்ல

Post by thamilselvi » Tue Jun 26, 2012 3:32 pm

விடிந்ததை உணர்ந்தும்
விழிக்காத இமைகளின்
உறக்கத்தை துரத்திவிட்டு
குளித்தும் குளிக்காமல்
உடலுக்கு நீர் வார்த்து
ருசித்தும் ருசிக்காமல்
இரண்டுவாய் உண்டுவிட்டு
வியர்க்க விறுவிறுக்க
பேருந்திற்காய் நடைபயின்று
மட்டமான வாசனை பூச்சின்
சட்டமானா மணமும்
தொடர் இலவசமாய்
மல்லினை முல்லை ரோஜாவுடன்
பஜ்ஜி வடையும் சுவாசித்து
கிழவனோ கிழவியோ
கைம்பெண்னோ கர்ப்பினியோ பாராமல்
நெரிசலில் பயணி்த்து
எப்போதாவது...
அத்திபூத்தார்போல் பயணிக்கும்
சுமாரான பிஃகருக்கு
சூப்பராய் பார்வை தூதுவிட்டு,
பேருந்து நின்று
நான் இறங்கிய நிறுத்தத்தில்
மானசீகமாய் மனதிற்கு
காதல் தோல்வி என்று அறிவித்து
நடைபாதையில் காணும்
மாற்றுதிறனாளிக்காய்
ப்ச் சொல்லி வருத்தப்பட்டு
சட்டை பைக்குள் துழாவி எடுத்த
ஒரு ரூபாய் நாணயத்தை
நா நயத்தோடு
அவன் கை தீண்டாமல்
பிச்சையிட்டு...
அரசியல் பேசாமல்
பேசும் வாய் பார்த்து
அங்கலாய்த்து...
இயந்திரகதியில் பணியாற்றி
வெகுநேரம் கண்விழித்து
பணி முடித்தும் கூட
வக்கணையாய் ஏசும்
மேலதிகாரியின் பாராட்டிற்காய்
ஏங்கும் மனதை
அதட்டி கட்டி போட்டு
கொண்டாட்டமே இல்லாமல்
திண்டாட்டமாய் படுக்கைக்குப் போகும்
வாழ்ந்த பலன் புஜ்ஜியமாய் நிற்கும்
நான் இயந்திரமல்ல
மனிதன் தான்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: நான் இயந்திரமல்ல

Post by umajana1950 » Tue Jun 26, 2012 4:12 pm

எப்போதாவது...
அத்திபூத்தார்போல் பயணிக்கும்
சுமாரான பிஃகருக்கு
சூப்பராய் பார்வை தூதுவிட்டு,
பேருந்து நின்று
நான் இறங்கிய நிறுத்தத்தில்
மானசீகமாய் மனதிற்கு
காதல் தோல்வி என்று அறிவித்து
விடியல் முதல் இரவு வரை நடக்கின்ற, ஒரு பொழுதின் அங்கலாய்ப்பு உங்கள் அடிமனதில் இருந்து தோன்றி ஆலாபனை செய்வது உங்கள் கவிதையில் நன்றாகவே தெரிகிறது. உங்கள் வார்த்தை ஜாலங்களுக்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
(கொஞ்சம் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாமே!!)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் இயந்திரமல்ல

Post by ஆதித்தன் » Tue Jun 26, 2012 7:01 pm

அழகாகவும் ஆர்வமாகவும் இருந்தது படிப்பதற்கு .. பாராட்டுகள்.
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: நான் இயந்திரமல்ல

Post by thamilselvi » Tue Jun 26, 2012 8:21 pm

உண்மைதான் எழுத்து பிழையை தவிர்த்திருக்கலாம் தான்........கவிதையில் தோன்றிய ஆண்பாலை பெண்பாலாக மாற்றிவிட்டால் என் நிலை என்னவென்பது நன்றாக புரியும்......இனிவரும் படைப்புகளில் எழுத்து பிழையின்றி பதிய முயற்சிக்கிறேன்
Sivacbe20
Posts: 9
Joined: Fri Jul 06, 2012 10:26 am
Cash on hand: Locked

Re: நான் இயந்திரமல்ல

Post by Sivacbe20 » Sat Jul 07, 2012 3:30 pm

ஆஹா கவிதை மிக நன்றாக இருக்கிறது. ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் அன்றாடம் அறங்கேறும் நாடகமே இது.
Sivacbe20
Posts: 9
Joined: Fri Jul 06, 2012 10:26 am
Cash on hand: Locked

Re: நான் இயந்திரமல்ல

Post by Sivacbe20 » Sat Jul 07, 2012 3:31 pm

ஆஹா கவிதை மிக நன்றாக இருக்கிறது. ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் அன்றாடம் அறங்கேறும் நாடகமே இது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: நான் இயந்திரமல்ல

Post by muthulakshmi123 » Sat Jul 07, 2012 9:44 pm

thamilselvi wrote:உண்மைதான் எழுத்து பிழையை தவிர்த்திருக்கலாம் தான்........கவிதையில் தோன்றிய ஆண்பாலை பெண்பாலாக மாற்றிவிட்டால் என் நிலை என்னவென்பது நன்றாக புரியும்......இனிவரும் படைப்புகளில் எழுத்து பிழையின்றி பதிய முயற்சிக்கிறேன்

அருமையான கவிதை...எழுத்துப் பிழையை சரி செய்ய முயற்ச்சிக்கவும்....உங்கள் நிலையை கவிதையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Post Reply

Return to “கவிதை ஓடை”