Page 1 of 1

Unocoin Hijack - அக்கவுண்ட் தகவலுக்குள் புகுந்து மெயில் அனுப்பிய ஹேக்கர்

Posted: Sun Aug 13, 2017 2:46 pm
by ஆதித்தன்
Dear Unocoin Customers,

A message was sent out to our customers about an ICO (initial coin offering) that Unocoin is undergoing on 12th August 2017. Please note that this was NOT sent out by our team and is an attempt to steal customer funds. Please ignore that email.

Sincerely,
Team Unocoin
நேற்று மாலை யுனோகாயின் தளத்திலிருந்து இன்வஸ்ட்மெண்ட் புராஜக்ட் ஸ்டார்ட் செய்திருப்பதாக இமெயில் வந்தது... இன்வஸ்ட்மண்ட் பகுதி லிங் என்று ஒர் லிங்கும் கொடுத்திருந்தனர்... மெயில் வந்தது யுனோகாயின் சர்வர் பகுதியிலிருந்துதான் வந்திருந்தது.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில், யுனோகாயினிலிருந்து மற்றொரு மெயில் உள்ளது போல் வந்தது... சற்று முன் வந்த மெயிலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை... அப்படியான எந்தவொரு இண்ஸ்வஸ்ட்மெண்ட் புராஜக்ட்டும் நாங்கள் நடத்தவில்லை.. அதனை நம்பவேண்டாம்.. என்று கோரிக்கை விடுத்ததோடு, தன் தளத்தின் அன்னவுன்ஸ்ட்மெண்டாகவும் போட்டுவிட்டனர்.

பொருளாதரச் சரிவு என்பது மிக விரைவில் நடக்க இருப்பதாக எக்னாமிக்கல் ஆய்வாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த வேளையில் பிட்காயின் பிரைஸ் தாறுமாறாக விலை உயர்வினை அடைவதும்... அவ்வப்பொழுது பிட்காயின் ஹெக்கிங் நடப்பதாலும்.... பிட்காயின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

யுனோகாயின் தளத்தில் பிட்காயின் பேலன்ஸ் வைத்திருந்தால் பாதுகாப்பு கருதி, வேறு வாலட்டுக்கு நகட்டிக் கொள்வது என கருதுகிறேன்..

ஏனெனில் அவர்களது சர்வரையே ஆட்டையப்போட்டு மெயில் அனுப்பியிருக்கிறார்கள்... கடந்த மூன்று மாதத்திற்கு முன், டேட்டாபேஸ் திருட்டு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, பாஸ்வேர்டு மாற்றி அக்கவுண்டினை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுறித்தினர்... அதன் தொடர்ச்சிதான், டேட்டா பேஸ் உறுப்பினர்களுக்கு மெயில் அனுப்பியது... ஆகையால், யுனோகாயின் அக்கவுண்ட்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பது நிரூபணம்... பேலன்ஸ் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.