Page 1 of 1

எந்தன் சிந்தையினுள் இருக்கும் அப்துல் கலாம்

Posted: Sat Jul 30, 2016 3:28 pm
by jayapriya
அன்பான படுகை நண்பா்களுக்கு வணக்கம்

சிறிய இடைவேளைக்குபிறகு மீண்டும் இந்த கவிதை ஓடையில் உங்களை தொடா்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு தினங்களுக்கு முன்பே இந்தக் கவிதையை உங்களின் பார்வைக்கு பதிவிட நினைத்தேன். என்னுடைய கணிணியில் இணையதளம் இயங்காததால் பதிவிடமுடியவில்லை, அதனால் இப்போது பதிவிடுகிறேன் உங்களுக்கு பிடிக்கிறதா பாருங்கள்,

தமிழுக்கு உயிர்கொடுக்கும் முதல் எழுத்து 'அ'
அந்த முதன்மை எழுத்தில் பெயர் பெற்ற அப்துல் கலாமே!

என் தமிழன்னை பெற்ற தமிழ்மகனே!
தமிழ் மண்ணை தரணியில் தலை நிமிரச் செய்ய,
அன்பு எனும் ஆயுதத்தில் ஆற்றல் எனும் நாணேற்றி
அணு ஆயுத சோதனைதனில் பல வெற்றி கண்ட திருமகனே!

சுயநலம் இல்லா பிறர் நலம் கண்ட காந்தியை உன்னில் கண்டேன்!
மழலையுடன் மகிழ்ந்தாடிய ஜவஹரையும் உனக்குள் கண்டேன்!
சுதந்திரம் தன்னை சுவாசமாய் கொண்டு, ஏட்டினில் எழுச்சி கவிதை
படைத்திட்ட பாரதியின் எழுத்தாற்றலும் உன்னிடம் கண்டேன்!
கருவறை முதல் கல்லறை வரை செழுமை வாழ்வு வாழா
எளிமை வாழ்வு வாழ்ந்திட்ட காமஜரையும் உனக்குள் கண்டேன்!

தரணியில் தலைவர்கள் பலர் இங்கு வாழ்ந்ததுண்டு,
அவா்தம் பெயரும், புகழும் வரலாற்றில் என்றும் நிலைத்ததுண்டு,
நிலைத்திட்ட தலைவர் பலரின் புகழை நானும் ஏட்டினில் படித்ததுண்டு
ஏட்டில் படித்த தலைவன் போலே ஆவேன் என்றே கூறி யாரும்
சூழுரைக்க என்செவி தன்னில் இதுவரை நானும் கேட்டதில்லை

உன்புகழ் பாாினில் நிலைத்தபின்னே, மழலைச்செல்வம் கூறக்கேட்டேன்,
மாணவா்படை கூறக் கேட்டேன், இளைஞா் பட்டாளமும் கூறக்கேட்டேன்,
முதியவரும் கூட கூறிட கேட்டேன், உன்போல வரவே ஆசைகொள்ளும்
ஆழ்மனதின் எண்ணம்தனை அவா்தம் வாயார கூறிட நானும் கேட்டேன்.

சாமானியனாய் நீயும் பிறந்து, சோதனைகள் பலவற்றை கடந்து
சாதனைகள் பல புாிந்திட்டாய், சாித்திரத்தில் நீங்கா இடமும் பிடித்தாய்
பாரினில் பலருக்கு முன் உதாரணமென நீயும் வாழ்ந்தாய்

எங்கள் இளைய சமுதாயம் தன்னை கனவு காண நீயும் சொன்னாய்
உந்தன் நினைவுகள் எங்கள் கனவுகளில் வரவேண்டி, உன் உயிா் துறந்து
எங்கள் கனவுக்குள் வந்த எங்கள் இனிய தலைவனே !
நின் பாதம் தனை பணிகின்றேன்