ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by rajathiraja » Wed Mar 07, 2012 10:15 pm

என் பேரு ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட.... பழைய படுகையில் போய் பார்த்துக்கங்க. ராஜா என்பது எனது புனைப்பெயர் தான். தாய்வீட்டை விட்டு விட்டு புதுமனைக்கு புகுந்து 16 வருடங்கள் ஆயிற்று. தாய்வீட்டை காண அவ்வபோது வந்து செல்லும் ஒரு விருந்தாளியாக மாறிவிட்டேன். முக்கடலுக்கு சொந்தமான ஊரிலிருந்து கடலே இல்லாத ஊருக்கு வந்திருக்கின்றேன். எப்பொழுதும் எல்லோரையும் சந்தோசமாக சிரிக்க வைக்க வேண்டும்! அதற்காக என் சோகங்களையும் சுகமாக மாற்றுகின்றேன்.

நான் நல்ல சமைப்பேன். நான் சமைத்தால் இங்கே இருக்கிற எல்லோருக்கும் பிடிக்கும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை அதில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து சமைத்தேனென்றால் வருகிறவர்கள் அனைவருமே எனக்கு கொடு! எனக்கு கொடு! என்று கேட்பார்கள். அதை அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பின் ஆறிவிட்டாலும் பாத்திரத்தில் இருப்பது காலியாகும் வரை விடமாட்டார்கள். அப்படியென்றால் என்னோட சமையல் எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க!
--ராஜா
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 6:00 pm, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by mnsmani » Wed Mar 07, 2012 10:30 pm

வாங்க வாங்க ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ரஜகுலதிலக,ராஜ கம்பிர, ரஜகுலோத்துங்க(துங்க வை விட்டுடுவேன்னு பாத்தீங்கள)மகாராஜா பராக், பராக்,பராக்(சும்மா பராக்கு பாக்காம வாங்க, இவ்ளோ சொல்ரோம்ல),எல்லாரும் அமைதியா கைதட்டுங்க :ymapplause: (சத்தமே வரப்பிடாது, ஆமா)
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by ramkumark5 » Wed Mar 07, 2012 10:36 pm

வாங்க ராஜா வாங்க. என்னடா நம்ம சிஷ்யனை காணமேனு பாத்தேன்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by rajathiraja » Wed Mar 07, 2012 10:44 pm

மணி அண்ணா!
நம்ம சமையலோட சிறப்பை பத்தி நீங்க எதுவும் சொல்லலையே?
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by mnsmani » Wed Mar 07, 2012 10:52 pm

ராஜா, அந்த ரகசியத்த சொல்ல வேணம்னு பாத்தேன்,என்ன பன்றது கேட்டுட்டீங்க, ஆமா அடிக்கிர வெயில்ல எப்படி நீங்க எல்லாருக்கும் வெண்ணீர் தர்ரிங்க. அதையும் உனக்கு எனக்குன்னு போட்டி போட்டு வாங்கி சாப்பிடுராங்கன்னா, உங்க சமையல் ஆகா, ஒகோ, பிரமாதம், ம்...ம்... நடக்கட்டும், நடக்கட்டும்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by Aruntha » Wed Mar 07, 2012 11:14 pm

சரி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் நீங்க எல்லாம் கூட்டணி போட்டு சமைச்சு எத்தின பேரை காலி பண்ணினீங்க? அத சொல்லுங்க முதல்.

இருந்தாலும் நம்ம புதியபடுகை ஆளாளுக்கு வம்புக்கிழுத்து சந்தோசமா தான் போகுது. வாழ்த்துக்கள். ராஜா சார் வாழ்த்து உங்களுக்கில்ல படுகைக்கு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 1:55 am

என்னடா.... ஆன்லைனுக்கு வந்த மனுஷன், ஒர் வார்த்தை சொல்லாமல் கொல்லாமல் போய்ட்டாரே, என்று மனம் வருந்தியது. ஆனால், இப்பொழுது வந்ததும் பதிவாளர் பெயரில் தெரிகையில் மிக்க மகிழ்ச்சி.

அதெப்படி..... அடுத்த சில தினங்களில், நான் வெந்நீர் வைப்பது எப்படின்னு... சமையலறை பக்கம் எழுதுவேன்னு தெரிந்தே.... சொன்னீர்களா?

அல்லது

படுகை வந்தால், எல்லாம் தானா வருதா???


இருந்தாலும்.. சுடு தண்ணீர் எப்படி செய்வது என்றுதான் சொல்லிக் கொடுப்பேன்.


ஹஹி.... ஹஹ்ஹ்ஹாஆஆஅ
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by rajathiraja » Thu Mar 08, 2012 3:14 am

Athithan wrote:படுகை வந்தால், எல்லாம் தானா வருதா??? ஹஹி.... ஹஹ்ஹ்ஹாஆஆஅ
நிஜமாகவே தானா வருது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:49 am

தாய்வீட்டை விட்டு பிரிந்து சென்றாலும் தாய்வீட்டை மறவாமல் விருந்தாளியாக வாவது விஜயம் செய்யும் ராஜா வாருங்கள் படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

நீங்கள் நல்லா சமைப்பீர்கள் என நம்பிகிறேன்.. என் என்றால் தண்ணீரை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்க தெரிந்திருக்கு,,,,,தண்ணீர் ஆவியாகி போகும் முன் அடுப்பை அணைத்து அந்த தண்ணீரை அனைவருக்கும் கொடுக்க தெரிந்திருக்கு.....நீங்கள் நிச்சயம் நளமகாராஜா தான்....(ஏதாவது குறிப்பு வேண்டுமெனில் என்னிடம் கேட்கவும்....கேடரிங் ஸ்டெடி பீஸ் வேண்டாம்..)
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by RJanaki » Fri Mar 09, 2012 7:58 pm

சுடு தண்ணீர் ராஜா உங்களை அன்புடன் படுகை வரவேற்கிறது.

அட சுடு தண்ணீக்கு இத்தனை ஆர்பாட்டமா

அப்ப பச்சை தண்ணீக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ராஜா தமிழ்கரார் யாவது கூட இருக்கிறார்களை,????????
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”