மீண்டும் முகர்வேன் உன்னை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

மீண்டும் முகர்வேன் உன்னை!!!

Post by மன்சூர்அலி » Mon Sep 08, 2014 1:21 pm

:ro: மீண்டும் முகர்வேன் உன்னை!!!
:ro:
பூவுக்குள் ஒரு வண்டு
புகுந்து உள்ளே சென்று
பூவில் உள்ள தேனை
புன்னகைத்து குடித்தது...

பூவுக்கும் ஒரு சுகம் கிடைத்தது
வண்டுக்கும் ஒரு சுவை கிடைத்தது
அப்போது பூ.... கேட்டது...
என் இரத்தத்தை குடித்து..

நீ வாழ ஆசைபடுகிறாயா?? என்று..
அப்படியானால் உதிர்ந்து விடுகிறேன்...இன்று
நீ வாழ்ந்து கொள் என்று... பூ உதிர தொடங்கியது
வண்டு சொன்னது..நீ உதிர்ந்தாலும்.

என் கால்களில் ஒட்டி உள்ள
மகரந்த துளை வைத்து
உன்னை இனபெருக்கம் செய்வேன்.
நீ மீண்டும் மலர்வாய்..அடுத்த

தலைமறை காண்பதற்கு அப்போதும்
உன்னிடம் வருவேன் மீண்டும்
உன்னை முகர்வதற்க்கு... அப்போதும்
நீ மலர்ந்து மணம் பெறுவாய்..

நாம் வாழ்வதற்கு.....
Post Reply

Return to “கவிதை ஓடை”