சித்திரை பெண்ணே நீயும் வா! வா !

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

சித்திரை பெண்ணே நீயும் வா! வா !

Post by jayapriya » Wed Apr 13, 2016 11:06 am

படுகை நண்பா்களுக்கு வணக்கம்!

அண்மையில் உடுமலைப்பேட்டையில் நடந்த சாதிக் கொலை மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. வரும் புதிய வருடத்திலாவது இவைகள் குறையவேண்டும் என கூறி, தமிழ்தாயின் தலைமகளாம் சித்திரை மகளை வரவேற்போம்.

சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
சிறப்பை எங்களுக்கு அள்ளித் தந்திட வா! வா !

சண்டைகள் இங்கே ஓய்ந்திட, ஓய்ந்திட
சங்கடங்கள் இங்கே தீா்ந்திட, தீா்ந்திட,
சாதி எனும் கொடிய மிருகம் துரத்த,

சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
சிலம்பம் தனை கையில் ஏந்தியே வா! வா!

சீறிப்பாய்ந்திடு வெகு சீற்றத்துடன்,
சுழல் போல் சுற்றி அடித்து, அடித்து,
சூறையாடிடும் சூறைகாற்றுடனே, அவர்
செவியில் அறைந்து நீயும் சொல்லு, சகதி நிறைந்த
சோ்(று) அது என்று சத்தமிட்டுகொஞ்சம் நீயும் சொல்லு,

சைதன்யத்தில் என்றும் அமைதி நிலைக்க,
சொா்க்க பூமியாய் மாற்றிட வாராய்
சோலை வனமாய் ஆக்கிட வாராய்
செளபாக்யம் தனை தரணிக்கு கொடுக்க


சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
சிறப்பை எங்களுக்கு அள்ளித் தந்திட வா! வா !
வெங்கட்
Cash on hand: Locked

Re: சித்திரை பெண்ணே நீயும் வா! வா !

Post by வெங்கட் » Wed Apr 13, 2016 11:42 am

:clab: :clab: :clab: :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சித்திரை பெண்ணே நீயும் வா! வா !

Post by ஆதித்தன் » Thu Apr 14, 2016 7:22 am

Image


மன்மதனுக்கு விடைகொடுத்து
துர்முகியை வரவேற்கும்
தங்கள் வேண்டுதல் சூப்பர்
Post Reply

Return to “கவிதை ஓடை”