மனதில் தெரித்தவை

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மனதில் தெரித்தவை

Post by ஆதித்தன் » Wed Jun 08, 2016 10:18 am

[youtube]https://www.youtube.com/watch?v=KcZTY1K1K0E[/youtube]

வாண்டுகளுக்கு மத்தியில்
விவாதம் செய்து
விட்டில் பூச்சியாய்
விளையாடிப் போகும்
வயதுமிகு பெற்றவர்களின்
வினை புரியவில்லை

============================

அறிந்தும் ஆசைக்கு அசைபோடும் மனமே
அசையாது இசைந்திடவே புன்னகை பூக்கும் புகழவே!
புரிந்து பிறந்த இடம் புகுவாய்
பூவுலகம் யாவும் புன்னகை பூப்பாய்

====================

பாத்திரம் கோடி படைத்தாலும்
பாவம் படைப்பவனுக்கு பாடம்
பாத்திரம் தாங்கா சிரிப்பு தானடி

=============================

புரிந்தும் புரியாது
புதிராவது புன்னகைக்கு
புனல் பூக்க பூவே புரிந்து
புரியாமல் பூமராங்காய்
புடைக்குள் புகு புகு

=======================

பெற்ற வரத்தில்
பெரும் வரம்
தூங்குவதும்
தூங்கி எழுகையில்
காணா கண்ணீரும்

========================

சிந்தனையில்லா
சிரிப்பினைக் காண
ஆயிரம் என்ன
ஆயிரம் ஆயிரம்
பிறப்புகள் காண்பேன்
துன்பம் ஏதாயினும்

========================

நித்தமும் நிலவிற்காய்
நிலத்தில் காத்திருக்கும்
ஜீவன்களுக்கு மத்தியில்
ஜீவனுள் முதல்வனாம்
தாய்க்கும் தலைவனாம்
தன்னல மற்றவனாம்
பகலவனை தேடுவார்
பாதி தேரலையே!

=====================

உற்றது ஒன்றே மெய்யாம்
அற்றது யாவும் பொய்யாம்
மெளனம் புகழ்ந்து
மெய்யாய் தெளிக்கும்
பூரணம் போற்றும்
பொய்ப்புலவன் அறிந்தது

================================
Post Reply

Return to “கவிதை ஓடை”