Page 1 of 1

இந்த தொழிலுக்கு இது தெரியனும்!!!

Posted: Thu Nov 21, 2013 4:04 pm
by மன்சூர்அலி
இந்த தொழிலுக்கு இது தெரியனும்!!!

கை எடுத்து கும்பிட தெரியனும்
காலில் விழுந்து வணங்க தெரியனும்
வெள்ளை சட்டை போட தெரியனும்
வெல்ல வேட்டி கட்ட தெரியனும்

கத்தி,குத்தும் கலை தெரியனும்
கல் எடுத்து எரிய தெரியனும்
கடைகளை உடைக்க தெரியனும்
கலவரம் செய்ய தெரியனும்

முற்றுகை போராட்டம் நடத்த தெரியனும்
உண்ணாவிரதம் இருக்க தெரியனும்
உண்மைகள் பல மறைக்க தெரியனும்
உசுரோடு கொலை செய்ய தெரியனும்

காவல் நிலையத்தில் கலாட்ட செய்யணும்
கண்ணோடு கண் பேசி கலவரத்தை தூண்டி விடனும்
அடுத்தவர்கள் பார்வைக்கு முறுக்கு மீசை வைக்க தெரியனும்
குடியும் கூத்தியும்.அவ்வபோது வைத்து கொள்ளனும்
imagespoli.jpg