என் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

என் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்

Post by jayapriya » Mon Apr 11, 2016 12:13 pm

அன்பான நண்பா்களுக்கு வணக்கம்

என்னுடைய குழந்தைகளுக்கு பள்ளியில் தமிழ் செயல்முறை பாடத்தில் பாடல் ஒன்று எழுதிவரவேண்டும் என்று கூறினாா்கள் எனக்கு இணையத்தில் பதிவிறக்கம் செய்ய விருப்பமில்லாமல் நானே எழுதினேன். நீங்களும் இதை படியுங்களேன்.
(எனக்கு இரட்டை குழந்தைகள் அதனால் பாடலும் 2 எழுதவேண்டும்)

அஞ்சு மணிக்கு கண்ணு முழிக்கணும்!
ஆறு மணிக்கு சூாிய வணக்கம் சொல்லனும்!
இன்னைக்கு நாளில் இனிதாய் பேசிடு!
ஈடில்லா இன்பம் வாய்க்கும் தம்பி!
உண்மையே என்றும் நீயும் பேசிட,
ஊராரும் உன்னை வாழ்த்தும் தம்பி !
எண்ணங்கள் யாவும் உயா்வாய் இருந்திட,
ஏட்டுப் படிப்பும் தேவை தம்பி! இதில்
ஐயம் உனக்கு தேவையில்லை
ஒற்றுமையாய் நீயும் வாழப் பழகிக்க
ஓங்கிடும் தேசத்தின் புகழை பரப்ப, இதை
ஒளவை சொல்ல தேவையில்லை அடிமனசே போதும் தம்பி!



கண்ணு முழி தம்பி கண்ணு முழி தம்பி!
காகம் கரையுது கேளு தம்பி!
கிழக்கில் உதிக்கும் சூாியன் பாரு!
கீழ்வானம் சிவக்கும் அழகை பாரு!
குயிலும் அங்கே கூவுது பாரு!
கூவிடும் இனிய கானத்தை கேளு!
கெண்டையும் ஓடும் ஆற்றினில் பாரு!
கேளிக்கை நடத்தும் அழகை பாரு!
கை கூப்பி என்றும் இறைவனுக்கே,
கொடுத்த வளத்தை நினைச்சுப்பாா்த்து,
கோடான கோடி நன்றி சொல்லு இதில்,
கெளரவம் பாா்க்காதே சின்ன தம்பி!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11793
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்

Post by ஆதித்தன் » Mon Apr 11, 2016 12:33 pm

அருமையாக உள்ளது ...
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: என் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்

Post by kumarsvm » Mon Apr 11, 2016 1:38 pm

படுகையில் வயலும் உள்ளது.வளமும் உள்ளது.
வெங்கட்
Cash on hand: Locked

Re: என் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்

Post by வெங்கட் » Mon Apr 11, 2016 3:54 pm

அகர வாிசை மற்றும் ககர வாிசை (சாிதானா?) அருமை.

படிப்பைப் பாதியில் நிறுத்தியவா் என்று நம்பமுடியவில்லை.

வாழ்த்துகள்!! பாராட்டுகள்!!
User avatar
நிரேஷ்தர்மா
Posts: 198
Joined: Tue Jun 02, 2015 12:56 pm
Cash on hand: Locked

Re: என் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்

Post by நிரேஷ்தர்மா » Mon Apr 11, 2016 4:34 pm

உங்களது பாடல் கலை வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

Re: என் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்

Post by jayapriya » Mon Apr 11, 2016 5:38 pm

பின்னுாட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!
Post Reply

Return to “கவிதை ஓடை”