கடல் கடந்தது என் கவலை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

கடல் கடந்தது என் கவலை!!!

Post by மன்சூர்அலி » Sun Nov 17, 2013 3:15 pm

கடல் கடந்தது என் கவலை!!!

கட்டிட கலைகள் படித்து
கடன் வாங்கி வந்தோம் இங்கே
கட்டிட பணிகள் செய்ய
கட்டிய மனைவியை விட்டு

கைபிள்ளை இரண்டை விட்டு
காப்பாற்றிய தாயை விட்டு
காட்டையும்,வீட்டையும் விட்டு
ஏன் என் நாட்டையும் விட்டு

கடல் கடந்து குடும்பத்தை
காப்பாற்ற கஷ்ட பட்டாவது
காசுகள் சம்பாரிப்போம் என்று
கடன் அனைத்தும் தீருவதற்கு முன்பு

காட்டு அரபி சொன்னான்
கட்டிட வேலையை நிறுத்தும் படி
காரணம் என்னவென்று கேட்டேன் அவனிடம்
கலாஷ் ரோஹ் இந்தி என்றான்.

கடினமான சட்ட திட்டம்
கவர் மென்ட் போட்டுருக்கு
காலதாமத படுத்தாமல போய் வா என்று
கணக்கு பார்த்து காசு கொடுத்தான்

கவலையோடு கண்ணிற் வடித்து
கையில் என் பையை பிடித்து
கடன் இன்னும் தீரவில்லையே என்ற
கவலையோடு கரை சேர்ந்தேன் என் வீட்டுக்கு..

(கலாஷ் ரோஹ் இந்தி என்றான் அரபியில்.அதன் அர்த்தம் முடிந்தது இந்தியாக்கு போ என்று)
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: கடல் கடந்தது என் கவலை!!!

Post by cm nair » Sun Nov 17, 2013 10:46 pm

கொடுமை....என்றாலும் உங்கள் படிப்பிற்கும் தொழில் அனுபவத்திற்கும் கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும்...ஒரு விதத்தில் பெற்றோர்,மனைவி,மக்கள் அருகில் இருப்பதும் ஒரு வித ஆறுதல் தானே....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கடல் கடந்தது என் கவலை!!!

Post by ஆதித்தன் » Sun Nov 17, 2013 11:16 pm

புதுச் சட்டம் மன்சூர் சாரை ரொம்பவே வலிக்க வைத்துவிட்டது...

தீர்வில்லாத வேதனைகள் எதுவுமில்லை.
Post Reply

Return to “கவிதை ஓடை”