காசேதான் இந்த உலகமடா..

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காசேதான் இந்த உலகமடா..

Post by மன்சூர்அலி » Mon Nov 18, 2013 12:15 pm

காசேதான் இந்த உலகமடா..

கை நிறைய காசு வேண்டும்
காரியம் சாதிக்க காசு வேண்டும்
காதலிக்கவும் காசு வேண்டும்
கல்யாணம் செய்யவும் காசு வேண்டும்.

கடவுளுக்கு காணிகைக்கும் காசு வேண்டும்
கடவுள் தரிஷனம் பெறவும் காசு வேண்டும்
கட்டியவள் சுகம் பெறவும் காசு வேண்டும்
கட்டில் அறைக்கும் காசு வேண்டும்.

கர்பம் ஆவதற்கும் காசு வேண்டும்
காப்பகத்திற்கும் காசு வேண்டும்
காவலாளிக்கும் காசு வேண்டும்
கட்டையில் போகும் வரை காசு வேண்டும்...

காரியம் செய்யவும் காசு வேண்டும்
காடு செல்லவும் காசு வேண்டும்
கடைசி சடங்கிற்க்கும் காசு வேண்டும்
காசேதான் இந்த உலகமடா...
Post Reply

Return to “கவிதை ஓடை”