Page 1 of 1

கொரியாவுக்கும் தமிழர்க்கும் தொடர்பு

Posted: Sat Sep 02, 2017 8:57 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=dHuhxd5uRgs[/youtube]

வட கொரிய மக்களின் அசாத்திய சுயச்சார்பு தன்மானக் கொள்கை தமிழர்கள் பண்போடு தொடர்பு கொண்டதுபோல உள்ளதே என்ற ஒர் கோணம் என் மனதில் பல விடயங்களின் மூலம் எழுந்திருந்தது. தற்பொழுது அது உண்மை என்ற கருத்து வெளிவந்துவிட்டது,

கொரிய மக்கள் வணக்கும் சுரோ என்ற மன்னனின் மனைவி, ஆயுக்த என்ற இடத்திலிருந்து நமது கன்னியாகுமரி பகுதியிலிருந்து கொரியாவுக்கு கடல் வழியாக பயணம் சென்ற தமிழச்சி செம்பவளம்.

கொரிய பெண் கடவுள் செம்பவளம் என்ற ஒர் பெண்.

செம்பவளத்தினை அவர்கள் கடவுளாக வணக்கம் செலுத்தினார்கள் என்றுச் சொன்னால், கண்டிப்பாக தமிழர்களின் அறிவார்ந்த மக்கள் அறிந்த சித்து வேலைகளில், அவள் தனக்கு தெரிந்த சித்து வேலைகள் பலவற்றினை அங்கு காட்டியிருப்பாள் என்பது உறுதி.

உலகை தமிழ் ஆளப்போவது என்பது உறுதி. உலகின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மீண்டும் பஞ்சபூதங்கள் மையப்பாடாக அமையப்போவதும் உறுதி.

Re: கொரியாவுக்கும் தமிழர்க்கும் தொடர்பு

Posted: Mon Oct 09, 2017 2:21 pm
by VALAIGNAN
தென்னாசியா நாடுகள் பலவற்றுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் அதிகம்... நாம் அப்பா என்போம்... கொரிய மொழியில் அப்புச்சி என்பார்கள்... தாய்லாந்தில் பயன்படுத்தும் நாட்காட்டி நம் தமிழர் திங்கள் (மாதம் - சமசுகிருதம்) வார்த்தைகளின் தொடர்புகளுடையது...

ஆனால் நாமோ சைத்ரா விலிருந்து பங்குனா வரை உள்ள சமசுகிருத நாட்காட்டியினை தமிழர் நாட்காட்டி என்று கூறி வருகிறோம்..