Page 15 of 15

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Tue Aug 06, 2013 11:07 am
by mnsmani
Image

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Mon Dec 02, 2013 8:13 pm
by ஆதித்தன்
1 மணி நேரத்தில் 1 டாலர் ஆபர், காத்திருக்கிறது...


அதற்குள் நான் சாப்பிட்டுட்டு வந்திடுர்றேன்...

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Wed Dec 04, 2013 9:30 pm
by mnsmani
arul.jpg
அருடப்பேராற்றல் இரவும் பகலும்.... வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் , நல் இரவு வணக்கம்

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Thu Dec 05, 2013 9:16 pm
by mnsmani
gn.jpg
இனிய இரவு வனக்கம்

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Fri Dec 06, 2013 8:01 pm
by mnsmani
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான்#உறக்கம்எனும் தூக்கமாகும்.

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றதுஎன்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர்.

இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.
'சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண்'

இதன் விளக்கம் :-இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு,பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும்.எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள்அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

‪கிழக்குதிசையில்‬ தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும்.

‪‎வடக்குதிசையில்‬ ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக்கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டைஉண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.

இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும்
இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
Image

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Tue Aug 26, 2014 10:00 pm
by mnsmani
இனிய இரவு வணக்கம், சுகமான நித்திரை, இனிதான கணவு

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Fri Oct 09, 2015 7:29 pm
by ஆதித்தன்
24 மணி நேரம் இணைய இணைப்பு இல்லாத காரணத்தில் தொடர்ச்சியாக 4 மணி நேரம் வேலை செய்தும், இன்னும் பணிகள் பெண்டிங்க் இருக்கின்றன...

விரைவில் சாப்பிட்டுட்டு வருகிறேன்...

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Fri Oct 09, 2015 10:10 pm
by marmayogi
mnsmani wrote:
arul.jpg
அருடப்பேராற்றல் இரவும் பகலும்.... வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் , நல் இரவு வணக்கம்
அருட்காப்பை பாதியிலேயே நிருத்திவிட்டீர்கள். முழுமையாக சொல்லுங்கள் .

அருட் பேராற்றல் இரவும் பகலும்,எல்லா நேரங்கலிலும்,எல்லா இடங்கலிலும்,எல்லா தொழில்களிலும்,உறுதுணையாகவும்,பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும் அமையுமாக. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்

தவம் செய்யும் போது அருட்காப்பு சொன்னால் நம்மை சுற்றி ஒரு காப்பு வளையம் உருவாகும்.

பேருந்தில் பயணம் செய்யும் போது கூட மனதிற்குள் அருட்காப்பு சொல்லும் போது நமது பயணம் சுமூகமாக அமையும் . விபத்துகள் ஏற்படாமல் தப்பித்துகொள்ளலாம். அருட்காப்பிற்கு அவ்வளவு சக்தி உண்டு

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Posted: Wed Nov 02, 2016 9:27 pm
by Aruntha
1 வருடம் கடந்த நிலையில் வந்துள்ளேன் மறுபடி