Page 1 of 1

கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Posted: Wed Mar 07, 2012 10:54 pm
by umajana1950
கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்
எரியும் நெருப்பாகி
கரிய புகையாகி
கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்

சாம்பல் கூட இல்லை எனைச்
சொந்தம் கொண்டாடிட
கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்
இது தானோ வாழ்க்கை;
இதுவே தான் வாழ்க்கை.

Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Posted: Wed Mar 07, 2012 11:11 pm
by Aruntha
ஆஹா நீங்களும் வந்ததும் காணாம போநது பத்தியா சொல்றீங்க. என்ன தான் பண்ணுறது?

Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Posted: Thu Mar 08, 2012 2:00 am
by ஆதித்தன்
மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்
கடவுள் ஆகிவிட்டால் துகளிலும் வாழலாம்.
அதுதானே வாழும் வாழ்க்கை!

Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Posted: Thu Mar 08, 2012 10:58 pm
by muthulakshmi123
வாழ்க்கை என்பது இது தான் எனவே, பாரதியார் கூறிய படி,வாழ முயலுவோம்...நண்பர்களே

சென்றதினி மீளாது மூடரே நீர்

சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்

இன்று புதியதாய் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

நின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்