Page 1 of 1

தேடும் கண்கள்!

Posted: Sat May 14, 2016 10:09 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=9b_ckmPC2Bw[/youtube]

நிஜங்கள் தாண்டி நினைவுகள் கோடி
நிலவில் அமர்ந்து நித்தம் பாடுது

கற்பனை வண்ணம் கனவுகள் வடித்து
காலம் கடந்து கனியைத் தாண்டுது

கதிரவன் கதிர்கள் கடலை உண்ணும்
கம்பன் மனம் காதலை திண்ணும்

நெருப்பின் தொலைவே நீரின் அளவு
நிலவின் பார்வை நிலந்தனை கொள்ளும்

நடுவில் அர்த்தம் நர்த்தனம் ஆடும்
நாளும் கோளும் நடனம் கொள்ளும்

பிரித்தவர் பிரித்தார் பிரிவினை இரண்டு
புரிந்தவர் புரிவார் பூவுலகம் ஒன்று

பற்பல வடிவம் பலபல சுவைகள்
பாவை நீயே பலதும் நீயே

நீயும் நானே நானும் நீயே
நிற்கா காலம் நிலைகொளும் தானே

இல்லா ஆசை இருப்பினில் உதிக்கிறது
இருப்பிடம் தேடி இயக்கம் கொள்ளுது

கண்டும் காணா காண கண்டும்
கரையாது கரையுது கல்மனம் உடையுது

உளியும் இல்லை உருட்டலு மில்லை
உருண்டது கண்கள் உருபட்டது உண்மை

தாகம் தொடங்கியது தேடல் நடக்குது
தானும் அறியேன் தன்னையும் அறியேன்

உருகி உருகி உள்ளம் உகந்தால்
பெரிது பெரிதோ சுற்றம் பெரிதோ

தீவில் மாட்டின் தீர்வு மாட்டாதா
தவிக்குது மனம் தள்ளாடுது தினம்

நிகழ்வுள் விழுந்து நாளை மறந்து
நிகர் தேடித்தேடி நீளுது நிஜம்

உச்சியில் பகலவன் உள்ளத்தில் அம்புலி
உருள உருள்வது உந்தன் கண்கள்

மாறேன் மறவேன் மறந்தும் மாட்டேன்
மனமானே மணமானே மாட்டும் மல்லியே

தொடாது தொடும் தென்றலே
தொட்டும் தொடாத தேகமே

தோன்றிடு காண தோன்றிடு
தொலைந்த வாழ்வை மீட்டிடு

Re: தேடும் கண்கள்!

Posted: Sat May 14, 2016 10:27 am
by jayapriya
கவிதை மிகவும் அழகாக உள்ளது.

Re: தேடும் கண்கள்!

Posted: Sat May 14, 2016 10:48 am
by வெங்கட்
சூப்பர்.

Re: தேடும் கண்கள்!

Posted: Sat May 14, 2016 2:58 pm
by nvrajendran
kavithai super sir!

Re: தேடும் கண்கள்!

Posted: Sat May 14, 2016 5:34 pm
by ஆதித்தன்
மூவர்க்கும் நன்றி ....