Bitcoin Unlimited - புதிய பிட்காயின் பூதம் BXT

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Bitcoin Unlimited - புதிய பிட்காயின் பூதம் BXT

Post by ஆதித்தன் » Wed Mar 22, 2017 4:18 pm

பிட்காயினை இரண்டாகப் பிரித்துவிட்டார்கள். தற்போதைய பிட்காயின் 1- பிட்காயின் கிளாசிக் (BTC) மற்றும் புதியது 2-பிட்காயின் அன்லிமிடட் (BXT).

Bitcoin நிர்வாகக்குழு மாற்றத்திற்குப் பின் இந்த தகவல் வெளியிடப்பட்டுவிட்டது. BXT என்ற கரன்சி கோடிற்கும் ஏற்கனவே அனுமதி கோரப்பட்டுவிட்டது.

அனைத்து தளங்களும் பிட்காயின் கிளாசிக் வாலட்களே வழங்கி வருகின்றன. புதிய பிட்காயின் அன்லிமிட்டடுக்கான வாலட் இன்னும் கொடுக்கப்படவில்லை.

பழசுக்கும் புதுசுக்குமான கோர் பிரச்சனை வருமோ என்ற அச்சப்பாட்டில் அன்லிமிடட்டுக்கான வாலட் வழங்கவில்லை என்ற தகவலை காயின்பேஸ் தளம் தெரிவித்துள்ளது.

பிட்காயின் அன்லிமிடட் மைனிங் வேகத்தினை அதிகரிக்கும் என்றும், ட்ரான்ஸ் கன்பார்மேஷன் மிக விரைவாக நடக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதற்கு ஏதுவாக ப்ளாக் லிமிட்டை அன்லிமிட்டட் ஆக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

பிட்காயினை இரண்டு வெவ்வேறு பெயர்களில் மார்க்கெட் வர்த்தகத்தில் நுழைப்பதனால் பிட்காயின் விலை ஏற்றம் என்பது சற்று தாமப்படும் என கருதுகிறேன்.

பிட்காயின் பயன்பாட்டு உபயோகத்திற்கு அல்லாமல், இலாப நோக்கில் வாங்கப்படுவதால் எப்பொழுது வேண்டும் என்றால் விலைச் சரிவினை சந்திக்கும்.

தற்போதைய பிட்காயின் விலை ரெசிஸ்டன்ஸ் பகுதியில்தான் உள்ளது என்பதனை மனதில் கொண்டு வாங்க நினைத்தால் ரிஸ்க்கையும் சேர்த்தே எழுதிக் கொள்ளுங்கள்.
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Bitcoin Unlimited - புதிய பிட்காயின் பூதம் BXT

Post by ganesh529 » Wed Mar 22, 2017 4:56 pm

this is the reason for now low bitcoin sir.is it again reduced or increase sir.in coinsecure 72500 only buy.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”