டிஜிட்டல் கரன்சிகள் விலை வீழ்ச்சி

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டிஜிட்டல் கரன்சிகள் விலை வீழ்ச்சி

Post by ஆதித்தன் » Mon Jul 17, 2017 4:25 am

2017 ஆம் காலாண்டுப் பகுதியில் மிகப் பெரிய விலை ஏற்றத்தினைக் கொடுத்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் மிதக்கவிட்ட டிஜிட்டல் கரன்சிகள் தற்பொழுது கண்ணீர் கடலில் தத்தளிக்கும் விதத்தில் பெரிய சரிவினைக் கண்டிரிக்கிறது. குறிப்பாக பிட்காயின் 3000$ விலைக்கும் மேல் உயர்வினைக் கண்டது, தற்பொழுது 1800 $ நிலையில் உள்ளது, எத்திரியம் கிளாசிக் 300$ விலையினைத் தொட்டது, தற்பொழுது 150$ விலையில் உள்ளது.

எத்திரியம் & பிட்காயின் ஆகிய இரண்டும் 50% விலை இறக்கத்தினை அடைந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எதிர் திசையான இறக்கத்தில் இலாபம் குவிக்கும் கெட்ச் பண்ட் மேனஜர்ஸ் பெரிய அளவில் இந்த விலை குறைவினால் இலாபம் குவித்திடுவார்கள்.

50% விலை இறக்கம் என்பது நல்லதொரு இறக்கம் என்று சொன்னாலும், அடிப்படை விலை 700$ என்ற நிலையிலிருந்து பிட்காயின் விலை ஏற்றப் பாதையினை தொடங்கியது என்பதால், இதன் இறக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதுதான், தற்போதைய மார்க்கெட் கேப் சுட்டிக்காட்டுகிறது.

எத்திரியம் பொறுத்த வரை, 25$ என்பதனை அடிப்படையாகக் கொண்டு மேல் எழும்ப ஆரம்பித்தது. ஆகையால் அதன் இறக்கத்தின் வேகமும் மேலும் அதிகரிக்கும் என்பதனை தற்போதைய கரடி மார்க்கெட் சுட்டிக் காட்டுகிறது.

மார்க்கெட் கெப் வால்யூம் அதிகமாக இருக்கும் பொழுது மிகக் கவனமாக இருந்து வேடிக்கைப் பார்க்க வேண்டும். பிட்காயின் மற்றும் எத்திரியம் ஆகிய இரண்டும் தற்பொழுது கரடி மார்க்கெட்டில் வால்யூம் அதிகமாக வர்த்தகம் ஆவது என்பது, அடுத்தக்கட்ட பாட்டத்திற்கு செல்ல இருக்கிறது என்பதனைக் காட்டுகிறது.

பாட்டம் சென்றப் பின்னர், மார்க்கெட் கெப் வால்யூம் குறைந்து, வாங்க ஆளில்லாமல்.. விற்க ஆளில்லாமல் என்ற நிலையில் ஒர் விலை ரேஞ்சில் நிலை கொள்ளும் பொழுது வாங்குவது என்பது நல்லது.

குறிப்பாக பிட்காயின் 2013 ஆம் ஆண்டு நல்ல விலை ஏற்றத்தினை அடைந்துவிட்டு பின்னர் தலைகீழாக சரிந்து 265$ என்ற விலையில் நிலை கொண்டு அப்படியே கிடந்தது போல, மீண்டும் அரவம் இல்லாமல் கிடக்கும் பொழுது வாங்கினால் நல்ல இலாபத்தினை ஒராண்டில் பெறலாம்.

பிட்காயினைப் பொறுத்த வரைக்கும் அடுத்தக்கட்ட பாட்டமாக எதிர்பார்ப்பது 600-800$ .

நிறைவான பொறுமையோடு தனக்கான விலைக்காக காத்திருந்தால் கண்டிப்பாக மார்க்கெட்டில் பெரிய அளவில் இலாபத்தினைச் சம்பாதிக்கலாம்.

கிரிப்டோ கரன்சி க்ரவுடு பண்டில் முதலீடு செய்பவர்களுக்கான வாய்ப்பாக, இடோரா கிரிப்டோ காப்பிபண்ட் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த கிரிப்டோ பண்ட் போர்ட்போலியோவில் டாஸ், எத்திரியம், ரிப்பில், லைட் காயின் & பிட்காயின் ஆகிய டிஜிட்டல் கரன்சிகள் கெட்ஜ் பண்ட் வர்த்தகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். வர்த்தக ரிப்போர்ட் ஒவ்வொரு மாதமும் வழங்குவார்கள். இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல இலாபத்தினைப் பார்க்கலாம். ஆனால், இதில் முதலீடு செய்ய குறைநதது 5000$ செய்தல் வேண்டும்.

இ-டோரா டிஜிட்டல் காப்பிபண்ட் போர்போலியோவில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், உங்களது கைவசத் தொகை என்ன எனப் பின்னூட்டம் செய்தால், நபர்களின் தொகை தோதுவானல், அனைத்தும் இணைக்கப்பட்டு எனது ஒரே அக்கவுண்டில் மொத்தமாக இன்வஸ்ட் செய்து கொடுக்கும் தொகை அவ்வாறே பிரிக்கப்படும்.
Post Reply