வங்கி கணக்கில் பணம் இருப்பது ஆபத்து?

Discuss job opportunities here such as "Work at home", small business opportunities, etc..
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வங்கி கணக்கில் பணம் இருப்பது ஆபத்து?

Post by ஆதித்தன் » Sat Mar 04, 2023 11:09 pm

வங்கி கணக்கில் பணம் இருக்கிறதா? அப்படியானல் மிகவும் கவனமாக கையாளுங்கள்.. உங்கள் பணம் உங்களுக்கே இல்லாமல் போய்விடும் ஆபத்தான கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த சில வருடங்களில் பலவிதமான முறையில் மக்களை ஏமாற்றி பணத்தினை ஒருசில நிறுவனங்கள் பெரிய அளவில் சேகரித்துவிட்டன. பணத்தொகை பல ஆயிரம் கோடிகளை தாண்டுகிறது. நாளிதழ்களிலும் இத்தகையை நிதி ஏமாற்று பற்றிய செய்திகளைப் படித்திருப்பீர்கள். படிக்காத செய்தி, இவ்வாறு ஒர்சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி பணத்தினை டாலர்களாக மாற்றி தப்பித்துவிட்டன.

பணம் வங்கியில் இருக்கும் பேலன்சினை கண்ணம் வைத்தே, அவர்களை டார்க்கெட் செய்து டெலி காலர் பெண்களை வைத்துப் பேசி, இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும்.. மாதம் மாதம் இவ்வளவு பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளைக் கூறி .. பேராசையைத் தூண்டிவிட்டு, தூக்கத்தினை கெடுக்கும் விதமாக ஒர் நாளைக்கு பலமுறை ஆசை வார்த்தைகளைக் கூறி, மாற்று கருத்தினை சிந்திக்க விடாமல், மற்றவர்களிடம் ஆலோசனைக் கேட்க நேரம் இல்லாத வகையில், ஆள் மாற்றி மாற்றி பேசி பேசி அவர்கள் வட்டத்திற்குள்ளேயே வைத்து முடித்திருக்கிறார்கள், இருக்கிற பேலன்ஸ் எல்லாத்தையும் ஆட்டையப் போட்டிருக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் திருட்டு என்பது ரொம்ப ஈசியாகிவிட்டதாம். பிட்பாக்கெட் கேசெல்லாம் இல்லையாம், ஒரே பேங் பேலன்ஸ் இலட்சத்தில் போனதுதான் வரிசையாக கேஸ் ஆக வந்து கொண்டிருக்கிறதாம்.

அதெப்படி பேங்க் திருட்டு என்பது தெரியாமல் நடக்கும்.. எங்கு உள்ளுக்குள் ஆள் இருக்கும்.. அதிலும் பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் டார்கெட் வைத்து இன்ஸ்ரன்ஸ் போடுங்க, சேர் மார்க்கெட்ல இன்வஸ்ட் பண்ணுங்க,, பல இலட்சம் சம்பாதிக்கலாம்.. கிரிடிட் கார்டு வாங்கிக்கோங்க.. கடன் வாங்கிக்கோங்க என்பதெல்லாம் வங்கியிலிருந்து டேட்டா பகிர்வுதான் காரணம்.

கஷ்டப்பட்டு சம்பாதித்து, நாம் ஒர் செலவுக்கு சேகரித்துக் கொண்டிருப்போம்.. அட ஒர் கல்யாண நிகழ்ச்சிக்கே சேர்த்துக் கொண்டிருக்கிறோம் எங்கு வைத்துக் கொள்ளது, அல்லது குழந்தை கல்லூரி செலவுக்கு சேர்க்கிறோம், வீடு வாங்க சேர்க்கிறோம்னு வைச்சிக்கோங்க.. அந்த நிகழ்வு வர ஐந்தாறு வருடம் இருக்கலாம், ஆனால் அதுக்கு 20 இலட்சம் வேண்டுமென்று, கொஞ்சம் கொஞ்சமா 10 இலட்சம் சேர்த்திருப்போம்... இன்னும் பத்து இலட்சம் சேர்த்திடணும்னு ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு நூறு ஆயிரம்னு சிறுகச் சிறுகச் சேர்த்தால்... பத்து இலட்சத்தினையே ஆசையைக் காட்டி ஆட்டையப் போட்டுவிடுகிறார்கள்.

வங்கி என்பது ஆபத்தானது என்பதனை தெரிந்து கொண்டாலும், எந்தளவுக்கு ஆபத்தானதாக இருக்கிறது என்பது துணிவு கேட்கவில்லை, ஆனால் பட்ட அடியின் வலி துடிக்கிறது. வங்கியில் பேலன்ஸ் என்பதனை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.

மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு சர்வீஸ் பீஸ் வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளட்டும். ஆனால், வங்கி நம்பி 1 இலட்சம் கூட வைக்க முடியாது என்பது நன்றாக தெரிகிறது. நான் இப்பொழுது வைப்பதில்லை.

வங்கி பேலன்ஸ் என்பது ஆபத்தானது. கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.
Post Reply

Return to “Home Business & Jobs Talk”